ஸாதரணமாக இப்படிப்பட்ட தள்ளுபடி வஸ்துக்களுக்குத்தான் புத்தியைப் பிடித்து வசப்படுத்தி வைத்துக் கொள்கிற சக்தி இருக்கிறது. “அது இல்லாட்டா முடியாது” என்று என்னமோ பைத்தியம் பிடித்த மாதிரிப் பண்ணி, எந்த வேலையுமே ஓடாமல், இந்த மனோபளுவினாலேயே தலைவலி, அஜீர்ணம் என்றெல்லாம் இந்த வஸ்துக்கள்தான் உண்டாக்குகின்றன. அந்த வஸ்துவுக்கு இவன் அடிமை ஆகிவிடுகிறான். ‘Addict’ என்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு அளவு என்று நிறுத்திக் கொள்ள முடியாமல் எப்போது பார்த்தாலும் அந்த ஸாமானுக்கே ஆசை ஏற்படுகிறது. குடிப் பழக்கமுள்ளவன், புகையிலை மெல்லுகிறவன், அதையே ‘ஊதுகிறவன்’ எல்லாரும் இப்படித்தான். அபின், கஞ்சா முதலான லாஹிரி வஸ்துக்கள் எல்லாம் இப்படி மநுஷ்யனை அதே பைத்தியமாக அடிக்கிறவைதான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Normally, food items that are prohibited have the capacity to capture and hold one’s mind in their control. Such substances make one feel that he cannot do without them, making him incapable of doing any work without having the item. The mental stress that develops, result in headache, indigestion etc. The person becomes a slave of these – becomes ‘Addicted’ to these food items. The mind is not able to control the intake and constantly keeps yearning for it. People who smoke, drink, and consume tobacco, all come under this category. Items like Ganja and Abin [a drug], fall under this category and make a person lose his sense of balance. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply