Jaya Jaya Sankara Hara Hara Sankara – In the final part of this chapter, the absolute power of Kamakshi is illustrated by Sri Periyava in the form of Sri Chakram and all the divine devathas and siddhas around it.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer who wish to remain anonymous for the translation. Rama Rama
காமாக்ஷியின் பெருமை (Part 4)
அம்பாளின் மகிமையை ஸெளந்தர்ய லஹரியில் ஆசாரியாள் சொல்கிறார்: “அம்மா, ஒன்பது சுற்றுப் பிரகாரங்களை உடைய வாஸஸ்தானத்தில் உள்ளுக்குள்ளே அந்தப்புரத்தில் பரப்பிரம்ம ஸ்வரூபமான பரமேசுவரனுடன் நீ சேர்ந்திருக்கிறாய். அந்தப்புரத்துக்கு அருகில் வரவே எவருக்கும் யோக்யதை இல்லை. வெளியிலே ஒன்பது சுற்றுகளையும் தாண்டியிருக்கிற வாசலில்தான் மகா பெரிய இந்திராதி தேவர்களும் காத்துக் கிடக்கிறார்கள். அந்த வெளி வாசலில் காவல் செய்கிற அணிமா முதலிய ஸித்திகளே இந்த இந்திராதி தேவர்களுக்கு அஷ்டமகா ஸித்திகளைக் கொடுத்து விடுகிறார்கள் என்கிறார் (புராராதே: அந்த: புரமஸி)
இந்த ஒன்பது கட்டு அரண்மனைதான் ஸ்ரீ சக்கரம் என்கிற அம்பாள் இயந்திரம். ரூபமே இல்லாத பராசக்தி திவ்விய மங்கள் ஸ்வரூபத்துடன் அவயங்களோடு காமேசுவரியாக வந்த மாதிரி இந்த எந்திர ரூபத்திலும் இருக்கிறாள். பார்த்தால் ஏதோ கோடுகளும், கோணங்களுமாகத் தெரியும். ஆனால் இது அம்பாள் உருவமே. சில சப்தங்களுக்குத் தெய்வீக சக்தி இருப்பதால் அவற்றை ‘மந்திரம்’ என்கிறோம். இப்படியே சிலவிதமான கோடுகள் கோணங்களைக் கொண்ட சித்திரங்களுக்கு (DIAGRAM) தெய்வீகமான சக்தி உண்டு. இவற்றை ‘யந்திரம்’ என்கிறோம். அம்பாளின் பலரூபங்களில் ஒவ்வொன்றுக்கும் ஒரு மந்திரம் உண்டு; காமேசுவரி அல்லது காமாக்ஷி என்கிற லலிதையாக உள்ளபோது, அவளுடைய மந்திரம் ஸ்ரீ வித்யா; யந்திரம் ஸ்ரீ சக்கரம். ஸ்ரீ சக்கரத்தில் ஆவரணங்கள் என்கிற ஒன்பது சுற்றுகள் இருக்கின்றன. அவற்றின் நடு மையத்தில், திரிகோணத்தில் மத்ய ஸ்தானமாக உள்ள பிந்து என்கிற புள்ளி ஸாக்ஷாத் பராசக்தி. மற்ற ஆவரணங்கள் இதைச் சுற்றி சுற்றி உள்ள கோட்டைகள் மாதிரி. சிருஷ்டி முழுவதும் பிறந்த மூல முக்கோணமான அந்தப்புரத்தில் பரப்பிரம்மமாகிற காமேசுவரனோடு சேர்ந்து காமோசுவரியாக இருக்கிறாள் பராசக்தியான காமாக்ஷி. அவளே பூரண சக்தி. வெளியில் ஒன்பது ஆவரணங்களிலும் சுற்றி சுற்றிப் பல்வேறு தேவதைகள் இருக்கிறார்கள். இவர்களெல்லாம் பராசக்தியின் அம்சங்கள். இவர்களுக்கும் ஒவ்வொருவித சக்தி உண்டு. எல்லாவற்றுக்கும் வெளியே உள்ள ஆவரணத்தில் அணிமா முதலிய எட்டு தேவதைகள் காவல் இருக்கிறார்கள்.
ஸித்தர்கள் என்று சிலரைச் சொல்கிறோம். அவர்கள் இயற்கைக்கு அதீதமான அற்புதங்களைச் செய்கிறார்கள். இப்படி அற்புதம் செய்கிற ஸித்திகளை அணிமா முதலிய எட்டு தேவதைகள் அநுக்கிரகம் செய்கிறார்கள். இவற்றை “அணிமாதி ஸித்தி” என்பார்கள். தன் சரீரத்தை அணு மாதிரி சின்னதாக்கிக் கொள்கிற ஸித்தி ‘அணிமா’: எத்தனை மகா பெரிய ரூபமும் எடுப்பது ‘மஹிமா ஸித்தி’: பஞ்சைவிட லேசாகி லகுவாகப் பறப்பதற்கு ‘லகிமா’ என்று பேர். ‘ப்ராப்தி’ என்கிற ஸித்தி ஒருத்தருக்கு ‘ப்ராப்தி’யானால் அவர்தான் நினைத்த எதையும் சென்றடைய முடியும். ‘ப்ராகாம்யம்’ என்பது எவருக்கும் வெல்லமுடியாத இச்சா சக்தியைத் தருகிற ஸித்தி; ‘ஈசித்வம்’ என்பது ஈசுவரத்வம் – அதாவது அடக்கி ஆளுகிற ஆற்றலைக் கொடுக்கும் ஸித்தி; ‘வஸித்வம்’ என்பது எவரையும் வசப்படுத்துகிற சக்தியைத் தரும் ஸித்தி. இந்த ஏழு ஸித்திகளுக்கும் மேலே உள்ளது, தன் மனசையே வசப்படுத்தி அடக்குவது. மற்ற ஸித்திகளால் நல்லதும் செய்யலாம்; கெட்டதும் செய்யலாம். ஆனால், நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் மேலே போய் பரம சாந்தமாக இருப்பதே மற்ற எந்த ஸித்தியாலும் சாதிக்க முடியாத பேரானந்தத்தைத் தருவது. மனசு அடங்கினால்தான் இதைப் பெற முடியும். இதற்கு ஆசைகள் அடங்க வேண்டும். இப்படி ஆசைகளை அடக்குவது ‘காமாவஸாயனம்’ என்ற கடைசி ஸித்தியாகச் சொல்லப்படுகிறது. தாயுமானவர்கூட, ‘மற்ற இந்திர ஜால வித்தை எல்லாம் செய்துவிடலாம்: ஆனால் சிந்தையை அடக்கிச் சும்மா இருக்கும் திறம் அரிது’ என்று இதைத்தான் மிகவும் பிரமிப்பான ஸித்தியாகச் சொல்கிறார். இப்படித் தங்களுக்கென்று ஆசையில்லாமல் வைராக்கியத்தைப் பெற்றுவிட்ட மகான்களும்கூட, லோகோபகாரமாக மற்ற ஸித்திகளை உபயோகப் படுத்தலாம். இப்படிப் பல ஸித்தர்கள் – பதினெண் சித்தர்கள் என்றுகூட ஒரு கணக்குச் சொல்வதுண்டு – இருந்திருக்கிறார்கள். அவர்கள் செய்த அநேக காரியங்கள் பைத்தியம் மாதிரி இருக்கும். ஆனால் வாஸ்தவத்தில் ஸர்வ ஜனங்களிடமும் பிரியத்தோடு லோக க்ஷேமத்துக்காகவே சித்து விளையாட்டுச் செய்து கொண்டிருந்தார்கள்.
இப்படிப்பட்ட பிரம்மிப்பூட்டுகிற ஸித்திகளைத் தருகிற தேவதைகள்கூட, சாக்ஷாத் பராசக்தியின் அந்தப்புரத்துக்கு வெகு தூரத்திற்கு வெளியே நிற்கிற காவலாளிகள்தாம் என்று சொல்வதிலிருந்து அவளுடைய மகிமையை ஊகிக்கலாம்.
இப்படிப்பட்ட அம்பாளின் சக்தி, சில சமயங்களில் சில இடங்களில் ஜனங்கள் தாங்க முடியாதபடி பொங்கிக் கொண்டு வெளிப்படுகிறது. ஆதியில் திருவானைக்காவலில் அகிலாண்டேசுவரியின் சக்தி இப்படித்தான் ரொம்பவும் உக்கிரமாக இருந்தது. அப்போது சாக்ஷாத் பரமேசுவர அவதாரமான ஆசாரியார் ஸ்ரீ சக்கரமாகவும் சிவ சக்கரமாகவும் இரண்டு தாடங்கங்ளைச் செய்து, அவற்றிலேயே அம்பாளின் அதீதமான சக்தியை இழுத்து வைத்து சமனப்படுத்தி அவற்றை அம்பாளுக்கே அணிவித்தார். காஞ்சிபுரத்தில் ராஜராஜேசுவரியான காமாக்ஷியின் சக்தி உக்கிரமாக இருந்தபோது அதே ஆசாரியாள் அந்த உக்ர கலையை அவளுடைய எதிரிலேயே ஒரு ஸ்ரீ சக்கரம் ஸ்தாபித்து, அதில் ஆகர்ஷித்து வைத்து அடக்கினார். அன்றிலிருந்து அம்பிகையும் பரம ஸெளம்ய மூர்த்தியாகிவிட்டாள். எல்லோருக்கும் கருணா கடாக்ஷம் செய்து வருகிறாள்.
___________________________________________________________________________________________________________________________
Kamakshi’s Splendour (Part 4)
Sri Adi Sankara describes the glory of Ambal thus: ‘Mother! In your abode, there are nine prakarams (passage for performing pradakshinam). You reside in the innermost chamber, along with Parameshwara. No one is eligible to come anywhere near this chamber. Indra and other devathas wait outside your abode, beyond the nine prakarams. The eight Sidhis, Anima, Mahima and others guard the outermost entrance of the abode of Parashakti. These Sidhis are themselves capable of granting all the wishes of Indra and other Devatas.’purarateh antah puramasi’. (Soundarya Lahari – sloka -95).
This nine layered palace is the Sri Chakram – the ‘yantra’ of Ambal. This yantra represents the formless Parashakti who appeared in the auspicious form of Kameshwari. She is present in it. The Sri Chakram is made up of lines and angles. But it is Ambal’s roopam itself. Some sounds have divine powers. We call these sounds mantras. Likewise, some diagrams with lines and angles have divine powers. These are called yantras. A specific mantra is associated with each form of Ambal. When She takes the form of Kameshwari – also known as Kamakshi or Lalita – Her mantra is ‘Srividya’; the yantra is ‘Sri Chakram’. The Sri Chakram has nine layers called Avarana(s). At the centre of the innermost triangle lies the centre point of the Sri Chakram. This point is Parashakti Herself. The other layers around this point are like the concentric walls of a fort. The central triangle is the base for all creation. Here, Kamakshi is present as Kameshwari, along with Kameshwara. She is the source of everything in this universe. Many Devatas are present in the nine outer layers. They represent the various aspects of Parashakti. Each of these Devatas has certain powers. Guarding the outermost layer of the Sri Chakram are the Ashta Sidhhis – Anima (अणिमा), Mahima (महिमा), etc.
We refer to some people as Sidha(s) (सिध्दाः). These people are capable of performing miracles that are extraordinary in nature. They are blessed with these powers by the eight devatas such as Anima. The miracles are referred to as ‘Animadhi Sidhhi (अणिमादि सिध्दि). The power to make oneself as small as the atom is Anima Siddhi. The power to make oneself very big in size is called Mahima Sidhi. Capacity to become as light as cotton and be able to fly is Lagima (लघिमा). Power to acquire anything one desires is Prapthi (प्राप्ति). Praakaamyam (प्राकाम्य) refers to the capacity of having desires that cannot be defeated by anyone. Eshithvam (ईशित्वम्) gives the capacity to rule over everyone. Vashithvam (वशित्वम्) is the capacity to win over everyone. Beyond these seven sidhis is the one that is capable of winning over the mind and controlling it. The other sidhis may bring about results that could be good or bad. The last one goes beyond good and bad. It achieves the ultimate goal of peace and joy. This sidhi can be achieved only if the mind is controlled and the desires die out. This is achieved by the last sidhi called ‘kaamaavasaayanam’ (कामावसायनम्).Thayumana Swamigal says: “We can achieve many things. But it is very difficult and rare to subdue the mind and remain calm”. He thus speaks of this sidhi as the most difficult to achieve. Mahans who have subdued their desires, utilize the other sidhis to do good to the world at large. Many such Sidhas – there are said to be eighteen of them – have lived (in this land). Many of their actions might appear eccentric. But in reality they did everything with love and for the welfare of others and the world.
Even the Devatas who are capable of granting these amazing sidhis remain far away from the chamber of Parashakti, only as guards at the outermost layer of the Sri Chakram. This itself tells us about her greatness.
Sometimes, in some places, Ambal’s power pours out in a manner that people are not able to face. In the early ages, at Tiruvanaikkaval, Akhilandeshwari’s power was very aggressive. Then, Sri Adi Sankara, who is an avatar of Parameshwara, prepared two Tatangams (ear ornaments), the Sri Chakram and Siva Chakram. He channelized her power into these Tatangams and calmed Her. He then adorned Her with these Tatangams. In Kanchipuram, Kamakshi’s power too was aggressive. Adi Sankara established a Sri Chakram in front of Her. He channelized Her power into the Sri Chakra and subdued it, Since that day, Devi Kamakshi has been peaceful, granting her compassionate blessings to everyone.
Categories: Deivathin Kural
Leave a Reply