Periyava Golden Quotes-837


குடி கூடாது, அது புத்தியைக் கெடுக்கும், குடியையும் கெடுக்கும். முற்காலத்தில் குடிப்பதற்கு அநுமதி பெற்ற ஜாதியாரும் இப்போதைய ‘ஸெட்-அப்’பில் அந்தப் பழக்கத்தை விடுவதுதான் நல்லதாகிறது. இதனால், காந்தீயவாதிகள் சொல்கிற மதுவிலக்கை ஆதரித்து ஸ்ரீமட தர்மத்தொண்டு ஸபையும் அறிக்கைகூட விட்டிருக்கிறது.

நாம் வேதத்தையும் அதை அநுஸரித்து ஏற்பட்டுள்ள தெய்வ வழிபாட்டு நூல்களான ஆகமத்தையும் பின்பற்றுகிற தமிழ் மதஸ்தர்கள். இந்த வேதம், ஆகமம் இரண்டுமே மதுவிலக்கை விதித்திருக்கின்றன. ஆதலால் மத ரீதிப்படி நாம் குடிக்காமலிருக்கவே கடமைப்பட்டிருக்கிறோம் என்று எடுத்துக்காட்டி இப்படி அறிக்கை விட்டு, துண்டு பிரசுரமாக விநியோகித்தோம். ஸமூஹப் பிரச்னையாகவும் குடும்ப வாழ்க்கை விஷயமாகவும் காந்தீயவாதிகள் சொல்லும் மதுவிலக்குக்கே, அந்தக் காரணங்களையும் ஒப்புக்கொள்வதோடு, மத உணர்ச்சியை முக்யமாக வைத்து இன்னம் weight கொடுத்து இப்படிச் செய்தோம். இதன்படி நடப்பதாக ஜனங்கள் ஸம்மதச் சீட்டு அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டோம். அப்படிச் செய்கிறவர்களுக்கு மடத்துப் பிரஸாதம் அனுப்பவும் ஏற்பாடு செய்தோம்.      – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

One should keep away from the habit of drinking since it spoils the mind and the family. Even those who have the permission to consume alcohol since olden days should, in the present set up, get rid of the habit. The Service Wing of the Sri Matam has declared that it is in support of prohibition put forth by the supporters of Gandhi. We Tamizh people follow the Vedas and the Agamas. Both the Vedas and the Agamas have advocated prohibition. We published and distributed pamphlets explaining that we are bound by our religion to shun alcohol consumption. We acknowledged the principles of Gandhi that says drinking affects the family and the society; giving additional weight to the argument, we cited the religious angle too and published the pamphlets. We requested the public to send us a note accepting our appeal and made arrangements to send prasadam from the Sri Matam to these people. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: