இப்போது ஆபீஸ், குடியிருப்பு எல்லாவற்றிலும் எல்லா ஜாதியாரும் முன்னைவிட நெருங்கி வாழும்படியாகியிருக்கிறது. பிராம்மணாசாரங்களை மற்றவர்கள் முடிந்தமட்டும் எடுத்துக் கொள்வதே இதுவரை வழக்கமாயிருந்திருக்க, இப்போது பிராம்மணன் மற்றவர்கள் பண்ணுகிற மாதிரித் தானும் செய்வதாக ஏற்பட்டிருக்கிறது! புலால் உணவுக்காரர்களுடன் நெருக்கமாக வாழ்வதால் மரக்கறி உணவுக்காரர்கள் அந்த வழக்கத்தை எடுத்துக் கொண்டு விடப் போகிறார்களே என்று பயமாக இருக்கிறது. அவ்வப்போது ஒவ்வோரிடத்தில் இப்படிக் கேள்வியும் படுகிறோம். ஆனால் இன்னமும் நிலைமை கை மீறி விடவில்லை. இந்தியாவில் மட்டும் எல்லா ஜாதி ஜனங்களும் …. நினைத்துப் பார்க்கவே கஷ்டமாயிருக்கிறது …. நான்-வெஜிடேரியன்களாகி விட்டார்களென்றால் லோகத்துக்கே ஒரு பெரிய ‘ஐடியல்’ நஷ்டமாகிவிடும். அப்புறம் அதை ஒரு காலத்திலும் ஈடு செய்யவோ அதற்குப் பரிஹாரம் காணவோ முடியாது. இன்றைக்கும் நமக்கு ஏதாவது துளிப் பெருமை ஒட்டிக் கொண்டிருக்கிறதென்றால், அது லோகத்திலேயே மிகப் பெரிய ஜனஸமூஹம் வெஜிடேரியன்களாக உள்ள தேசம் நம்முடையதுதான் என்பதே. ஹிந்து என்றால் அஹிம்ஸாவாதி என்றே லோகத்தில் இன்னமும் பரவலாக நல்லபிப்ராயம் இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
These days, job compulsions and housing patterns have made people of all castes live close to one another. Earlier, others used to emulate the aacharams of the Brahmins; these days it is the reverse! I am afraid that vegetarians too may opt for non-vegetarianism because of this association with non-vegetarians. We do hear about such cases, but it has not gone out of our hands. The thought of all Indian people becoming non-vegetarians is difficult to imagine and will result in the loss of one of the biggest ‘ideals’ of the world. If that happens it can never be compensated or a solution obtained. If there is one small thing we can be proud of today, it is that the majority of our large population are vegetarians. There is a positive opinion in the world that being a Hindu is synonymous with following Ahmisa (non-violence). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply