Periyava Golden Quotes-830

ஒரு திருஷ்டாந்தம் சொல்வதுண்டு. ஒரு காடு இருந்ததாம். அதன் பக்கத்தில் ஒரு பெரிய நதி, ஒரு சின்ன குட்டை இரண்டும் இருந்தனவாம். காட்டிலே தீப்பிடித்துக் கொண்டதாம். அப்போது பலமான காற்று சேர்ந்து கொள்ளவே எரிகிற சருகுகள், விறகுத் துண்டுகள், மண் எல்லாம் அடித்துக் கொண்டு வந்து குட்டையிலும் விழுந்ததாம்; நதியிலும் விழுந்ததாம். குட்டையை மண்ணும் செத்தையும் பாதி அடைத்தது என்றால் பாக்கி பாதி அப்படியே அந்த உஷ்ணத்தில் வற்றி, மொத்தத்தில் குட்டை இருந்த இடம் தெரியாமல் ஆகிவிட்டது. மஹா நதியில் விழுந்த குப்பைக் கூளங்களை, அவை பற்றி எரிந்து கொண்டிருந்தாலும் அதன் பிரவாஹமே அணைத்து அடித்துக் கொண்டுபோய் ஸமுத்ரத்தில் விட்டு இருந்த இடம் தெரியாமல் பண்ணிவிட்டது. குப்பை குட்டையை இல்லாமல் பண்ணிற்று; நதியோ குப்பையை இல்லாமல் பண்ணிவிட்டது. இந்த மாதிரியான தோஷமாகத் தெரிகிற சில பழக்க வழக்கங்கள் பூர்வ காலத்தில் வீர்யத்தோடிருந்தவர்களைச் சேர்ந்தபோது அந்த தோஷம் அவர்கள் சக்தியில் அடிபட்டுப் போயிற்று; பலஹீனர்களான நாம் அந்த வழக்கங்களை கைக்கொண்டாலோ தோஷம் நம்மை அடித்துப் போட்டுவிடும். அவர்களுடைய சக்தி நமக்கு இல்லாததால், கலியுகத்தில் எப்படி இருக்கணுமென்று அவர்கள் சட்டம் போட்டுக் கொடுத்திருக்கிறார்களோ அதற்கு அடங்கித்தான் நாம் நடக்கணும். ‘அல்டிமேட்’டாக அஹிம்ஸா போஜனத்துக்குப் போகத்தான் எல்லாரும் முயற்சி செய்யணும் என்பதே நமக்கான தர்மம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

An example is cited. There was a forest. Near that forest were a big river and small pond. One day the forest caught fire. With powerful wind blowing, sand, burning twigs, dry leaves, etc. fell into the small pond and the mighty river. The sand, twigs, and dry leaves filled the pond and the heat dried up the remaining water thereby making the pond non-existent. Though the debris fell into the river too, the force and flow of the river not only extinguished the fire and cleared the debris but pushed it all the way into the sea. The debris ruined the pond but the river destroyed the debris. Similarly, habits that were supposedly followed by ancient people but not agreeable to us got nullified by their powers. If weaker people like us try to follow those habits, they will destroy us. Since we do not have that power, we need to follow the dharma that was established for Kali Yuga and adhere to it. ‘Ultimately’, we all should strive to move towards Ahimsa food which is our dharma. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: