Periyava Golden Quotes-825

‘ஆதியில் பிராம்மணர்கள் நான்-வெஜிடேரியன்களாகத்தான் இருந்தார்கள்; ரிஷிகள் அந்நிய பதார்த்தம் சாப்பிட்டிருக்கிறார்கள்’ என்றெல்லாம் சொல்லக் கேட்கிறோம். இப்படிச் சொல்கிறவர்கள் சாஸ்திரங்களைப் பார்த்து அந்நிய பதார்த்தம் என்று எந்தெந்தப் பெயர்களைச் சொல்கிறார்களோ அதெல்லாமே அநேக காய்கறிகள், மூலிகைகள், தான்யங்கள் ஆகியவற்றின் பெயர்தான் என்று நம்மில் சாஸ்திராபிமானமுள்ள ஆசார சீலர்கள் காட்டுகிறார்கள். ‘கல்யாண்’, ‘கல்யாண் கல்பதரு’ என்று கோரக்பூரிலிருந்து பத்திரிகை போடுகிறவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த விஷயமாக நிறைய எழுதி, எந்தக் காலத்திலும் எவருக்கும் நம் சாஸ்திரங்கள் மாம்ஸ போஜனத்தை அங்கீகரிக்கவேயில்லையென்று வாதம் பண்ணி வருகிறார்கள். அச்வமேதத்தில் ஒரு குதிரையை அங்க அங்கமாக ஆஹுதி பண்ணியதாக நாம் நினைப்பது கூட வாஸ்தவத்தில் அந்தந்தப் பெயருள்ள மூலிகையின் இன்னின்ன பாகத்தைப் போடுவதுதான் என்று எழுதியிருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

We hear people say that in olden days Brahmins used be non-vegetarians and Rishis too used to eat other kinds of food. The names of the food items cited as non- vegetarian are, in fact, names of vegetables, grains, herbs, etc; people who are knowledgeable in our Sastras have given this clarification. There are a couple of magazines called ‘Kalyan’ and ‘Kalpatharu’ published from Gorakhpur Press. They have written a lot on this subject and emphasized that our Sastras never permitted non- vegetarian food. They have also stated that references regarding sacrificing of the various body parts of a horse during Aswamedha Yaga actually refers to the various parts of different herbs and not the horse itself. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: