அந்தக் காலத்தில் ‘அக்ரிகல்ச்ச’ரே (வ்யவஸாயமே) தெரியவும் தெரியாது. அதனால் வில்லையும் அம்பையும் வைத்துக் கொண்டு வேட்டையாடி மாம்ஸ போஜனம் செய்ய வேண்டியதாகவே இருந்தது. பாரம்பரியமாக அது மநுஷ்யனின் இயற்கையில் ஊறிப் போய்த்தான் பிற்காலத்தில் ஓரிடத்தில் ‘ஸெட்டில்’ ஆகி, ‘அக்ரிகல்ச்சர்’ தெரிய ஆரம்பித்த பின்பும், கூடவே மாம்ஸ போஜனமும் தங்கி விட்டது’ என்கிறார்கள். இது ஸரியோ, தப்போ, அவ்வளவு எனக்கு ஆராய்ச்சி தெரியாது. ஆனாலும் லோகம் பூராவும் மாம்ஸ போஜனம் விடாமல் இருந்து தான் வருகிறது. இதைத்தான் ஒப்புக் கொண்டு, – மனஸுக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் யதார்த்த நிலைமையென்றிருக்கிறதே அதை ஒப்புக்கொண்டு – அதிலிருந்துதான் லக்ஷ்யமான ஆதர்ச நிலைமைக்குப் போக வேண்டுமென்று நம் சாஸ்த்ரகாரர்கள் வர்ணாச்ரம விபாகத்திலே இன்னின்னார் மாம்ஸ போஜனம் பண்ணலாம், இன்னின்னார் பண்ணக் கூடாது என்று வைத்தார்கள். சிலர் பண்ணலாம் என்று வைத்ததால் அப்படியேதான் அவர்கள் சாச்வதமாக பண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டதாக அர்த்தமில்லை. இவர்களும் போகப்போக, வயஸு ஏற ஏற இதை விட்டு விட்டு ஸாத்விகமான சைவ ஆஹாரத்தை மேற்கொள்ள வேண்டுமென்பதற்கு வழி வகுத்திருக்கிறார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
In olden days people were not aware of the process of agriculture. So they had to hunt for food with bow and arrow and had to necessarily consume meat. There is a view that this became an inherent habit in man, though over time he settled down in one place and started doing agriculture. But the habit of eating meat stayed on. I do not know if this view is right or wrong as I do not know much about the research. But the world has continued to consume meat. Whether one likes this habit or not, our Sastras accepted this fact and defined rules to enable a person progress to the higher state. Within the Varnashrama Dharma, they specified who can eat meat and who should not. If Sastras approve that certain people can eat meat it does not mean that such people can continue that habit forever. Methods have been prescribed whereby with the passage of time and age these people can also abstain from meat and start taking Sathvik food. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply