சாக போஜனத்துக்குப் பலம் இல்லாமலில்லை என்பதற்கு இன்னொன்றும் சொல்கிறேன். சிங்கம், புலி மாதிரி ரொம்பவும் பலமுள்ள எந்த ‘கார்னிவோரஸ் அனிம’லை [மாம்ஸம் சாப்பிடுகிற மிருகத்தை] எடுத்துக் கொண்டாலும் அது ஆஹாரமாகச் சாப்பிடுகிற பிராணி எப்படியிருக்கிறது என்று பாருங்கள். இது [சாப்பிடப்படும் பிராணி] சாக பக்ஷிணியாகத்தானிருக்கும். மாம்ஸ பக்ஷிணிகளான சிங்கமும் புலியும் சாக பக்ஷிணிகளான ஆடு, மாடு, மான் போன்றவற்றைத்தான் தின்னும்; இன்னொரு மாம்ஸ பக்ஷிணியைத் தின்னாது. சிங்கமும் புலியும் ஒன்றையொன்று அடித்துக் கொண்டு சாகலாம்; ஆனாலும் இவற்றில் ஒன்றின் மாம்ஸத்தை இன்னொன்று தின்னாது. இதிலிருந்து மாம்ஸ பக்ஷிணிகளின் பலத்துக்கும் (அவை தின்கிற சாக பக்ஷிணிகளின் த்வாரா) காரணமாயிருப்பது புல்லும், தான்யமும், மட்டையுந்தான் என்று தெரிகிறதல்லவா? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
I will tell give another example to emphasize that vegetarian food does not lack strength. Look at carnivorous animals like lion and tiger. They eat only meat; but look at the animal they consume as food. The animal that is consumed will be vegetarian. Carnivorous animals like lion, tiger, etc. eat vegetarian animals such as goat, cow, deer, etc. They will not eat another carnivorous animal. A lion and tiger may fight with each other and die, but one won’t eat the meat of the other. From this we can conclude that the power of carnivorous animals is also derived from grass, grains, etc. (through the animals they eat). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply