51. Sri Sankara Charitham by Maha Periyava – Not Nothingness; Only Complete Sathchith!

Jaya Jaya Sankara Hara Hara Sankara – What happens when the mind is destroyed? Will there be nothing or will something remain? If so, what is that something? Sri Periyava explains masterfully.

Many Jaya Jaya Sankara to Shri ST Ravikumar the translation and Smt. Sowmya for the sterling drawing and audio. Rama Rama


சூன்யமில்லை; ஸச்சிதானந்த பூர்ணமே!

‘ஒண்ணுமே இல்லேன்னா சூன்யமா? கடைசியிலே சூன்யமாவாப் போறது?’ என்று யோசிக்காதே. சூன்யமே இல்லை. அப்போதும் ஆத்மாதான் இருக்கிறதே! நீ நிஜமான நீயாக இருக்கிறாயே, இது எப்படி சூன்யமாகும்? மனஸ் போன (அழிந்த) பிறகே அடையக் கூடிய அந்த நிலை எப்படி இருக்குமென்று மனஸுக்குப் புரிய வைக்கவே முடியாது. இருந்தாலும் அத்வைதப் புஸ்தகங்கள் கொஞ்சத்தில் கொஞ்சம் புரிய வைக்கப் பார்க்கின்றன. என்ன சொல்கின்றனவென்றால்: தூக்கத்திலும் மயக்கத்திலுங்கூட நீ ஆத்மாவாக இருந்து கொண்டிருந்தாலும், உனக்கு ‘ஸத்’ என்ற அந்த இருப்பு நிலை தெரியவில்லை, இல்லையா? ஞான மார்க்கத்தில் ஸாதனை பண்ணி நீ நிஜமான ஆத்மாவாயிருக்கும் ஸமாதியிலோ ஸத்தாக இருப்பதைப் பூர்ணமாகத் தெரிந்து கொண்டு, அநுபவித்துக் கொண்டு அப்படி இருப்பாய். பாக்கியுள்ள ஸகலமும் இருக்கிறதாகத் தெரிந்தாலும் என்றைக்கோ ஒரு நாள் இல்லாமல் போகப் போகிறவைதான். இந்த ஆத்மா மட்டுமே, தாற்காலிகமான அந்த எல்லா வ்யவஹார ஸத்யங்களுக்குங்கூட ஆதாரமாக, சாச்வதமாக உள்ள ஒரே ஸத். அப்படிப்பட்ட ஸத்யமே நாமென்ற பூர்ண ப்ரஜ்ஞையோடு இருப்பாய். இப்படிச் சொன்னதாலேயே அப்போது நீ ஞானத்தோடு அதாவது ‘சித்’ப்ரகாசத்தோடு இருக்கிறாயென்று தெரிகிறது. சித்தோடு கூடி, சித்தினால் ஸத்தை நீ அறிகிறாய் என்று இதற்கு அர்த்தம் பண்ணிக் கொண்டால் ஒரே தப்பாகிவிடும்! அத்வைதம் போய் த்வைதம் வந்துவிடும். ஏனென்றால் அப்போது ‘ஸத்’தென்ற உன் ஸ்திதி ஒன்று, அதற்கு வேறாக இருந்து கொண்டு அதை அறிகிற ‘சித்’தென்று இன்னொன்று என்று இரண்டு ஸமாசாரம் வந்துவிடும். உபத்ரவ ஹேதுவான இரண்டாவது ஸமாசாரமில்லாமல் பண்ணிக் கொண்ட நிலைதான் இது (ஸமாதி) என்று சொல்லிவிட்டு இப்படி, (ஸத், சித் என்று இரண்டு இருப்பதாகச்) சொன்னால் தப்புத்தானே? ஆகையால், அப்போது அந்த ஸத்தும் சித்தும் கூட ஒன்றாகவே ஆனவைதான். நீ சித்தோடு கூடி ஸத்தை அறியவில்லை. சித்தாகவே இருக்கிறாய். ஸத்தும் சித்துமாகிய ‘ஸத்சித்’தாக இருக்கிறாய். ஸத்-சித்தாக இருப்பதோடு, மனஸினாலே வருவித்துக் கொண்ட அத்தனை வித ஸம்ஸாரக் கட்டும் அறுபட்டுப்போன அந்த பரம ஸ்வதந்திரமான நிலை ஆனந்தமாக-பேரானந்தமாக-இருக்கும். சூனியமாய்ப் போவதில்லை; ஆனந்த மயமாக இருப்பதாயிருக்கும். வெளியிலிருந்து வராமல், ஆகையால் வெளி பாதிப்புகளுக்கு ஆளாகாமல், தன்னிலிருந்தே, தான் நன்றாக இருப்பதிலேயே ஏற்படும் சாச்வத ஆனநதம்! வெளியிலிருந்து மனஸினால் பெற்ற ஆனந்தம் எல்லாமும் இந்த ஆனந்த ஸாகரத்தின் ஓரொரு திவலைதான். ‘ஸச்சித்’துக்கு வெளியிலிருந்து வருகிற ஆனந்தமாயிருந்தாலும், சற்று முன் சொன்னபடி, த்வைதம் வந்துவிடுமாதலால், ஸத்-சித்-ஆனந்தம் எல்லாமே ஒன்றுதான். நீ இப்படி ஸத்-சித்-ஆனந்தமாக இருக்கும் பரிபூர்ண நிலைதான் பந்தத்திலிருந்து விடுபட்ட மோக்ஷ நிலை. சூன்யம் இல்லவேயில்லை.

____________________________________________________________________________________________________________________________

Not Nothingness; Only Complete Sathchith!

Do not think, if there is nothing, would it be void?  In the end, would we become nothing?  It is not at all nothingness.  Even at that time, is the soul not there?  Since you are as the true Self, how could that become nothing?  One cannot make the mind comprehend the situation that would be reached when the mind is destroyed.  Still, some books on Adwaitha try to explain to some extent.  What they are saying is that even when you are as the soul while being asleep or unconscious, you are still not aware of the state of ‘Sath’.  Is it not?  When you do the diligent practice (sadhana) in the Gnana mode and be your true Self in the state of trance, you will be able to completely realize and appreciate being ‘Sath’.  While all the rest of the things appear to be existing, they are all going to become non-existent, one day.  This Atma is the only permanent Sath and is the basis temporarily, even for all the material things.   You will be fully conscious that you are that true Self.  It is clear by saying this way, that at that time, you would be with that realization, i.e., enlightened with that ‘Chith’.  It would be a great mistake, if you interpret this as that you are realizing Sath, due to Chith, with the help of Chith.  Then it would be a situation of Dwaitham and Adwaitham would cease to exist.  Because it would be as though there is one situation of being ‘Sath’ and there is another one different from it, as ‘Chith’ to realize it.  Would it not be wrong to say like this (that there are two things, Sath and Chith), after saying that this is a harmonious situation (Samadhi) where there is nothing else to interfere?  Therefore, both Sath and Chith are one and the same.  You are not realizing Sath with the help of Chith.  You are as Chith.  You are as Sathchith, where Sath and Chith are together.  While being in the state of Sathchith, it is also that totally free, joyful and blissful state where all the bondage that were presumed to be existent by the mind are cut off.  Not becoming empty or void.  It would be a state full of bliss.  It would be eternal bliss, as the feeling of well-being is emanating from the inner Self and not from outside and subject to external influence.  The joy derived by the mind, out of external things is only a small drop of this ocean-like joy.  Although it would be joyful to the ‘Sathchith’ even from external things, as it would become Dwaitham, as mentioned a little earlier, Sath and Chith are one and the same. Being in this blissful Sath-Chith eternally, is the state of Moksha, unshackled from all bondage.  It is not at all a void (Soonya) state.

____________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. சாந்தமதை தந்திடும்
    சாந்த முகமும்
    கார் முகில் போல்
    கருணை விழியும்

    ருத்திர மாலையுடன்
    மலர் மாலையும்
    வில்வதள கிரீடமுடன்
    புன் முறுவலும்

    பரம கிருபையுடன்
    அருளும் பார்வையும்
    பங்கையற் பாதம்
    காட்டிடும் கோலமும்

    பரமனது திரு அவதார
    பரமாச்சார்யாரின்
    வரைகலை ஓவியம்
    பரமானந்தம் தருதே

    கருணாம்ருத திருவருள்
    கொட்டட்டும் என்றுமே
    உன்மீது
    காணும் எங்கள் யாவர்க்கும்
    பொழியட்டும் அவரருளே |

    வாழிய வாழிய வாழிய !

    சந்தர் சோமயாஜிலு

Leave a Reply

%d bloggers like this: