மாம்ஸம் தின்றால்தான் பலம் என்கிற ‘பாயின்ட்டு’க்கு வருகிறேன். இப்போது ரொம்பவும் பலத்தைக் குறிப்பிட வேண்டுமானால் என்ன சொல்கிறோம்? ‘சிங்க பலம்’, ‘புலி பலம்’ என்றா சொல்கிறோம்? ‘யானை பலம்’ என்றுதான் சொல்கிறோம். மற்றப் பிராணிகளுக்கு இல்லாத பலம் யானைக்கே இருக்கிறது. இந்த சக்தி மாம்ஸம் சாப்பிட்டா அதற்கு வந்திருக்கிறது? யானை அப்படிப்பட்ட பதார்த்தத்தைத் திரும்பிக்கூடப் பார்க்காதே! ‘சுஷ்கைஸ் த்ருணைர் வநகஜா பலிநோ பவந்தி‘ என்று பர்த்ருஹரி வசனம் இருக்கிறது. இங்கே ‘சுஷ்கை: த்ருணை:’ என்றது காய்ந்த புல்லை. புல்லையும் தேங்காய் மட்டையையும் தின்றுவிட்டே யானை ஸகல மிருகங்களையும்விட பலமுள்ளதாயிருப்பதை இங்கே சொல்லியிருக்கிறது. இதிலே விசேஷம், இத்தனை பலம் இருந்தும் அது புலி, சிங்கம் மாதிரிப் பாய்ந்து ஹிம்ஸை பண்ணாமல் சாந்தமாயிருக்கிறது. அதற்குத் தேஹ பலத்தோடு புத்தி பலம், ஞாபக சக்தி எல்லாமும் நிறைய இருக்கிறது. மநுஷ்யனுக்கு அடங்கி ஒத்துழைக்கிற பவ்ய குணமும் இருக்கிறது. மலையாளம், பர்மா முதலான இடங்களில் பெரிய பெரிய மரங்களைத் தூக்கிக் கொண்டுபோய் வேலை செய்வதெல்லாம் யானைதான். ஆனதால் வெஜிடேரியன் ஆஹாரத்தினாலேயே நல்ல பலமும், அதுமட்டுமின்றி புத்தி, பணிவு, ஸஹாய குணம் முதலான ஸத்வ அம்சங்களும் பெறலாமென்று தெரிகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
I will address the point where people say that eating meat only gives strength. If we have to refer to someone with more strength, do we say ‘Strength of Lion’ or ”Strength of Tiger’? We refer to it as ‘Strength of Elephant‘(Yaanai Balam). Elephant has the strength that other animals do not possess. Did it get this strength from eating meat? Elephants won’t even glance at such food items! There is a saying by Barthru Hari, “Sushkais Thrunair Vanagajaa Balino Bhavanthi’. Here ‘Sushkai: Thrunair:’ refers to dry grass. An Elephant, by just consuming dry grass and barks of coconut trees, is much stronger than other animals. What is special here is, though it has this much strength, it does not hurt others the way lions or tigers do and remains calm. Apart from its physical strength, it also possesses good intelligence and very good memory. Further, it has the humility to work in coordination with man. In places like Burma, Kerala, etc. it is the elephant that carries huge trees. So one can understand that vegetarian food not only provides strength but also develops Sathvik qualities like intellect, humility, helping nature, etc. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply