Periyava Golden Quotes-818


‘மநுஷ்யக் குடலுக்கு மாம்ஸம் எடுத்ததில்லை’ என்று இப்போது வெஜிடேரியன் ஸயன்ஸ் நிபுணர்கள் சொன்னாலும், மாம்ஸம் இவனுக்கு அடியோடு ஜெரிக்காமலே இருக்கும்படி பகவான் பண்ணவில்லையே! அப்படி இருந்தால் மாம்ஸ போஜனம் பண்ணவே மாட்டானல்லவா? இப்போது கல்லைத் தின்கிறானா? இரும்பைத் தின்கிறானா? இப்படியே மாம்ஸத்தையும் தள்ளியிருப்பானல்லவா? இவனுக்குக் கொஞ்சம் சிரமப்பட்டாவது ஜெரிக்கும்படியாகவும் பண்ணி, அதே ஸமயத்தில் அஹிம்ஸா ரீதியிலும், தன்னுடைய ஸத்வகுண அபிவிருத்தியையும் உத்தேசித்து எந்த ஆஹாரம் நல்லது என்று ஆராய்கிற அறிவையும் கொடுத்து, ஒன்றோடொன்று மோதவிட்டு வேடிக்கை பார்க்கிறான். இதிலே நாக்குதான் ஜயித்து, புத்தி தோற்றது என்று மநுஷ்யன் பண்ணிக் கொண்டால் இவனைவிட அசடு இல்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Experts in Vegetarian Science say meat eating is not suitable for the human intestine. However, Bhagawan has not made humans in a manner that they do not digest meat at all! If that were the case, man will not eat meat at all isn’t it? Does he eat iron or stone? Likewise he would have stayed away from eating meat as well. Bhagawan has designed things in such as way that though it is difficult to digest meat, man can still eat it. Bhagawan has also given him the intelligence to think which food is good for him and to contemplate on Ahimsa and on improving his Sathva Guna. Granting him both these capabilities, He is a witness to the contest. If man decides in a manner that the tongue (the sense of taste) wins and the intellect loses, there is no greater fool than him. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: