கான்ஸ்டிட்யூஷனலாக மாம்ஸம் சாப்பிடக் கூடாத மிருகங்களும் உண்டு. அவற்றுக்கு நமக்குள்ள ‘புத்திசாலித்தனம்’ இல்லாததால் அவை மாம்ஸத்தின் கிட்டேயே போவதில்லை. ஆடும், மாடும், மானும், குதிரையும், யானையும் தப்பித் தவறியாவது மாம்ஸம் தின்னுமா? ஆனால் மிருகங்களுக்கு இல்லாத ஆறாவது அறிவும் இருக்கிற மநுஷ்யன் எதை விலக்கி எதைக் கொள்ள வேண்டும் என்ற வியவஸ்தயைப் புரிந்து கொள்ளாமல் மாம்ஸமானாலும் ஸரி, மற்ற ஆஹாரமானாலும் ஸரி, இரண்டையும் தின்னுவது என்று வைத்துக் கொண்டிருக்கிறான். மிருகங்களில் பூர்ணமாக மாம்ஸத்தைத் தள்ளியவையாகச் சிலது இருப்பது போலவே, மாம்ஸத்தைத் தவிர வேறே எதுவுமே தின்னாதவையாகச் சிலது இருக்கின்றன. நாய், பூனை, காக்காய், குருவி மாதிரிச் சிலதான் இரண்டு தினுஸையும் தின்பவை. மநுஷ்யன் இவற்றின் லெவலில்தான் இருப்பதா? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Even in animals there are many whose body constitution is not conducive for meat eating. Since these animals are not as ‘smart’ as humans, they stay away from eating meat. Will a goat or a cow or a deer or a horse or an elephant eat meat even by mistake? But humans who are gifted with the sixth sense have not understood as to what should be discarded and have adopted vegetarian and non vegetarian food. Among the animals, there are some that do not consume meat at all; there are others which consume only meat. Only a few like dogs, cats, crows and sparrows consume both types of food. Should man be only at this level? – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply