மாம்ஸம் சாப்பிடாததற்காக நம்மைப் பரிஹாஸம் செய்கிற நான்வெஜிடேரியன்களிடம் நாம் எப்படித் திருப்பிக் கொள்ளலாம் என்று சொல்லிக் கொடுக்கிறேன். “மாம்ஸம் சாப்பிடுகிற நீங்களே சில மாம்ஸ தினுஸுகளைச் சாப்பிடுகிறவர்களைப் பரிஹாஸமும் செய்கிறீர்கள் அதுமட்டுமில்லை. மாம்ஸத்திலேயே உசத்தி, தாழ்த்தி ஆகிய இத்தனை வகைகளைச் சாப்பிடுகிறவர்களும் ஒரு முகமாகச் சேர்ந்து கொண்டு, இப்போதும் இந்த உலகத்தில் எங்கேயோ வனாந்தரங்களில் இருக்கிற ஆதிவாஸிகளில் சிலபேர் நரமாம்ஸம் தின்னுகிறார்களே, அவர்களை ரொம்ப ரொம்ப மட்டமாக நினைத்து ‘நரமாம்ஸ பக்ஷிணி’ (Cannibal) என்று தூற்றுகிறீர்கள். நரமாம்ஸத்தை விட்டு மற்ற மாம்ஸங்களைச் சாப்பிடுகிற நீங்கள் அந்த ‘கானிபாலை’ விட ரொமபவும் உயர்ந்தவர்கள் என்று பெருமை கொண்டாடிக் கொண்டால், எந்தப் பிராணியின் மாம்ஸத்தையுமே சாப்பிடாத நாங்கள் உங்களையும்விட உசந்தவர்கள்தானே? நீங்கள் எப்படி ஒரு பக்கம் நரமாம்ஸ போஜனத்தையும் கேலி பண்ணிக் கொண்டு இன்னொரு பக்கம் எங்களுடைய சாக போஜனத்தையும் மட்டந் தட்டுவது பொருத்தம்?” என்று அவர்களைக் கேட்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Let me tell you how to take on those non vegetarians who ridicule us for being plant eaters. We should question them thus: ‘Even though you all consume non vegetarian food, you look down upon those who consume the meat of certain animals and deride them. All of you, irrespective of the kind of meat you consume, speak derogatorily about the Adivasis who eat human flesh and call them ‘Cannibals’. You consider yourselves superior to them just because you do not eat human flesh. By the same standards, we who eat no meat at all are superior to you. On one hand you scoff at those who eat human flesh and on the other, look down on plant eaters like us! How is it justified?’ – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Maha Periyava ThiruvadigaLe CharaNam! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!