ஒரு ஆட்டையோ, மாட்டையோ அது கதறக் கதற வெட்டுகிற மாதிரிதான் கீரையைப் பிடுங்கி நறுக்குவது நம் மனஸுக்குத் தோன்றுகிறதா? இந்த ‘ஸைகாலஜிகல் ஃபாக்ட’ருக்கு ஒரு முக்கியத்வம் உண்டு. மாம்ஸத்திலேயே ஒரு பிராணியின் ஊனைத் தின்னலாம், இன்னொரு பிராணியின் ஊனைத் தின்றால் நிஷித்தம் என்று வைப்பதற்கு [ஸைகாலஜிகல் தவிர] வேறே காரணம் இல்லை. ‘அய்யய்யே! பன்றி மாம்ஸமா?’ என்று ஹிந்துக்களில் மாம்ஸ போஜனிகள் முகத்தைச் சுளிப்பார்கள். ஆனால் அந்நிய தேசங்களில் அதையும் தின்னுகிறார்கள். இப்படியே ‘நண்டையும், நத்தையும் கூடச் சீனாக்காரன் தின்னுகிறானே! என்று நம்மூர் நான்வெஜிடேரியன்களே அருவருப்புடன் சொல்கிறார்கள். அப்புறம், மாம்ஸம் தின்பதிலேயே ‘gradation’ வேறு. எதெதையோ பிடித்துத் தின்றாலும் எதனாலோ குதிரை மாம்ஸம் தின்றால் மட்டம் என்று வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ‘வார்’ [உலக யுத்தம்] நடந்தபோது எல்லாவற்றுக்கும் ‘ஸ்கார்ஸிடி’ உண்டான ஸமயத்தில் ஜெர்மனி தேசத்துக்காரர்கள் குதிரை மாம்ஸம் சாப்பிட ஆரம்பித்தார்கள். இதற்காக அவர்களை மாம்ஸ போஜனிகளேயான மற்ற எல்லா மேல்நாட்டுக்காரர்களும் மட்டம் தட்டிப் பரிஹாஸம் செய்தார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Do we have the same feeling in our mind when we pluck a spinach plant versus brutally killing a goat or cow amidst all the pain and cries? This psychological factor is important here. The meat of some animals is accepted as fit for consumption. Meat of some other animals is looked down upon as unfit for consumption. The reason is purely psychological. Even Hindus who consume non-vegetarian food will frown when talking about pork. But in foreign countries they eat that too. Likewise, non-vegetarians here frown about the Chinese eating crabs and snails. Further, there is gradation in consumption of meat as well! Even though they eat a variety of animals, horse meat is looked down upon. During the world War there was scarcity of food. At that time, the Germans started taking horse meat for food. They were ridiculed for this act by many of the Westerners who were themselves meat eaters. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply