Periyava Golden Quotes-810

ஸந்நியாசிகளுக்குப் பூர்ண அஹிம்ஸை விதிக்கப்பட்டிருப்பதால் அவர்கள் நிமித்தமாகக் கறிகாயைப் பறித்து எடுக்கிற சின்ன வலிகூட தாவரங்களுக்கு உண்டாகக் கூடாது என்றும், அவர்கள் தாங்களாகவேதான் மரத்திலிருந்து விழுகிற பழங்களையும் சருகுகளையும்தான் சாப்பிட வேண்டும் என்றும் விதித்திருக்கிறது. ‘ஜீர்ண பர்ணாசிந: க்வசித்‘ என்பது இதைத்தான். ‘ஜீர்ணபர்ணம்’ என்றால் சருகு. ‘ஆசிந:’ என்றால் ஆஹாரம் செய்கிறவர்கள். தானியங்கள் கூட முளைக்கிறதோ இல்லையோ? அதனால் அவற்றுக்குக் கரு இருப்பதாக அர்த்தம். அதை ஒரு ஸந்நியாஸி சாப்பிட்டால் கர்ப்பச் சேதந்தான், ஜீவஹத்திதான் என்று அதையும் தள்ளச் சொல்லி இங்கே ‘ஐடியலை’ ரொம்பவும் கடுமையாக வைத்திருக்கிறது. ஸந்நியாஸி ஒரு சாத்துக்குடியோ, கொய்யாப்பழமோ, விளாம்பழமோ சாப்பிடும்போதுகூட ஸர்வ ஜாக்கிரதையாக ஒரு விதையைக்கூடத் தின்றுவிடாமல் நீக்கிவிட்டுத் தான் சாப்பிடணும். இப்படி மஹரிஷிகள் சுத்தமான பழ ஆஹாரம் சாப்பிட்டதுதான் நிஜமான ‘பலஹாரம்’. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Our Sastras have prescribed complete Ahimsa (Poorna Ahimsa) for Sannyasis. They should not even pluck vegetables since it will cause at least a little pain to plants. They can eat only those fruits and leaves which fall off on their own from the tree or plant. This is what is meant by ‘Jeerna parnaachinaha kvachith’. ‘Jeernaparnam’ means dried leaves. ‘aachinaha’ refers to the person who consumes the food. Since raw grains have the capacity to germinate they are said to contain a life in them. If these grains are consumed by a Sannyasi, it is equivalent to killing a life form, referred to as ‘Jeeva Hathi’ (killing a life). A Sannyasi has to strictly avoid it. Even when consuming fruits like Orange or Guava, a Sanyasi has to be careful that he doesn’t swallow a single seed. This is the true ‘phalahaaram’ approved and adopted by our Maharishis. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d