Periyava Golden Quotes-809

பயிர்கள் நன்றாக முற்றிச் சாய்ந்த பிற்பாடுதான், அதாவது தாமே ஜீவனத்தை முடித்துக் கொண்ட பின்தான், தானியம் அடித்து எடுத்துக் கொள்கிறோம். காய்கறிகளைப் பறிப்பதால் செடியையே நாம் கொன்றுவிடவில்லை. கத்தரிக்காய், வெண்டைக்காய் போன்றவற்றை நாம் ஒரு கொடி செடியிலிருந்து எடுப்பதால் அந்தச் செடிக்கு நம் நகத்தைக் கிள்ளினால், அல்லது ரோமத்தைப் பிடுங்கினால் வலிக்கிற அளவுக்குத்தான் வலி உண்டாகும். அதோடுகூட மநுஷ்யனுக்கும் மிருகங்களுக்கும் pain (வலியுணர்ச்சி) என்று உண்டாவதைவிட, தாவர வர்க்கத்துக்கு ‘ஸென்ஸிடிவிடி’ [உணர்ச்சி நுட்பம்] குறைச்சலானதால் pain-உம் குறைச்சல் தான் என்றோ ‘ரிஸர்ச்’ பண்ணிச் சொல்கிறார்கள். அப்படியே ஸமூலம், கீரை மாதிரியானவற்றையும், கிழங்கு வகைகளையும் பிடுங்கி எடுத்து, அதாவது அவற்றை ஹதமே பண்ணிச் சாப்பிடும்போது கூட, நாம் அவற்றைப் பிடுங்காவிட்டாலும் எப்படியும் அவையே அதற்குப் பிறகுச் சில நாளில் வாடிவிடப் போகிறவைதான். ஆகவே இந்த அம்சங்களையும் நம் necessity-ஐயும் கருத்தில் கொண்டு பார்த்தால் சாக போஜனம்தான் comparative-ஆக மினிமம் ஹிம்ஸை உள்ளது என்று தெரிகிறது. அதனால் இதையே மநுஷ்யர்களாகப் பிறந்த நாம் ஏற்க வேண்டியவர்களாயிருக்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Typically we harvest the crops (rice and grains) only after they are fully ripe – after the life of the plant is over. As far as vegetables are concerned, we do not destroy the entire plant. Plucking vegetables like ladies finger, brinjal, etc. causes only as much pain as cutting our nails or hair. Researchers say the pain and sensitivity levels of plant species are lesser than that of humans and animals. Plucking greens and harvesting potatoes from the ground does seem to kill them; but even if we do not pluck them, they will die in a few days on their own, after they are ripe. If we take all these aspects, it is clear that vegetarian food causes minimum pain as compared to other types of food. Therefore we, who are born humans, should adopt vegetarianism. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal

Loading

3 Responses

    1. Sir, it is not whether you have or not, the usual mailer is sent to all devotee members of this site.

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading