49. Sri Sankara Charitham by Maha Periyava – The Merciful Heart of the Quiescent

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In short, what is the objective of Sri Bhagawathpadhal’s avataram? Can you figure it out from the opportune picture above? Very easy to read but impossible to implement in our daily lives, but we should strive to.

Many Jaya Jaya Sankara to Shri ST Ravikumar the translation and Smt. Sowmya for the drawing and audio. Rama Rama


செயலற்றவரின் கருணையுள்ளம்

தக்ஷிணாமூர்த்தியாக ஆல மரத்தடியில் உட்கார்ந்து கொண்டிருப்பவர்தான். அசைவதே கிடையாது, கண் பார்க்கிறதில்லை, வாய் பேசுகிறதில்லை என்று இருப்பவர் தான். ஆனாலும் அப்படிப்பட்டவருக்கு இப்போது கருணையில் மனஸ் உருகிக்கொண்டிருந்தது. மனஸும் இல்லாமலிருப்பவர்தான். மனஸ் என்பது போய், ஆத்மா மட்டுமாக இருப்பதுதான் அத்வைதம். தக்ஷிணாமூர்த்தி என்றால் அத்வைத ஸ்வரூபம் என்று அர்த்தம். ஆனாலும் கருணா நிமித்தமாகவே மனஸைப் பண்ணிப் போட்டுக்கொண்டு, ‘ஐயோ, குழந்தைகள் இப்படிக் கெட்டுப் போகிறதுகளே!’ என்று உருகிக்கொண்டிருந்தார். [சிரித்து] அத்வைதத்துக்கு தக்ஷிணாமூர்த்தி என்று ரூபம் மட்டும் எப்படி வரலாமாம்? அதுவும் நம்மிடம் கருணையால்தானே? அப்போ மனஸும்தான் வரட்டுமே!

‘படி தாண்டாப் பத்தினி’ என்று சொல்வார்கள், இந்த நாளில் அப்படிச் சொன்னால் புரியுமோ புரியாதோ? கோஷா என்று சொன்னால் புரியுமோ என்னவோ? வீட்டைவிட்டு அடி எடுத்து வைக்கமாட்டார்கள். குரல்கூட வெளியில் கேட்காமல் இருப்பார்கள். ஆனாலும் குழந்தை தெருவிலே ஓடிப்போய் ஜலதாரையின் ஒட்டில் நின்றுகொண்டு ஸந்தோஷமாக எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது; அதற்குள்ளேயே குதிக்கலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் அவளுடைய கோஷாக் கட்டுப்பாடு நிற்குமா? பரபரத்துக்கொண்டு, சத்தம் போட்டுக்கொண்டு குழந்தையிடம் ஓடித்தானே வருவாள்? அப்படித்தான் தக்ஷிணாமூர்த்தியும் இருந்தார்.

அவருடைய ஸ்வபாவம் சும்மாயிருப்பது. ‘சும்மாயிருப்பதே ஸுகம்’, ‘சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது‘ என்று சொல்கிற, ‘பெரிய சும்மா நிலை’யிலிருப்பது.

துளிக்கூட சும்மா இருக்கமுடியாமல் ஜனங்கள் படாத பாடுபட்டுக்கொண்டு, பிறத்தியாரையும் படுத்திக் கொண்டிருப்பதை அவர் பார்க்கப் பார்க்க, அவர்களுக்கும் ஒன்றும் பண்ணாமல் சும்மாயிருப்பதைச் சொல்ல வேண்டுமென்று கருணை பொங்கிக் கொண்டு வந்தது.

ஒரு மதமா, ஸித்தாந்தமா, அநுஷ்டானமா என்றில்லாமல்தான் ஸாதாரணமாக ஜனங்கள் தங்களையும் ஹிம்ஸைப் படுத்திக்கொண்டு பிறத்தியாரையும் ஹிம்ஸைப் படுத்துவது வழக்கம். ஆனால் இப்போது ஏகப்பட்ட மதங்கள், ஸித்தாந்தங்கள், அநுஷ்டானங்கள் என்று ஏற்பட்டே ஒன்றோடொன்று மோதிக்கொண்டு ஒரே ஹிம்ஸை மயமாக இருந்தது! சரீர ஹிம்ஸையில்லை; புத்திக்கு ஹிம்ஸை!

சும்மாயிருக்க முடியாமல் உடம்பாலே கார்யம் பண்ணித்தான் வீணாகப் போகவேண்டுமென்றில்லை, மனஸினாலே — அதாவது சிந்தனா சக்தியாலே — எத்தனை க்ருத்ரிமாகக் கார்யம் பண்ணமுடியுமோ அத்தனையும் பண்ணி தினுஸு தினுஸான மதங்கள் என்று உண்டாக்கிப் பரப்பினால், சரீர ஹிம்ஸையை விடவும் ஜாஸ்தி ஹானி ஏற்படுத்தலாமென்று இந்தக் காலநிலையில் தெரிந்தது. அதனால், கார்யத்தை நிறுத்துவது மட்டுமல்லாமல் சிந்தையையும் அடக்கிச் சும்மா இருப்பதையே இந்த அவதாரத்தில் முக்யமாகவும் சொல்லணுமென்று பரம கருணையால் அவர் (தக்ஷிணாமூர்த்தி) நினைத்தார். சுருக்கமாகச் சொன்னால், இந்த அவதாரம் ஜனங்களைச் சும்மாயிருக்கப் பண்ணுவதற்காகவே ஆகும்.

_________________________________________________________________________________________________________________________________

The Merciful Heart of the Quiescent

He is the same person who is sitting under the banyan tree. Not moving at all.  (His) eyes do not see.  (His) mouth does not speak.  Still, His heart was now melting with benevolent compassion.  True, He is one without the mind (desires).  Adwaitha is when mind is transcended and only the Self (Atma) remains.  Dakshinamurthy means, personification of Adwaitha.  Still, He was hankering, out of compassion, becoming sense-conscious that His children are getting affected.  (laughs).  How could then, Adwaitha take the form of Dhakshinamurthy?  Was it not out of His compassion for us?  Then, let mind (sense-conscious) also be!

People say, “Padi thanda pathni” (A virtuous woman who would not even step out of her house).  Not sure, whether people would understand that these days.  Maybe, it can be understood, if we say Gosha.  The lady would not put her foot even outside the front door.  Even the voice would not have been heard outside.  Still, if her child runs to the street, stands near a water stream and is happily straining its head looking into the water and considering whether to jump into it or not, would her gosha discipline still stand?  Would she not get tensed, run to her child, crying out aloud?  Dhakshinamurthy was also in similar situation.

His nature is to be quiescent. It is the higher state of inaction as mentioned in “Summa Iruppadhe Sukam”, “Sindhaiyai Adakkiyae summa irukkindra thiram aridhu” (“It is blissful to be quiescent, The capacity to control the mind and be inactive is very rare”).

Continuing to watch the people suffering themselves and causing suffering to others, unable to remain inactive even a little, compassion brimmed in His heart to teach them to not indulge in action but remain idle.

Normally people suffer themselves and cause suffering to others, when there is no religion or philosophy or (disciplined) practices.  Whereas, now, there existed so many religions, philosophies and practices that each one clashed with the other and caused lot of suffering.  Not physical suffering but suffering to the intellect.

It is not necessary that one should degenerate only by doing activity with the body, unable to be quiet.  It was evident in those days that it was possible to cause more hardship mentally, than physically, that is, by doing artificially as much as possible, creating many religions and spreading them.  That is why, He, (Dhakshinamurthy), out of His immense benevolence, wanted to convey, most importantly to not only stop indulging in activities but also control the mind and remain inactive.  To put it short, this incarnation was only to make the people remain quiet.
_________________________________________________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. Miga arumai.!! Tathroopam!!
    Jaya jaya Sankara Hara Hara Sankara!!

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading