
Jaya Jaya Sankara Hara Hara Sankara – What is the biggest harm harm to our religion? Is it from other religions or atheism? Is there something better than listing to upanyasam’s (Spiritual discourses)? Can we advise others?
The solutions to all of the above has been explained supremely by Sri Periyava. Rama Rama
Many Jaya Jaya Sankara to Shri. B. Narayanan Mama for the translation.
எனக்கு முக்கியம் அம்பாள்
வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமலிருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் ஆகவேண்டும்.
இதற்கு சாக்ஷாத் பராசக்தியும், பரமேசுவர பத்தினியுமான அம்பாளுடைய சரணாரவிந்தத் தியானம்தான் வழி. அம்பாளின் சரணத்தைத் தியானித்துக் கொண்டே இருந்தால் அழுக்கெல்லாம் போய், குறை எல்லாம் தீர்ந்து பூரணமாக அப்படியே நிரம்பிப் போய்விடுவோம். அழுக்கும் குறையும் உள்ள ஜீவர்களாக நாம் உண்டாகியிருப்பது அவள் விளையாட்டுத்தான். எனவே இதிலிருந்து நம்மை மீட்டு நிர்மலமாக, பூரணமாகப் பண்ணுவதும் அவள் காரியம்தான்.
ஆடு மாடு மாதிரி சாகாமல், சாந்தியும் ஆனந்தமும் நிரம்பி நம் உயிர் உடம்பிலிருந்து பிரிந்து மறுபடியும் உடம்பு எடுக்காமல் இருப்பதற்காகத்தான் இத்தனை மதங்களும் உள்ளன. அம்பாளின் தியானத்தைவிட, வேறு மதம் வேண்டியதே இல்லை; சாந்தியும், ஆனந்தமும் தந்து நம்மை பூரணத்துவம் அடையச் செய்வது அதுவே.
அம்பாளைத் தியானித்து தியானித்து நம்மில் யாராவது நிரம்பிப் போய்விட்டால் நம் மதம் தானே வளரும். மதத்துக்காகப் பிரச்சாரம், வாதம் எதுவுமே வேண்டாம். நான் ஏன் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்கிறேன்? உபந்நியாசம் செய்கிற இந்த நேரத்தில் அம்பாளைத் தியானித்துக் கொண்டிருந்தால், அது இந்த உபந்நியாசத்தை விட மிகவும் ஆத்ம க்ஷேமமும் லோக க்ஷேமமும் ஆகும். இந்தப் பேச்சு வார்த்தைகளைவிட நிறைவுக்கு உதவுவது அதுவே. ஆனாலும் எனக்கு இந்த உண்மை இப்படிப் பேச உட்கார்ந்ததால் தெரிகிறது. ஆகவே, பேசப்பேச அதுவும் என் நினைவைச் சுத்தப்படுத்துகிறது என்று தெரிகிறது. நம்மில் ஒரு ஆத்மாவாவது பூரணமாக உயருவதற்காகத்தான் மத விஷயங்களைப் பேசுகிறேன்.
இந்த மத விஷயங்களுக்கெல்லாம் முடிவு நம் குறைகளைக் களைந்து நிறைவு பெறுவதுதான். அவரவரும் அநுஷ்டானங்களைச் செய்து தன் நிறைவை உண்டாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே நம் மதம். அதற்கான புத்தியும் சக்தியும் அம்பாளிடமே வேண்டிப் பெற வேண்டும்.
அம்பாளைத் தியானிக்க முயன்று அதில் ஒரு முகமாக ஈடுபட முடியாதபோது நம் குறையெல்லாம் தெரிகிறது. அதுவும் ஒரு விதத்தில் நல்லதுதான். ‘இந்தக் குறைகளைப் போக்கம்மா’ என்று அவளிடம் பிரார்த்தித்துக் கொள்ள முடிகிறது. என்னிடம் எப்போதெல்லாம் தோஷம் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் அம்பாளிடம் முறையிட்டு அந்த தோஷம் இனியாவது இல்லாமலிருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
என்னிடம் தோஷம் இருந்தால் நான் பிறருக்கு உபதேசிப்பது வேஷம்தான். உங்களை ஏமாற்றுவதுதான். எனக்கு அம்பாள் அநுக்கிரகம் பூரணமாக வந்து நான் நிறைந்து போய்விட்டால், அப்புறம் உபதேசம் என்ற வாய்ப் பேச்சே தேவையில்லை. பேசாமலே அநுக்கிரஹ சக்தியானது மற்றவர்களுக்கு ஞானத்தைத் தந்துவிடும். ஆக, இரண்டு நிலையிலும் உபந்நியாசம் கூடாதுதான். இப்படி எல்லாம் நான் உபதேசம் பண்ணுகிற நேரத்தை அவளுடைய தியானத்திலேயே செலவு செய்தால் இன்னும் எத்தனையோ மடங்கு ஆத்ம சாந்தி கிடைக்கும். உபந்நியாசம் செய்கிற பொழுதை அவள் தியானத்தில் செலவிட்டால், என் தோஷங்கள் எத்தனையோ நீங்கும். இதைக் கேட்கிற பொழுதை அவளுடைய தியானத்தில் செலவிட்டால் உங்கள் தோஷங்களும் எவ்வளவோ விலகும். ஆனாலும் இப்படியெல்லாம் நான் பேசிக் கொண்டிருப்பதற்குக் காரணம், உங்களில் யாராவது தம்மைத் தாமே இவ்வாறெல்லாம் சோதித்துப் பார்த்துக் கொண்டு, அம்பாளைத் தியானித்து பூரணத்துவம் அடைய இந்தப் பேச்சு தூண்டாதா என்ற ஆசைதான். பிரச்சாரத்தால் மதமும் ஆத்மாநுபவமும் வளராது. பிரச்சாரமும் பிரசங்கமும் தற்கால சாந்திதான்.
சாந்தியே இல்லாத லோக வாழ்க்கையில் ஏதோ தாற்காலிகமாக ஒரு சாந்தி உண்டானாலும் ஒரளவுக்கு விசேஷம்தான். நான் பேசினால் உங்களுக்குத் தற்கால சாந்தியாகத் திருப்தி உண்டாகிறது என்பதால் பேசுகிறேன். நான் பேசாவிட்டால் உங்களுக்கு துக்கமாகவும், ஏமாற்றமாகவும் இருக்குமே என்பதற்காகப் பேசுகிறேன்.
ஆனால் இதைவிட அவசியம் தாற்காலிகமானதைச் சாசுவதமாகப்பண்ணிக் கொள்வதுதான். அதற்கு ஒரே வழி அம்பாளின் சரணாரவிந்தத் தியானமே. எனக்கு முக்கியம் அம்பாள். லோக க்ஷேமார்த்தம் அம்பாளுடைய சரணாரவிந்தத்தைத்தான் தியானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லோரும் அம்பாளைத் தியானம் பண்ண வேண்டும்.
மற்ற மதங்களாலோ, நாஸ்திகத்தாலோ நம் மதத்துக்கு ஹானி வராது. நம்முடைய அநுஷ்டானக் குறைவினாலேயேதான் ஹானி வரும். நம் உடம்பில் சக்தி குறைந்தால்தான் நோய் வருகிறது. அதுபோல் நம் அநுஷ்டானம் குறைந்தால் மதமாற்றம், நாஸ்திகம் முதலிய நோய்கள் வந்து விடுகின்றன.
அநுஷ்டானங்களை விடாமல் செய்து கொண்டு அம்பாளுடைய சரணாரவிந்தங்களைத் தியானம் செய்து கொண்டிருந்தால் போதும், ஒருத்தருக்கும் ஒரு கஷ்டமும் வராது. இதற்கெல்லாம் விசை நம்மிடமே இருக்கிறது. நாம் பெரிய பெரிய நல்ல காரியமாக ஏதோ செய்ய வேண்டும் என்பதே இல்லை. முதலில் நாம் தப்புப் பண்ணாமல் இருக்க முயன்றாலே போதும். தப்புப் பண்ணுகிற போதெல்லாம் அம்பாளிடம் பிரார்த்தித்துக் கொண்டு, அவள் கிருபையால் ஆத்ம சுத்தி செய்து கொண்டு, படிப்படியாக நமக்கு நிறைவைப் பெற்று, நம் மதத்துக்கும் நிறைவை உண்டு பண்ணுவோம். நம் மதம் என்பது லோகம் முழுவதற்கும் பொதுவானதால், இதன் மூலம் சகல தேச ஜனங்களுக்கும் க்ஷேமத்தைத் செய்வோம்.
எல்லா மதங்களும் முடிவில் மோக்ஷம் அடைவதைத்தான் லக்ஷியமாகச் சொல்கின்றன. பரம சத்தியத்தை அநுபவத்தினால் அறிகிற ஞானம்தான் அந்த மோக்ஷம். அந்தப் பரம ஸத்யத்தைத்தான் வேதாந்தத்தில் பிரம்மம் என்பது.
பிரம்மத்தின் சித்சக்தி என்கிற ஞான ஸ்வரூபமாக இருக்கிற அம்பாளை உபாஸித்தாலே, அவளுடைய அநுக்கிரகத்தால் நாமும் அந்த ஸத்தியம்தான் என்கிற ஞானத்தை அடைய முடியும்.
இகலோகத்தில் பலவிதமான சௌக்கியங்களை அநுக்கிரகம் செய்கிற அம்பாள், முடிந்த முடிவாக இந்த ஞானத்தை, மோக்ஷத்தை அருளுகிறாள். அவள் அநுக்கிரஹத்தால்தான் சம்ஸார பந்தத்திலிருந்து விடுதலையாகி மோக்ஷம் அடையலாம். அம்பாளை ஆராதிப்பதால், ஞானம் ஆவிர்பவமாகி, அஞ்ஞானம் விலக, மோக்ஷம் கிடைக்கிறது என்பது சாஸ்திரங்கள், ஸ்தோத்திரங்கள் எல்லாவற்றிலுமே சொல்லப்பட்டிருக்கிறது. அம்பாளிடம் பக்தி பண்ணிப் பண்ணி இப்படிப் பரம ஞானிகளான பல மஹான்களையும் அறிந்திருக்கிறோம்.
நாம் ஆரம்பிக்க வேண்டியது அம்பாளுடைய சரணாரவிந்த தியானம்தான். கொஞ்சம் கொஞ்சம் தியானம் செய்தாலே அதன் ருசி தெரியும் – அம்பாளுடைய சரண கமலத்தைக் காட்டிலும் சாந்தி அளிக்கக்கூடியது வேறு எதுவும் இல்லை என்று புரிய ஆரம்பிக்கும். விடாமல் இப்படித் தியானம் செய்தால் முடிவில் இந்த உடம்பு போனபின் செத்தும் சாகாதவராகலாம் – அமிருதமாகலாம். என்றும் நிலையாக இருக்கிற ஞானத்தில் இரண்டறக் கலந்து அமிருதமாகலாம்.
பிறத்தியாருக்கு உபதேசித்துத் திருத்துவதற்கு யத்தனம் செய்வதற்கு முன்னால், அவரவரும், தான் தப்புப் பண்ணாமல் இருந்தாலே போதும். இதற்கு அவளுடைய சரண கமலம்தான் கதி. எளிதில் நம் குறையைப் போக்கிக் கொள்ள தியானம் என்கிற விசையை நமக்குள்ளேயே வைத்திருக்கிறாள். நீங்கள் எல்லோரும் உங்கள் ஆத்ம க்ஷேமத்திற்காகவும், லோக க்ஷேமத்திற்காகவும் அவளைத் தியானம் செய்ய வேண்டும். இதை எல்லோரும் விடாமல் செய்து கொண்டிருந்தாலே போதும். ஒருத்தருக்கும் ஒரு கஷ்டமும் வராது; சமஸ்தப் பிரபஞ்சமும் பரம க்ஷேமமாக இருந்து வரும்.
____________________________________________________________________________________________________________________________
“For Me, Ambal is Important”
It is not enough if the house is clean without dirt; it is not enough if the clothes are kept clean; Our heart (mind) should be clean without any dirt.
The only way for achieving this is to worship the lotus feet of ParAsakthi, the consort of ParamEswaran. If we keep on worshipping HER lotus feet, all the dirt and filth will go away, our problems will evaporate and we will be completely full. It is Her ‘LeelA’ only that we are born with all the dirt and anxieties. Therefore it is also Her job to remove the dirt and filth from us and make us perfect.
All these religions are necessary in order that we do not die like animals, that we leave our body with our heart and mind filled with happiness and peace and finally we do not take a rebirth. There is no other religion required than worship of and meditation on AmbAl. That is the one which will fill our heart with peace and happiness and make us perfect.
If some of us become full and perfect by meditating on AmbAl, our religion will grow by itself. There is no need for debates and preaching for the sake of the religion. Why am I telling you all this? Instead of doing ‘UpanyAsam’ (lecture) like this, if I spend this time on meditation of AmbAl, it will fetch more ‘Atma Kshemam’ (welfare of the soul) and welfare for the world. That helps in the fulfillment of mind than mere talks. But, I realize this truth when I sit here to talk to you. Therefore, it cleanses my mind as I keep talking. I am speaking about matters concerning religion in order that at least one among us will rise to the level of fulfillment of the soul.
The only way to find an end to all these talks regarding religion is to wipe out our deficiencies and become perfect. Everyone should perform his ‘AnushtAnams’ (daily rituals) and get fulfillment—this is our religion. We have to obtain the necessary intelligence and power to perform them, by requesting AmbAl.
When we try to meditate on AmbAl and are unable to single mindedly involve in the process, we realize our deficiencies. That is also good in one way. We are able to pray to Her to remove these deficiencies. Whenever some deficiency creeps up in me, I pray Ambal and request Her so that I can be without that deficiency at least from then onwards.
If I have some faults, then my preaching to others is a show only; it is only that I am cheating you; if I get AmbAl’s Anugraham fully and become perfect, then there is no need for this talk and advise. The power of blessing will give wisdom to others without speaking. Therefore, in both the situations there is no need for ‘UpanyAsam’. If I spend all this time preaching and doing Upanyasam on meditating on AmbAl, I will get even more ‘Atma ShAnthi’ (peace of soul). If I devote the time spent on ‘UpanyAsam’ on meditation (on HER), many of my deficiencies will be wiped out. If you devote the time you are spending now hearing all this, on meditating on AmbAl, you will also be rid of many of your sins. But the reason why I am speaking to you this way is my desire that ‘will not this speech encourage some among you to analyze all this within your mind, meditate on AmbAl and attain fulfillment?’. Religion and experience of soul will not grow with preaching. Preaching and ‘UpanyAsam’ will give temporary solace only.
In a life without peace of mind, it is good even if one gets a temporary peace of mind. I speak because you get that temporary relief. I speak because you will feel sad and disappointed if I do not.
But what is more necessary than this is to make this temporary state of mind a permanent one. The only way for this is meditating on AmbAl’s lotus feet. For me AmbAl is important. I am worshipping HER for the welfare of the world. All of you must worship HER.
There will not be any harm to our religion from other religions or Atheism. Harm will come only if we do not perform our ‘AnushtAnams’. We are afflicted by diseases because of our body strength deteriorating. Same way, if we do not perform our ‘AnushtAnams’ properly and without fail, diseases like conversion and atheism will affect us.
No one will get into any harm, if we perform our ‘AnushtAnams’ without fail, and meditate on AmbAl’s lotus feet. The switch for this is within us only. There is no need to perform great services and deeds. To start with, it is sufficient if we try not to commit any sins or wrongs. We should pray HER whenever we commit some wrong, cleanse our souls with Her Anugraham, get fulfillment of the soul step by step, and create fullness for our religion also. As our religion is common for the whole world, we can bring welfare to the people of all the countries.
The final objective of all religions is to attain liberation (Mukthi). Realizing the ultimate truth through experience is Mukthi. VedhAntham calls that ultimate truth as Brahmam. If we worship AmbAl who is ‘GnAna Swaroopam’ of ‘ChitSakthi’ of Brahmam, we will also realize that we are that Truth.
AmbAl who grants us the various worldly pleasures also grants us this wisdom in the end. We can liberate ourselves from the family bonds and attain Mukthi with HER Anugraham only.
All SAstrAs and StOtrAs tell us that Worshipping AmbAl will bring in the presence of wisdom and drive away the ignorance. We also know of many many great souls who had worshipped AmbAl and become wise men.
What We have to start is to meditate on the Lotus feet of AmbAl. Little by little we will realize the taste of it. We will understand that there is nothing else other than HER lotus feet that is capable of giving us peace and tranquility. If we continue to meditate like this without stopping, in the end, even when this body leaves, we can become like nectar, by merging with the ever permanent wisdom.
Before trying to advise others and correct them, everyone should ensure that he does not commit any wrong. The only asylum for this is HER lotus feet. She has kept the ‘switch’ called meditation within us to easily remove the deficiency in us. All of you must worship HER for the sake of your ‘Atma Kshemam’ (welfare of the soul) as well as ‘LOka Kshemam’ (Universal welfare) . It is enough if everyone keeps doing this without stopping. No one will come to any harm; the entire universe will also be very well.
![]()
2 Responses
Such a beautiful picture of ambal….pppaa…triloka soundaryam!
Periyava’s simple & clear solution to all our personal and worldly issues.
Just blindly following his words will take us to moksha!!
As Angarai periyava has said, even if Periyava asks you to jump into the fire you should not hesitate.