Periyava Golden Quotes-805


‘முக்காயம் தள்ளியவர்கள்’ என்று சைவர்களை சொல்வதுண்டு. காயம் என்றால் உடம்பு அல்லவா? உடம்பு ஊன்தானே? முக்காயம் என்கிற மூன்றுவித ஊனா என்ன? இல்லை; இங்கே அப்படி அர்த்தமில்லை. ஸ்தூல சரீரம், ஸூக்ஷ்ம சரீரம், காரண சரீரம் என்கிற மூன்றுதான் முக்காயமா? – என்றால் அப்படி அர்த்தமில்லை. முக்காயம் என்று இங்கே சொன்னது வெங்காயம், உள்ளிக்காயம் (அதாவது பூண்டு) , பெருங்காயம் என்ற மூன்றுதான். மாம்ஸமாயில்லாவிட்டாலும் இதுகளுங்கூட ராஜஸ, தாமஸ குணத்தைக் கொடுப்பவை என்பதால் இவற்றையும் சைவர்கள் தள்ளிவிடுவார்கள். காயம் என்பது ஊனை, மாம்ஸத்தைக் குறிப்பதால் இங்கே ‘முக்காயம்’ என்பது சிலேடையாகவுமிருக்கிறது! .  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Saivaites were also called ‘Mukkaayam Thalliyavargal’ (Ones who shunned three ‘kayam’). ‘Kaayam’ means body right? Body is flesh and blood, right? Does Mukkaayam mean three different bodies (‘Muk’ means three and ‘Kaayam’ means body)? No, it should not be understood that way here. Does this Mukkaayuam mean Sthoola Sareera, Sookshma Sareera, and Kaaranaa Sareera? No as well. Here ‘Mukkaayam’ means Onion (vengaayam), Garlic (ullikkaayam), and Asafoetida (perungaayam). Saivaites abolished these three items from their food as they increased the Raajasa and Taamasa Guna. The usage of the term ‘Kaayam’ – body made of flesh – is also pun intended. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: