Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final part of the chapter explaining Sri Vidhyaranyar’s great efforts in reviving Sanatana Dharma. Sri Periyava closes out the chapter by telling us what we ask for when we pray to Mahalakshmi. Something to remember for a lifetime. Rama Rama
Many Jaya Jaya Sankara to Shri. B. Narayanan Mama for the translation.
மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
நடுவில் ஒரு நாற்பது ஐம்பது வருஷ காலம் பிற மதத்தினால் வீணாகப்போன தேசத்தில், மறுபடியும் வேதம், கோவில், தருமம் எல்லாம் நிலைக்கும்படி செய்து, ஜனங்களுக்குப் பரமோபகாரம் செய்தார் கம்பன்ன உடையார். இந்த விஜய நகர வம்சத்தில்தான் பிற்பாடு உலகமே கொண்டாடுகிற கிருஷ்ணதேவராயர் வந்தார். இவர்கள் அத்தனை பேரும் செய்த காரியத்துக்கெல்லாம் வித்து வித்யாரண்யர் போட்டதுதான். ராஜ்யத்தை ஸ்தாபித்தது, விஸ்தரித்தது, அதைப் பல பகுதிகளாகப் பிரித்துப் பல பிரதிநிதிகளைக் கொண்டு ஆட்சி நடத்தியது எல்லாவற்றிற்கும் வித்யாரண்யரே மூல புருஷர்.
வேத தர்மங்களை மறுபடியும் உச்ச நிலைக்குக் கொண்டு வருவதற்கு வழியாகவே துருக்கரை அகற்றி, ஹிந்து ராஜ்யம் அமைக்க அவர் வழிகோலினார். ராஜ்யம் ஸ்திரப்பட்டபின், இந்து தர்ம ரக்ஷணத்தைத் தாமே மேற்கொண்டார். ஆதி சங்கர பகவத் பாதர்களின் அத்வைத சம்பிரதாயத்தை மறுபடியும் ஜொலிக்கச் செய்துவிட்டால் வேத தர்மங்கள் எல்லாம் புனர்ஜீவனம் பெற்றுவிடும் என்று தீர்மானித்தார். அதனால் கர்நாடக, ஆந்திர தேசங்களிலிருந்த பழைய சங்கரமடங்களைப் புதுக்களையோடு பிரகாசிக்கிற மாதிரி உத்தாரணம் செய்தார். சில புதிய மடங்களையும் ஸ்தாபித்தார். கன்னட தேசத்தில் அப்போது அத்வைதத்தை ஆட்சேபிக்கும் ஸ்ரீ மத்வரின் த்வைத சித்தாந்தமும் நிறையப் பரவியிருந்தது. அதைச் சமாளிப்பதற்காகவும் இந்த அத்வைத மடங்களை ஸ்தாபித்தார்.
ஜனங்களின் நல்வாழ்விற்கு சஸ்திரம், சாஸ்திரம் என்கிற இரண்டும், தேவையாயிருக்கின்றன. சஸ்திரம் என்றால் ஆயுதம். விரோத ராஜ்யங்களால் தீமை ஏற்பட்டால் காப்பாற்றிக் கொள்ள சஸ்திரம் வேண்டியிருக்கிறது. நம்மை நாமே கெடுத்துக் கொள்ளாமல் ஆத்மாவை ரக்ஷித்துக் கொள்வதற்கு சாஸ்திரம் வேண்டியிருக்கிறது. வித்யாரண்யா ராஜ்ய ஸ்தாபனத்தில் மறைமுகமாக சஸ்திரப் பிரயோகம் செய்தும், ஸ்ரீசங்கர மடங்களின் புனருத்தாரணத்தால் தாமே நேராக சாஸ்திரப் பிரயோகம் செய்தும், ஹிந்து சமூகம் முழுவதையும் துருக்கர்களிடமிருந்து காப்பாற்றி விட்டார். அவர் கர்மம், பக்தி, ஞானம் என்ற மூன்று மார்க்கங்களுக்கு உபகாரம் செய்த மஹான். அவருடைய ‘பஞ்சதசீ ப்ரகரணம்’, ‘ஜீவன் முக்தி விவேகம்’ முதலான கிரந்தங்கள் பரம ஞானத்தைக் கொடுக்கக் கூடியவை. மடத்தை ஸ்தாபித்தல், ஆலய புனருத்தாரணம் செய்தல், ஆகியவற்றால் பக்தியை வளர்த்தார். வேத பாஷ்யத்தால் கர்மத்தை நிலைநாட்டினார். அவர் செய்த இத்தனை பரமோபகாரத்துக்கும் முதலில் ஊக்கச் சக்தி தந்தது, லக்ஷ்மி கடாக்ஷத்தால் அவர் பெற்ற நவநிதிதான்.
பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் கொடுக்கிற மனப்பான்மைதான் பெரிய லக்ஷ்மி. இந்த மனோபாவத்தையும் மஹாலக்ஷ்மி அநுக்கிரகம் செய்வாள். ஏழைப் பிராம்மணப் பெண்ணின் பொருட்டு அவளைச் செல்வத்துக்கு அதிதேவதையாக வைத்துக் கனக மழை பொழியும்படி வேண்டிக்கொண்ட சங்கரர், இதே ஸ்திதியில் தம் பொருட்டு அவளைப் பிரார்த்திக்கிறபோது, அவளைப் பணத்தின் அதிதேவதையாக மட்டும் நினைக்கவில்லை. மனமாசுகளையெல்லாம் நீக்குகிற ஞானாம்பிகையாக வைத்துப் பிரார்த்திக்கிறார். (‘ஸம்பத்கராணி’ என்கிற ஸ்லோகம்)
வைஷ்ணவர்கள் விஷ்ணுவைத் தகப்பனார் என்று சொல்லாமல் ‘பெருமாள்’ என்றே சொன்னாலும், மஹாலக்ஷ்மியைத் ‘தாயார்’, ‘தாயார்’ என்றே சொல்வார்கள். அவள்தான் ஸ்ரீ மாதாவான பராசக்தி. ஆசார்யாளும் இங்கு மாதா என்று அழைத்து, (மாமேவ மாதர் அனிசம்) “உன்னை நமஸ்காரம் பண்ணி விட்டால் போதும்; அந்த நமஸ்காரங்கள் சம்பத்து, சகல இந்திரிய சந்தோஷங்கள், சாம்ராஜ்யம் எல்லாம் தந்து விடும். ஆனால் இதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்கு உன்னிடமிருந்து ஒரே ஒரு செல்வம்தான் வேண்டும். என் துரிதங்கள் – பாபங்கள் எல்லாவற்றையும் கல்லி எறிவதற்கும் உன்னை நமஸ்கரிப்பதே சாதனமாகிறது. செல்வ தேவதையான நீ எனக்குத் தருகிற செல்வம் இந்த நமஸ்காரம்தான். இது என்னை விட்டு நீங்காமல் இருக்கட்டும்” என்கிறார்.
எல்லோரும் துராசைகளில்லாமல் ஜீவனோபாயம் நடத்துவதற்கு மஹாலக்ஷ்மியை உபாசிக்க வேண்டும். ஆசாரியாள், வித்யாரண்யாள், ஸ்ரீ தேசிகன் மாதிரி சொந்த நலனுக்காக இன்றி, பரோபகாரமாக அவளைத் துதிக்க வேண்டும். எந்த செல்வம் வந்தாலும், வராவிட்டாலும், நம்மிடம் பாபமே சேராமல் நிர்மலமாக இருக்கிற செல்வத்தை விரும்பி அவளை நமஸ்கரிப்போம்.
_________________________________________________________________________________
Mahalakshmi Who Blessed Great Souls
In a country which was in peril for almost fifty years because of other religions, Kampanna UdaiyAr re-established Vedam, Temple, Dharmam, etc. and thus did a yeoman service to the people. In this lineage of Vijayanagara Kingdom, was born the world famous king Krishna Devarayar. The seed of all the good things these kings did, was sown by VidhyAranayar only. VidhyAranyar was the first person who established the kingdom, expanded it and divided it into various divisions which were ruled by different representatives.
He laid the path for reviving the DharmAs and taking them to the top, by removing the muslim kingdoms and establishing the Hindu kingdom. After the kingdom was firmly established he undertook the responsibility for the protection of DharmA. He decided that if he could revive Adhi Sankarar’s Adhwaita SampradhAyam, all the Vedha DharmAs would automatically take new life. With that idea, he renovated the old Sankara Matams in Karnataka and Andra Pradesh. He also established some new Matams. At that time, the philosophy of Dhwaitam, which objects to Adhwaitam had spread in Kannada Desam. He established these new Matams to counter that also.
For the welfare of the people, both Sastram and SAstram are necessary. Sastram means weapon; this is required to defend against the invasion by enemies. SAstram is necessary to save ourselves by protecting our Atman. VidhyAranayar saved the whole Hindu community, by indirectly using weapons and by directly using SAstram by establishing new Sankara Matams and renovation of the old ones. He was a great soul who helped all the three paths -Karma, Devotion, and Wisdom. His books ‘Panchasathee Prakaranam’ and ‘Jeevan Mukthi Vivekam’ will impart ultimate wisdom. He nourished the path of Devotion by establishing Matams and renovating temples. He established the path of Karma by writing commentaries on VedhAs. The one real encouraging thing which gave him the strength to perform all this service was the wealth he got from MahAlakshmi.
The attitude to give away the wealth is a greater and nobler quality than earning. MahAlakshmi will grant this attitude also. Sankarar who prayed MahAlakshmi on behalf of the poor Brahmin lady, did not think of HER as the ultimate God for wealth, when He prayed HER for self; He prayed HER as the GnAnambikai (DevathA OF Wisdom) who removes all the dirt from the mind. (SlOkA starting with ‘SampathkarAni’).
Vaishnavites do not call Vishnu as ‘Father’, but call MahAlakshmi as Mother (ThAyAr) only. She is the ParAsakthi who is SreeMAthA. AchAryAr calls HER as MAthA (Mother), and says, “It is enough if I prostrate before you; that ‘NamaskAram’ will grant me all the wealth, pleasures of senses, Kingdom, etc. But I do not want any of those. I want only one wealth from you; doing ‘NamaskAram to you only wipes out all my PApam (sins); I want only this wealth from you, Oh God of wealth! May this not leave me!”
Everyone should worship MahAlakshmi to live life without greed. Everyone should pray HER not for the self but for the welfare of the others like AchAryAr, VidhyAranyar, and Sree Desikar did. Whichever wealth comes or does not come, let us worship HER for the one pure wealth of being without Paapam (sins).
Categories: Deivathin Kural
சூாியஉதயத்திற்கு பிறகு ருதுவானால் அன்றைய நாள் 1ம்நாள்.சூாியஉதயத்திற்கு முன் ருதுவானால் முந்தைய நாள் 1ம்நாள் என கணக்கிடவேண்டும். மனைவி ருதுவானதினத்திலிருந்து 16 நாட்களுக்குள் அவளின் கணவனால், தாம்பத்தியத்திற்கு தோ்ந்தெடுக்கப்படும் நாளானது, முதல் 4 நாட்களாக இல்லாமலும், தேய்பிறையின் எந்தவொரு நாளாக இல்லாமலும், வளா்பிறையிலும் அமாவாசை பிரதமை அஷ்டமி ஏகாதசி சதுா்த்தசி பெளா்ணமி மற்றும் ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய தம்பதிகளின் பிறந்த நட்சத்திரம் மற்றும் தமிழ்மாதப்பிறப்பு போன்ற நாட்களாக இல்லாமலும், மேற்கண்ட விதிமுறைகளுடன்கூடிய வளா்பிறை நாளாகவும், மனைவி ருதுவானநாளிலிருந்து 14ம் நாளாகவும் இருந்தால், தா்மக்ஞனும் ஆத்மஞானியுமான ஆண்குழந்தை பிறக்கும். சாமி குழந்தை. 21 தலைமுறை முன்னோா்கள் திருப்தி அடைய வாய்ப்பு – இந்து மத வேதத்திலுள்ள கா்ப்பாதானம் ஸம்ஸ்காரம் பகுதியின்படி சிறந்த குழந்தைகளை உருவாக்குவது. தா்மக்ஞனும் ஆத்மஞானியுமான ஆண்குழந்தையினை வைசியா் தம்பதிகள் உருவாக்கினால், செல்வவரவுக்கு வாய்ப்பு. முக்காலமும் உணர்ந்தவர். https://www.facebook.com/kpk.ganesh
இராணுவ வீரரை எதிரி நாட்டில் இருந்து மீட்க மகான்களால் இயலுமா? –
நீதிபதியின் மாண்பு பற்றிய கருத்து – நாளை நீதிபதி கூறப்போகும் தீர்ப்பு இன்றே முக்காலமும் உணரக்கூடிய மகான்களால் கூறமுடியும் என ஶ்ரீ மகா பெரியவரின் திறன் நம்பப்படுவதால், நீதிபதியின் மாண்பு அவமதிக்கப்படுகிறது. நீதிபதியின்
சுய புத்தி கணிப்பிற்க்கு உட்பட்டதாக மகான் கருதப்படுவதை
மேற்கண்ட பரிசோதனை மூலம்
நீதிமன்றமே இக்கால மகான்களாக நம்பப்படுபவர்கள் மீது வழக்கிட ஊடகம் உதவுமா? முசிறி ஶ்ரீ அனந்த நாராயண வாஜபேயாஜி, ஶ்ரீ பாரதி தீர்த்தர் மற்றும் சிலர் வாழும் மகான்களாக நம்பப்படுகிறது. https://www.facebook.com/kpk.ganesh