Periyava Golden Quotes-800

வெஜிடேரியனிஸம் என்ற ஐடியல் நம் தேசத்தில் ஒரு குறிப்பிட்ட குலாசாரமாக மாத்திரம் இருப்பதாலேயே, அதைப் பார்த்து, சாஸ்திரத்தின் ‘கம்பல்ஷன்’ இல்லாமல், தாங்களாகப் பிரியப்பட்டு வேறுவித குலாசாரமுள்ளவர்களும் அதை எடுத்துக் கொண்டு, ஐடியல் மேலும் மேலும் ப்ராக்டிஸில் பரவுவதைப் பார்க்கிறோம். “நாங்கள் இரண்டு தலைமுறையாக சுத்த சைவமாயிருக்கிறோம்” என்று இதரர்கள் பெருமையோடு சொல்லிக் கொள்வதைக் கேட்கிறோமென்றால், அதற்கு முந்தி அசைவமாயிருந்தவர்கள் தாங்களாகவே சைவ ஆஹார நியமத்தில் மதிப்பு வைத்து மாறியிருக்கிறார்களென்று தானே அர்த்தம்? இன்னும் சிலபேர், “வீட்டில் அன்னிய பதார்த்தம் சாப்பிடுவார்கள்; ஆனால் நம்ம கிட்டயே அந்த வாடை வரக் கூடாது” என்று பெருமைபட்டுக் கொள்ளும்போது, எப்படி ஒரு ஐடியலைச் சிலருக்கு மட்டும் விதியாக வைக்கிறபோது, அது மற்றவர்களில் சிலரையும் அந்தப்படி தாங்களாக இஷ்டப்பட்டுச் செய்ய ‘என்கரேஜ்’ பண்ணுகிறது என்று தெரிகிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In our country, since the ideal of vegetarianism has been imposed only on a certain section of the society, it is being followed by other sections of people too on their own, without any compulsion imposed by Sastras. We see this ideal being willingly practiced by more and more people. If someone says with pride “we have been vegetarians since the last two generations” does that not mean they were eating non vegetarian food before and switched over to vegetarianism based on respect and high values for that ideal? Some people say with pride, “my family members do eat non-vegetarian food. But I go nowhere near it”. These demonstrate that when high ideals are placed as rules only for a few people, it encourages others also to follow it of their own will. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. This is true. However, I think veganism(no milk) is gaining more popularity in the western world and the vegetarians in India are now tending towards more meat eating habits.

Leave a Reply

%d