47. Sri Sankara Charitham by Maha Periyava – Most auspicious Divine Guru


Jaya Jaya Sankara Hara Hara Sankara – What does the most auspicious divine Guru mean? Sri Periyava quotes from a few upanishads.

The quality of the translations, drawings and audio recording is really going up every chapter. Let’s take a moment to thank Shri ST Ravikumar and Smt. Sowmya for their dedication in helping present the series the way Sri Periayava wishes it to come out. Look at Acharyal and Lord Shiva. Isn’t the most auspiciousness captured awesomely in these pics? Rama Rama

மங்கள மயமான தெய்வகுரு

லோகத்தின் பெரிய பாக்யம், குரு ஸ்வரூபமாக அவதாரம் ஏற்படுவதென்று ஸங்கல்பமாயிற்று. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அவன்தான் (பரமாத்மாதான்) குரு. உபநிஷத் பாட க்ரமத்தில் முதலில் அப்படித்தான் அவனை குரு ஸ்வரூபமாகச் சொல்லி நமஸ்காரம், சரணாகதி செய்வது. ஸகல உபதேசங்களுக்கும் உறைவிடமாயிருப்பது வேதம். அந்த வேதத்தை லோகத்துக்குத் தந்தது ப்ரம்மா. வேத மந்த்ரங்களைக் கொண்டே ஸ்ருஷ்டி பண்ணி, நாலு வாய்களாலும் நாலு வேதத்தைச் சொல்லிக் கொண்டு ப்ரம்ம வித்யையைத் தருபவர் அவர். ஆனால் அவரையும் படைத்து அவருக்கும் இந்த வேதத்தைப் பூர்வத்திலே தந்தவன் பரமாத்மா. அவனேதான் நம் புத்திக்குள்ளும் ப்ரம்ம ஞான ப்ரகாசத்தை உண்டாக்குபவன். ‘மோக்ஷ நாட்டமுள்ள நான் அவனை சரணடைகிறேன்’ என்று (உபநிஷத் பாராயணம்) ஆரம்பிப்பது வழக்கம்:

யோ ப்ரஹ்மாணம் விததாதி பூர்வம்
யோ வை வேதாச்ச ப்ரஹிணோதி தஸ்மை |
த(க்)ம் ஹ தேவம் ஆத்ம புத்தி ப்ரகாசம்
முமுக்ஷுர்வை சரணமஹம் ப்ரபத்யே ||

இது ‘ச்வேதாச்வதர உபநிஷத்’தில் வருவது1. பரமாத்ம குருவைப் பரமசிவ ஸ்வரூபமாகக் காட்டுவதற்கும் இந்த உபநிஷத்திலேயே ச்ருதி ப்ரமாணம் இருக்கிறது. வித்யா மூலமான வேதத்தை ஸதா ஓதிக் கொண்டிருக்கும் ப்ரம்மா (இவரை ஹிரண்யகர்பன் என்று உபநிஷத் சொல்லும்) பிறந்ததையும் மஹர்ஷியான ருத்ரன் பார்த்துக் கொண்டிருந்தார் என்று அந்த உபநிஷத்தில் ஒரு இடத்திலும், அவரே தான் அந்த ப்ரம்மாவைப் படைத்தவர் என்று இன்னோரிடத்திலும் சொல்லியிருக்கிறது2. ‘மஹர்ஷி’ என்றதால் உபதேசம் பண்ணும் ஆசார்யன் என்று ஆகி விடுகிறது. ‘நமக்கு அவர் சுபமான புத்தியை அநுக்ரஹிக்கட்டும்’ என்று இரண்டு இடத்திலும் பிரார்த்திக்கப்படுகிறது. சுபமான புத்தி — நல்லறிவு — ஆசார்யன்தானே அநுக்ரஹிப்பது? ‘சுபம்’ என்றாலும் ‘சிவம்’ என்றாலும் ஒரே அர்த்தந்தான். மங்களமானது, கல்யாணமானது என்று அர்த்தம். ப்ரம்மம் பரம கல்யாண ஸ்வரூபமானது, ஸ்மரிக்கிறவர்களுக்கு வரம் அருளுவது, மங்களம் என்றே அறியப்படுவது என்று (உபநிஷத் பாராயண) மங்கள பாட ச்லோகம் இருக்கிறது:

அதிகல்யாண ரூபத்வாத்
நித்ய கல்யாண ஸம்ச்ரயாத் |
ஸ்மர்த்ரூணாம் வரதத்வாச்ச
ப்ரஹ்ம தந்-மங்கலம் விது: ||

அந்த சுபம், கல்யாணம், மங்களம் எல்லாமாக இருக்கப்பட்டவர் வரம் அருள்வது என்றால் என்ன வரம்? ஞானத்துக்கேயான உபநிஷத் பாட க்ரமத்தில் இந்த வரத்தைச் சொல்வதால், இது ஞானத்தைத் தவிர வேறென்னவாயிருக்க முடியும்? கொடுக்கிற ஆஸாமி சிவம். அவர் தரும் வரமான ஞானமும் சிவம் — சுபம், கல்யாணம், மங்களம். இந்தப் பரம மங்கள ஸ்வரூபமே நம்முடைய ஆசார்யாள். சிவம், கல்யாணம், சுபம் எல்லாம் அவரே. ஆதி சிவமே ஆசார்ய சிவமாக இப்படி அவதாரம் செய்தது.

“அவதாரமாகி விட்டதா? அப்படியென்றால் அப்பா, அம்மா யார்? எந்த ஊரில் அவதாரம்? ஒன்றும் சொல்லவில்லையே!”

கொஞ்சம் பொறுத்துக்கணும். பரமாத்ம ஸங்கல்பம் ஆகிவிட்டாலே கார்யம் ஆன மாதிரிதான் என்ற அபிப்ராயத்திலேயே அவதாரம் ஆன மாதிரி சொல்லிவிட்டது! ஸங்கல்பம் செய்த போதிலும் உடனே ஈச்வரன் தானாகவே எங்கேயோ ஒரு ஊரில், யாரோ ஒரு அப்பா அம்மாவுக்குப் பிறந்து விடவில்லை.

1 VI.18

2 III.4, IV.12

_____________________________________________________________________________

Most auspicious Divine Guru

It was good fortune for the world that it was decided that the incarnation should take place in the form of a spiritual teacher.  Whether said or not, the Supreme Spirit (Paramatma) alone is the Guru.  In the beginning of Upanishad study system also, He is prayed only in the form of Guru and obeisance and surrender are offered.  Vedas are the treasure house of all holy instructions/teachings.  That Vedas were given to the world by Brahma.  He is the one who is making the creation with the help of Veda mantras and providing the sacred knowledge, reciting the four Vedas through his four mouths.  But he was himself created and given the Vedas earlier by the Supreme Spirit.  Only He is the one who is providing the enlightenment of superior knowledge, in our minds.  It is customary to begin (Recital of Upanishads) with, saying that “being desirous of obtaining salvation, I surrender unto Him”.

Yo Brahmanaam Vidhadaati Poorvam
Yo Vai Vedaacha Brahmanothi Thasmai |
Tha(kh)mha Devam Atma Budhi Prakaasam
Mumukshurvai Charanamaham Prapadye ||

This comes in the Swedhachvathara Upanishad1.

There is written evidence in the Upanishad itself, for the Supreme Teacher to be the manifestation of Paramashiva.  It is mentioned in one place in the Upanishad that Rudra, the Maharishi was watching the birth of Brahma, the one who constantly recites the Vedas, the original source for all knowledge (Brahma is referred to as Hiranyagarbha by the Upanishads) and in another that He (Shiva) is the one who created that Brahma2.  When we refer as ‘Maharishi’, it indicates the spiritual preceptor, who gives his teachings.  In both the places, it is prayed that He should bestow on us, the auspicious mind.  Is it not the holy preceptor who can bestow the auspicious mind – pure knowledge?  Subham and Shivam means one and the same thing.  It means most auspicious, benevolence.  Brahmam is the epitome of most benevolent grace.  One who blesses those who think about Him. There is a verse on auspiciousness, where it is mentioned that He is known as Auspiciousness itself.

Adhikalyaana Roopathvaath
Nithya Kalyaana Samsrayaath |
Smarthroonaam Varadhathvaacha
Brahma Than-Mangalam Vidhuhu ||

What would be the boon that would be given by such a person who is a personification of all grace, benevolence, and auspiciousness?  Since this boon is mentioned in the chapter on Gnana in the Upanishads, what else could it be other than the superior knowledge?  The person who is giving is Shivam.  The boon or blessing given by Him is also Shivam – Subham, Kalyanam, and Managalam.  This most auspicious form is our Acharya.  He is Subham, Kalyanam, and Managalam. The Aadhi Shiva himself has taken incarnation like this.

“Has the incarnation taken place?  If so, who is his mother, father?  Which place incarnation has taken place?  All these have not been told no!”

Some patience is required.  It has been stated that the incarnation has taken place on the basis that once the intention is established, it is as good as done!  Even after it was decided, Eswara, on his own, did not take birth in some place, to some random parents.
________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

1 reply

  1. Excellent
    Jaya jaya Sankara Hara Hara Sankara

Leave a Reply

%d bloggers like this: