
Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this chapter we see Sri Periyava explainx Mahalakshmi’s Anugraham to another great Mahan, ‘Vidhyaranyar alias the Second Sankarar’. Very interesting read. Rama Rama
Many Jaya Jaya Sankara to Shri. B. Narayanan Mama for the translation.
மஹான்களுக்கு அருளிய மஹாலக்ஷ்மி
மஹாலக்ஷ்மியின் பரமாநுக்கிரகத்தைப் பெற்ற இன்னொரு மஹான் ஸ்ரீ வித்யாரண்யர். அத்வைத ஆசாரியர்களில் மிகவும் சிரேஷ்டமான ஸ்தானம் அவருக்கு உண்டு. ஆனால், அவருடைய முழுப் பெருமை இது மட்டுமல்ல. நாலு வேதங்களுக்கும் சேர்த்து பாஷ்யம் பண்ணின மஹாபுருஷர் அவர். ஜோதிஷம், வைத்திய சாஸ்திரம், தர்ம சாஸ்திரம், (ராஜ்ய பரிபாலனம் பண்ண உதவும்) அர்த்த சாஸ்திரம், இலக்கியத்துறை என்றிப்படி எல்லாவற்றுக்கும் கிரந்தங்கள் உபகரித்தவர் அவர். அவருடைய பெயரே காரணப் பெயராக இருக்கிறது. வித்யா – அரண்யர். அரண்யம் என்றால் காடு. ஒரு பெரிய காட்டில் பல தினுசான மரம், செடி, கொடிகளும் மண்டியிருக்கிற மாதிரி வித்யையின் பல துறைகளும் அவரிடம் செழித்திருந்தன.
இவரைப்பற்றி நான் சொல்லப் போகிற கதையை சரித்திர ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்வார்களோ, மாட்டார்களோ? ‘ஹிஸ்டரி’க்காரர் ‘மிஸ்டெரி’(அற்புத நிகழ்ச்சி) வந்தால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், இன்றைக்கும் ஸயன்ஸுக்குப் பிடிபடாத அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.
கதை இதுதான்: பூர்வாசிரமத்தில் வித்யாரண்யர் ஏழைப் பிரம்மச்சாரியாக இருந்தபோது, மஹாலக்ஷ்மியைக் குறித்துக் கடும் தபஸ் இருந்தார். இவருடைய சிரத்தையை மெச்சி மஹாலக்ஷ்மி பிரசன்னமானாள். ஆனால், ஒரு குண்டைத் தூக்கிப் போட்டாள். “இந்த ஜன்மாவில் உனக்குத் திரவியம் பெறுகிற யோக்கியதை இல்லை. அது விதியின் நிர்ணயம். அடுத்த ஜன்மாவில் அநுக்கிரகிக்கிறேன் என்று கூறி அந்தர்த்தானமாகி விட்டாள்.
பிற்காலத்தில் ‘இரண்டாவது சங்கரர்’ என்கிற அளவுக்குப் ப்ரக்யாதி பெறப் போகிறவர் இவர். அதற்கேற்றாற்போல், இப்போதே ஆதி சங்கரர் செய்த ஒரு ‘சாமர்த்திய’த்தை இவரும் செய்து காட்டி விட்டார். அது என்ன சாமர்த்தியம்?
தாம் சந்நியாசம் வாங்கிக் கொள்வதற்கு அம்மாவின் அநுமதியைப் பெறுவதற்காக ஆதிசங்கரர் செய்த சாமர்த்தியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். அம்மாவோடு குளிக்கப்போன பிரம்மச்சாரி சங்கரர் ஆற்றில் முதலையின் பிடிப்புக்கு வேண்டுமென்றே ஆளானார். தாயார்க்காரி பதறினாள். “அம்மா, நீ பதற வேண்டாம். நான் சந்நியாசம் வாங்கிக் கொள்ள நீ அநுமதி தந்தால் முதலை என்னை விட்டுவிடும். ஏனென்றால், துறவு பெற்றுவிட்டால் அது மறு ஜன்மா போலாகும். இந்த ஜன்மாவில் முதலையின் பிடிப்புக்கு ஆளாக வேண்டும் என்று எனக்கு விதி இருக்கிறது. அடுத்த ஜன்மாவில் அது என்னைப் பாதிக்காது” என்றார் சங்கரர். அந்தத் தர்மசங்கடமான நிலையில், பெற்ற தாயார் ஒருத்தி அநுமதி தராமலிருக்க முடியுமா? இவ்விதமாக ஆசாரியாள் சாமர்த்தியம் பண்ணி – தாயாரின் அங்கீகாரம் பெற்று – சந்நியாசியாவதாக அப்போதே சங்கற்பம் செய்து கொண்டார். உடனே முதலையும் அவரை விட்டுவிட்டது.
“இந்த ஜன்மாவில் உனக்கு அருள் பண்ணுவதற்கில்லை” என்று மஹாலக்ஷ்மி வித்யாரண்யரிடம் சொன்னவுடன், இவரும் அதே ‘தந்திர’த்தை (Tactics) மேற்கொண்டார். அதாவது, உடனே சந்நியாச ஆசிரமம் வாங்கிக் கொண்டு விட்டார். “அம்மா! மறு ஜன்மா வந்துவிட்டது. இப்போது ஜஸ்வரியத்தைக் கொடு” என்று லக்ஷ்மியிடம் சொன்னார்.
அவளும் தன் வாக்குப் பிரகாரம் ஸ்வர்ணத்தை வர்ஷித்துவிட்டாள்.
சுற்றிலும் எங்கு பார்த்தாலும் தங்கமும் நவநிதியும் கொட்டிக் கிடக்கிறது. சந்நியாசியான வித்யாரண்யருக்கு அதைப் பார்த்ததும், தாங்க முடியாத ஏமாற்றமும், துக்கமுமாகி விட்டது. ‘அடடா, தந்திரம் செய்வதாக நினைத்தேன்; கடைசியில் ஏமாந்தல்லவோ போய்விட்டேன். வீட்டின் ஏழ்மை போவதற்காக தனம் யாசித்தேன். இப்போதோ துறவியாகி விட்டேன். இனிமேல் எனக்கு ஏது வீடு? சந்நியாசி பணத்தைத் தீண்டவே கூடாதே. சுயம்கிருத அனர்த்தமாக நானாகவே அசட்டுத்தனமாக உபத்திரவத்தை வேண்டி வாங்கிக் கொண்டிருக்கிறேனே! விதிப்பிரகாரம் ஏழையாகவே வாழ்ந்து ஆயுஸை விட்டிருந்தாலும், அடுத்த ஜன்மாவிலாவது இத்தனை ஐச்வரியமும் பெற்று ராஜபோகமாக இருந்திருக்கலாமே” என்று அழ ஆரம்பித்து விட்டார்.
வித்யாரண்யர் மட்டுமில்லை; நம்மில் ரொம்பப் பேர் இப்படித்தான் வேண்டாததற்கெல்லாம் ஸ்வாமியை வேண்டிக்கொண்டு, அவர் நம்மிஷ்டப்படி கிருபை செய்தபின் “அடாடா, நம்மிஷ்டம் என்று ஏன் ஒன்று இருக்கவேண்டும்? அவர் இஷ்டம் என்று விட்டிருக்கக்கூடாதா? இப்போது அறியாமையால் அனர்த்த பரம்பரையை அல்லவா வலிய வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறோம்?” என்று விசனிக்க வேண்டியதாகிறது. நமக்கு எது வேண்டும் என்று அவருக்கே தெரியும் என்று விடுவதுதான் புத்திசாலித்தனம்.
வித்யாரண்யர் மகா புத்திமானாதலால் விசனம் உடனே தெளிந்தது. ஒரு காரணார்த்தமாகத்தான் அம்பாள் இப்படி விளையாடியிருக்கிறாள் என்று புரிந்து கொண்டார்.
அது மாலிக்காபூரின் தட்சிண தேசப் படை எடுப்பை ஒட்டிய காலம். துருக்கனான மாலிக்காபூர் ராமேசுவரம் வரையில் போய் ஹதாஹதம் செய்திருந்தான். முக்கியமாக நம் பிரசித்தி பெற்ற ஆலயங்களையெல்லாம் முக்கியமாக பண்ணினான். நம் தர்மங்களை அழித்தான். அந்த சமயத்தில் அதை எதிர்த்து நிற்க, நல்ல திரவிய வசதியுள்ள ஹிந்து சாம்ராஜ்யம் எதுவும் இல்லை.
இப்போது வித்யாரண்யர் இந்த மஹா பெரிய பரம புண்ணியமான காரியத்தை நினைத்தார். ‘இத்தனை நிதி கொட்டிக் கிடக்கிறது. அம்பாள் அநுக்கிரகத்தால் ஒரு ராஜ்ய பரிபாலனத்துக்கு உதவி பண்ணும் அளவுக்கு நமக்குப் புத்தி தீக்ஷண்யமும் இருக்கிறது. இந்தச் செல்வ பலம், நம் அறிவு பலம் இரண்டையும் கொண்டு ஒரு ஹிந்து சாம்ராஜ்யத்தை மேலோங்கி வருமாறு ஸ்தாபனம் பண்ணுவோம்’ என்று தீர்மானித்தார்.
அவருடைய சொந்த நஷ்டம் ஸநாதன ஹிந்து தர்மத்துக்கே பெரிய லாபமாகப் பரிணமித்தது.
_________________________________________________________________________
Mahalakshmi Who Blessed Great Souls
There was another great MahAn who was fully blessed by MahAlakshmi; his name is Sri VidhyAranyar. He has an elevated position among Adhwaita AchAryAs. But that alone does not account for his fame. He was a great soul who wrote commentary for all the four VEdhAs. He wrote books on Astrology, Medical science (Vaidhya SAstram), Dharma SAstram, Artha SAstram (it helps govern a country), Literature, etc. His name itself is a logically derived one. VidhyA—–Aranyam. Aranyam means forest. As plenty of trees, plants, and bushes are abundantly found in a forest, so also, many branches of VidhyA were mastered by him.
The story which I am going to narrate now about him may or may not be accepted by researchers of history. Historians will not accept anything where mysteries are found! But even today, we keep hearing about surprising incidents that could not be explained by science.
This is the story:–
Before he renounced the world and became a saint, as a poor Brahmin bachelor, he undertook a severe penance towards MahAlakshmi. MahAlakshmi was pleased with his concentration and appeared before him. But She threw a bomb! “You do not have the eligibility to get wealth in this birth; that is fate’s decision; I will bless you in your next birth”—saying thus, She disappeared.
He was going to become so famous as to be called the ‘Second Sankarar’ in the future. In line with that prediction, he did a smart thing exactly like Adhi Sankarar did when He was a bachelor. What was that smart thing?
You are aware of the smart trick that Adhi Sankarar played on his mother in order to get her permission to renounce the world and embrace sainthood. When BrahmachAri Sankarar went to the river with his mother for bath, He purposely got himself entangled into a crocodile’s mouth. Mother was caught in a frenzy of fear and sorrow. Sankarar told his mother, “Mother! Do not fear! If you give me permission to become a Sanyasi, the crocodile will leave me alone. Because, if I renounce the world and accept Sainthood, it is equivalent to taking a fresh birth. Fate has decided that I should get caught by a crocodile in this birth. It will not affect me in my next birth”. Will any mother refuse to grant this, in a delicate uncertainty like this ? AchAryAr acted smartly this way , got his mother’s permission and took the oath for renouncing the world. The crocodile immediately let him go.
When MahAlakshmi told VidhyAranyar that he did not have the eligibility to possess wealth in this birth, he also played the same tactics! He took up sainthood immediately. He told Lakshmi, “Mother ! I got my next birth already. Give me wealth now!”
She, in turn, showered abundant wealth on him as per Her promise.
Gold and all the wealth in the world was heaped around him. But VidhyAranyar who is now a Sanyasi, was overwhelmed with unbearable sorrow and disappointment. “Oh! I thought that I had played a trick and won; but in fact I have cheated myself. I begged for wealth to remove the poverty in the home. But where is the home for me now? SanyAsi should not touch the wealth at all! I have bought myself this difficulty stupidly. Had I continued to live as a poor man and died, I would have at least got all this wealth in my next birth and could have enjoyed life.”—He started crying.
VidhyAranyar was not alone in this situation. Many among us pray God for unwanted things, and after He gives us what we wanted, we cry, “ Oh! Why should there be a thing like ‘Our wants’? Why did I not leave it to Him? Now I have brought on myself unwanted miseries due to my ignorance!” . Leaving everything to Him knowing that He knows what we want, is the wise thing to do.
But, as VidhyAranyar was an intelligent person, His sorrow faded away and clarity came on. He understood that there must be a specific purpose for which AmbAl had enacted this drama!
The time then was around when Mallikapur (the muslim king) started his war on South India. He had gone up to Rameswaram and caused extensive damages. In particular, he did a lot of damage to our temples. He destroyed our DharmAs. At that time there was no Hindu kingdom to oppose him.
Now VidhyAranyar thought of this great ‘Punya Karma’. ‘There is so much wealth here. Due to AmbAl’s Anugraham, I have sufficient intelligence to help run a kingdom. With these two strengths of wealth and Intelligence, we will help a big kingdom to be established’—He decided.
His personal loss became a benefit to ‘SanAthana Hindu Dharmam’.
![]()
One Response
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam