‘உச்சிஷ்டமபி ச அமேத்யம்’. ‘அமேத்யம்’ என்றால் மலம் என்றே அர்த்தம் பண்ணிக் கொள்கிறோம். நேர் அர்த்தம், யஜ்ஞத்துக்கு, அதாவது ஈஸ்வர ஆராதனத்தில் நிவேதனமாக வைப்பதற்கு லாயக்கில்லாதது என்று அர்த்தம். பழையதை, கள்ளை – ஏன் ஸோடா, ஐஸ்க்ரீம், பிஸ்கெட், ஓவல்டின் முதலானதுகளைகூட – நைவேத்யமாக வைப்போமா? எதுவோ ஒன்று இதெல்லாம் பகவானுக்கு அர்ப்பணிக்கத் தகுந்ததல்ல என்று நம் மனஸில் தடுக்குகிறதே! அப்படிப்பட்ட எல்லாம் அமேத்யம்தான். புளியும் காரமும் சேர்ந்த புளியஞ்சாதம் முதலான ராஜஸ ஆஹார தினுஸுகளைகூட மனஸ் உறுத்தாமல் நைவேத்யம் பண்ணுகிறோம் என்பதை இங்கே நினைத்துப் பார்க்கத் தோன்றுகின்றது. தாமஸம் அதற்கும் ஒரு படி கீழே. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
‘Ucchishtamapi cha Amedhyam’. It is interpreted that ‘Amedhyam’ means excreta. It means this food is not fit for offering in the Yagna or to Bhagawan as Neivedhiyam. Will we offer old food or liquor or even items like soda, ice cream, biscuit or Ovaltine as Neivadhiyam to Bhagawan? Something within us tells says these items are unfit for offering to Bhagawan as Neivedhiyam and prevents us from doing so, isn’t it? All these things are ‘Amedhyam’. Here we should remember that without too much guilt we offer as neivedhyam even Rajasa foods like Tamarind Rice, which is a combination of spiciness and sourness. Taamasa foods are much lower than these. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Jaya Jaya Sankara Hara Hara Sankara. Janakiraman. Nagapattinam