‘அறுசுவை என்று சொல்வதில் தித்திப்பு நீங்கலாகப் பாக்கி ஐந்தையும் பகவான் இங்கே ராஜஸம் என்று சொல்லி விட்டாரே! உப்பு, புளி, மிளகாய் இல்லாமலே சாப்பிட முடியுமா? துவர்ப்பு உடம்புக்கு நல்லது கசப்பு ஞான விருத்தி என்றும் சொல்வதுண்டே!’ என்றால் இந்த ஐந்திலே எதையும் அதியாகச் சேர்த்துக் கொள்ளாமல் மிதமாகப் பிரயோஜனப்படுத்த வேண்டுமென்றே பகவான் சொல்வதாக வைத்துக் கொள்ளணும். ரொம்பவும் ஞான வைராக்யமாகப் போகும்போது உப்பு, புளி, மிளகாயை அடியோடு தள்ளி விடுவதுதான் நல்லதென்றாலும், கீதை ஸாமான்ய மநுஷ்யனையும் அவன் இருக்கிற இடத்திலிருந்தே கொஞ்சங் கொஞ்சமாக உசத்திக் கொண்டு போவதால், உப்பு, புளிப்பு, உறைப்பு, துவர்ப்பு, கசப்பு முதலானதுகளை அளவாக, மிதமாகச் சேர்த்துக் கொள்வது என்று வைத்துக் கொள்ளணும். எந்த ‘எக்ஸ்டரீ’முக்கும் – போகாமல் மத்தியில், மிதமாக போவதைத்தான் பகவான் எல்லா விஷயத்திலுமே விதித்து இதே கீதையில் பேசியிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
From among the six tastes, except for sweet, Bhagawan has categorized everything else as ‘Raajasam’! Can one eat food without salt, chilly, and tamarind? Isn’t astringent taste good for health and bitter good for Gnana Vruddhi (Increasing Gnana)? What Bhagawan means by this is, one should consume these in balanced proportion and not in excess. When one progresses to a higher Gnana state it is good to completely avoid salt, tamarind, and chillies; However Bhagavad Gita addresses the normal person and helps him get off from the basic level; it slowly elevates him to the higher level. That is the reason Lord Sri Krishna has spoken about consuming these five tastes in balanced proportion and not in extremes. In fact, balance in all aspects is what Bhagawan talks about in many other slokas of Bhagavad Gita. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply