Sri Periyava Mahimai Newsletter – July 28 2012


Jaya Jaya Sankara Hara Hara Sankara –  In this newsletter from Shri Pradosha Mama Gruham emphasis on listening to Guru’s words and getting his Uttharava (permission) has been highlighted through the experiences of Shri VGP Pannerdas and Shri Narayana Swamy Iyer.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

 

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (28-07-2012)

தூயத்துறவி, மகாஞானி, பிரம்மரிஷி இவர்களின் இலக்கணங்களை உலகோருக்குக் காட்ட விழைந்த பரமேஸ்வரரின் கருணையினால் நமெக்கெல்லாம் பேரருளாக அவர்தம் திரு அவதாரம் சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளாய் அனுக்கிரஹத்துள்ளார்.

திரு.எஸ்.பாண்டுரங்கன் எனும் ஸ்ரீ பெரியவா பக்தரின் அனுபவம் இது (நன்றி : மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்)

இவர் 1972 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்தின் நிர்வாக அறங்காவலராக இருந்தவர். அப்போது திரு. வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் வேலூரில் அவர் நடத்தும் தவணை முறைக்கிளை அலுவலகத்தைத் திறந்துவிட்டு காஞ்சிபுரம் வந்து ஸ்ரீபெரியவாளைத் தரிசிக்க வேண்டுமென்ற ஆவலை இவரிடம் கூறினார்.

திரு. பாண்டுரங்கனும் அவ்வாறே ஸ்ரீமடத்தில் கேட்டு ஸ்ரீ பெரியவா தேனம்பாக்கத்தில் தரிசனம் அருள்வதாக தெரிந்துக் கொண்டார்.

அன்றைய தினம் ஸ்ரீபெரியவா மெளனம். பாரத ஜனாதிபதியாக இருந்த மாண்புமிகு ஸ்ரீ வி.வி.கிரி அவர்கள் அன்றைய  தினம் காலை பத்து மணிக்கு ஸ்ரீ பெரியவாளைத்  தரிசித்துச் சென்று விட்டார். இவர்கள் மாலை ஐந்து மணியளவில் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்கச் சென்றனர். தேனம்பாக்கத்திற்கு திரு. வி.ஜி.பி., அவர் மனைவி, ஒரு புகைப்படக்காரர் என ஐவர் சென்றனர்.

திரு. பன்னீர்தாஸ் புகைப்படம் எடுப்பவரிடம் “மஹா பெரியவா அவர்கள் என்னை ஆசிர்வாதம் செய்யும் சமயம் பல கோணங்களில் படம் எடுக்க வேண்டும்” என்று கூற அவர்களை அழைத்துச் சென்ற பாண்டுரங்கன் “எதற்கும் ஸ்ரீ பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொள்வது நல்லது” என்று தன் அபிப்ராயத்தைக் கூறினார்.

“பெரியவர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கமாட்டார்கள். நாம் தான் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று திரு. பன்னீர்தாஸ் இவரை சமாதானம் செய்துவிட்டார்.

ஸ்ரீ பெரியவா வரச்சொல்லி உத்தரவாக இவர்கள் ஒரு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டார்கள். ஸ்ரீ பெரியவா “எதற்கு வந்தீர்கள்” எனக் கேட்க, பன்னீர்தாஸ் “நான் பத்தாயிரம் வீடு கட்டி தவணை முறையில் கொடுக்க ஒரு திட்டம் ஆரம்பித்துள்ளேன். அதற்கு ஸ்ரீ மஹாபெரியவாளுடைய ஆசிர்வாதம் வேண்டும்” என்றார்.

“இதற்கு எத்தனை பணம் தேவை” என்றார் ஸ்ரீ பெரியவா.

வி.ஜி.பி ஒரு உத்தேச மதிப்பைக் கூறினார்.

“இதற்கு எப்படி உனக்கு பணம் கிடைத்தது” கேட்டார் ஸ்ரீ பெரியவா.

அதற்கு வி.ஜி.பி. “நான் பத்து ஆண்டுகளுக்கு முன் டீ கடையில் வேலை செய்து வந்தேன். சில ஆண்டுகள் கழித்து தவணைமுறைத் திட்டம் ஒன்று ஆரம்பித்தேன். அது வளர்ந்து பல கிளைகள் உருவாகியுள்ளன. எல்லாம் மக்கள் பணம்தான். அதுபோலத்தான் தவணை முறை வீடு கட்டும் திட்டம். தவணை முறையில் பணம் ரோலிங் ஆவது சௌகர்யமாக உள்ளது. இதற்கு பெரிய முதலீடு தேவையில்லை. நம்பிக்கை, நாணயம், தான் எங்கள் முதலீடு” என்றார்.

ஸ்ரீ பெரியவா, “நல்ல திட்டம்தான். வீடு இல்லாத ஏழை குடும்பத்திற்கு உதவியாகவும், நேர்மையாகவும், சேவை செய்யுங்கள்” என்று ஆசிர்வதித்தார்.

அதற்குள் இவர்களுடன் சென்ற கேமராமேன் சுமார் இருபது புகைப்படங்களை எடுத்துவிட்டிருந்தார். ஸ்ரீ பெரியவாளிடம் ஆசி பெற்றபின் “நான் போய் நாலு நாட்களில் இன்று எடுத்த போட்டோ பிரதிகளை அனுப்பி வைக்கிறேன்” என்று பன்னீர்தாஸ் அவர்கள் பாண்டுரங்கனிடம் கூறிச் சென்றார்.

அவர் சென்னைப் போய் ஐந்தாம்நாள் பாண்டுரங்கன் அவர்களுக்கு பன்னீர்தாஸிடமிருந்து ஒரு கடிதம் வந்தது.

“கண்கண்ட தெய்வம் என்றால் காஞ்சி பெரியவாள் தான். விலை உயர்ந்த கேமராவினால் அன்றைய தினம் எடுக்கப்பட்ட போட்டோ படம் ஒன்று கூடப் பதிவாகவில்லை. எல்லாப் பிரதிகளும் கறுப்பாக உள்ளன. நீங்கள் அன்று பெரியவாளிடம் உத்தரவு பெற வேண்டும் என்று சொன்னதை நான் உதாசீனம் செய்தேன். அவர் காட்சிதரும் கடவுள் என்பதை பூர்ணமாக உணர செய்துவிட்டார். அதனால் அப்பேற்பட்ட தெய்வத்திடம் ஆசி பெற்றதே என் பெரும் பாக்யமாகும். அது ஒன்றே எனக்குப் போதும்” என்று எழுதியிருந்தார்.

இப்பேற்பட்ட தெய்வத்தின் அருளால் தான் 1972 முதல் 1975  வரை ஸ்ரீ ஏகாம்பரநாதர் தேவஸ்தானத்தின் அறங்காவலராக எந்த குற்றம் குறை இல்லாமல் பணிபுரிந்ததாக திரு.பாண்டுரங்கன் அவர்கள் மனப்பூர்வமாக உணர்வதாகக் கூறுகிறார்.


மஹா பெரியவாளின் திருவிளையாடல்

ஸ்ரீ மஹாபெரியவா பண்டரீபுரத்தில் தங்கியிருந்தபோது நடந்த சாதுர்மாஸ விரதம் பூராவும் பார்த்துவர ஆசைப்பட்டு திரு.வி. வெங்கடரமணி எனும் பக்தர் தன் மனைவியுடன் சென்றார்.

ஸ்ரீ பெரியவா சந்திரபாகா நதிக்கரையில் அருளிக் கொண்டிருந்தார். நதியில் ஸ்நானம் செய்துவிட்டு தம்பதியினர் தரிசனம் செய்தனர். அப்போது ஸ்ரீ பெரியவா விஷ்ணுபுரம் நாராயண ஸ்வாமி அய்யர் ஆராய்ச்சி செய்து சாதுர்மாஸ விரதம் எப்போது தொடங்க வேண்டும் என்று சமஸ்கிருதத்தில் எழுதியிருந்தக் கடிதத்தை அங்குள்ள பண்டிதர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். பின் இவர்களை விசாரித்துவிட்டு அமரச் சொன்னார்கள்.

விவாதம் முடிந்ததும் ஸ்ரீ பெரியவா பண்டிதர்களை மேற்படி கடிதத்தின் பின்னாலயே தீர்மானம் செய்த முடிவை எழுதச் சொன்னார். பிறகு அந்த விவரங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டு திரு. வெங்கடரமணியை அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு நேரே சென்னைச் சென்று அவர் மனைவியை வீட்டில் விட்டுவிட்டு  பிறகு விஷ்ணுபுரம் சென்று நாராயண ஸ்வாமியிடம் அந்தக் கடிதத்தைக் காண்பித்து, அதற்கான பதிலையும் படிக்கச் சொல்லிவிட்டு இவரை சென்னைத் திரும்புமாறு ஒரு விரிவான உத்தரவை நல்கினார்கள்.

இவையாவும் நடக்கவேண்டியது அந்த மாதத்தின் பதினாறாம் தேதி. உடனே ஸ்ரீ பெரியவாளிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு திரு. வெங்கடரமணி மனைவியுடன் புறப்பட்டுவிட்டார். ஆனால் சாதுர்மாஸ சங்கல்பம் பார்க்கமுடியவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. இருந்தாலும் ஸ்ரீ பெரியவா இட்டத் திருக்கட்டளையை நிறைவேற்றும் பாக்யம் கிட்டியதில் மனம் சமாதானமானது.

அன்று ஆஷாட ஏகாதசி புண்யதினமாக அமைந்தது. அதனால் ஸ்ரீ ருக்குமாயிவிட்டல் தரிசனம் செய்வது அன்று விசேஷம். அவர் மனைவியும் “ வந்தது வந்தோம் சாதுர்மாஸ விரதத்தில் ஸ்ரீ பெரியவாளுடன் இருக்கத்தான் கொடுப்பினை அமையாமல் போயிற்று, ஸ்ரீ ருக்குமாயிவிட்டல் நாதரைத் தரிசித்துவிட்டு போகலாமே” என்று தன் விருப்பத்தைக் கூறினார்.

ஸ்ரீ பெரியவா இவர்களை நேராகச் சென்னை செல்லவேண்டுமென்று கூறியிருந்தபோது இப்படி அதை மீறிப் போகலாமா என ஒரு எண்ணம் ஏற்பட்டது. இருந்தாலும் சுவாமி தரிசனம் தானே செய்யப்போகிறோம், தவறில்லை எனத் தோன்றியது.

அங்கே கோயிலில் பெருங்கூட்டம். க்யூவில் நின்று தரிசிப்பதென்றால் முடியாத காரியம். அங்கு நின்ற போலீஸ்காரரிடம் தங்கள் அவசரத்தைச் சொல்லி க்யூவில் நிற்காமல் தரிசித்துச் செல்ல வழியுள்ளதா எனக் கேட்டார். அதற்கு டி.எஸ்.பி. யின் உத்தரவு வேண்டுமென்று போலீஸ்காரர் சொல்லிவிட்டார்.

அதனால் அவசர அவசரமாக தங்கள் உடைமையான ஒரே பெட்டியை அங்கிருந்த பூக்காரனிடம் ஒப்படைத்துவிட்டு டி.எஸ்.பி யை பார்க்கச் சென்றனர். அவர் சாப்பிடப் போயிருந்ததால் பார்க்க முடியவில்லை.

ஆகையால் கோயிலைச் சுற்றியாவது வரலாமென்று வலம் வந்தனர். அப்படி சுற்றிவரும்போது ஒரு கர்நாடக சிறுவன் தென்பட்டான். அவன் பள்ளியில் படிப்பவன் போலிருந்தான். இவர்களிடம் அச்கிறுவன் ஓடிவந்து “சுவாமியைப் பார்க்க வேண்டுமா? நான் காட்டுகிறேன்” என்று வலியவந்து இந்தியில் கேட்க இவர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

இத்தனை பெரும் கூட்டத்தில் இச்சிறுவன் சுவாமியைக் காட்டுகிறேன் என்கிறானே என்று நம்பிக்கையில்லாமல் அவன் பின் சென்றனர். அவன் ஒரு கதவிற்கு அருகே இவர்களை அழைத்துச் சென்று அதிலுள்ள ஓட்டை வழியாக பார்க்கச் சொன்னான். அடடா திவ்ய தரிசனம்! அந்த ஓட்டை வழியாக சுவாமி நன்றாக தரிசனமாயிற்று. மிக திருப்தியுடன் அவர்கள் திரும்பிப் பார்க்கையில் அந்த சிறுவனைக் காணவில்லை. மாயமாய் மறைந்தது போலிருந்தது.

சுவாமி தரிசனம் செய்த திருப்தியுடன் இருந்தவர்களுக்கு தங்கள் பெட்டிபற்றி நினைவு வந்துவிட்டது. அப்பெட்டியை முன்பின் தெரியாத ஆளிடம் ஓப்படைத்துவிட்டு வந்துவிட்டோமே நேரமாகிவிட்டதே என்றக் கவலையுடன் அதில் ஸ்ரீ பெரியவா கடிதமும் இவர்கள் பணமும் இருந்ததால் மிகவும் கலக்கமுண்டாயிற்று.

பெரிய மனக்கலவரத்துடன் இவர்கள் அந்த பூக்காரனைத் தேடி ஓடினார். அப்போது ஒரு ஆச்சர்யம். ஒரு வயதானவர் தலையில் முண்டாசும் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு நெற்றியில் சந்தனத்துடன் கையில் தடியும் வைத்தபடி தோன்றினார்.

மஹாராஷ்டிர பிராமணர் மாதிரி இருந்தவர் இவர்கள் எதுவும் கேட்காதபோதே “உங்கள் பெட்டியெல்லாம் ஜாக்கிரதையாக உள்ளது. கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிவிட்டு சட்டென மறைந்துவிட்டார்.

அவர் சொன்னபடி பெட்டியில் எல்லாம் சரியாக இருந்தது. பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ்பிடித்து ஷோலாப்பூர் ரயில் நிலையம் வந்துவிட்டனர். ஆனால் ரிசர்வேஷன் க்யூவில் இவர்கள்முன் வரை ரிசர்வேஷன் கிடைத்தது. இவர்களுக்குக் கிடைக்கவில்லை. முன் பதிவு செய்யாத பெட்டியில்தான் இடம் கிடைத்தது. சிரமப்பட்டுப் பயணம் செய்து சென்னை வந்தனர்.

அப்போது இவருக்கு ஒரு உண்மை புரிந்தது.

ஸ்ரீ பெரியவா கட்டளையின்படி நேராக சென்னை சொல்லாமல் மீறியதற்கான சிறுதண்டனையாக இப்படி முன்னேயிருந்தவர் வரையில் ரிசர்வேஷன் கிடைத்து தங்களுக்குக் கிடைக்காமல் போயிருப்பதில் உணரமுடிந்தது.

அதே சமயம் மிக அதிசயமாக அவர்கள் விரும்பிய ருக்குமாயிவிட்டல் தரிசனத்திற்கு வழி செய்த சிறுவனும், பெட்டி பத்திரமாயிருக்கிறதென்று சொன்ன பெரியவரும் திடீரென்று தோன்றி மறைந்த அதிசயத்தால் அவர்கள் யாருமில்லை, சாட்சாத் சர்வவியாபியான சர்வேஸ்வரர்தான் என்று பூர்ணமாக வெங்கட்ரமணி உணரும் பாக்யம் அடைந்தார்.

இப்படி எங்கும் நிறைந்தருளும் பரப்பிரம்ம சொரூபமான பெருங்கருணையான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் அருள் நம்மையெல்லாம் காத்து ரட்சித்து சகல மங்களங்களையும், சகல ஐஸ்வர்யங்களையும் அளித்து ஆனந்தவாழ்வு நல்கும் என்பது சத்தியமே!

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய்) – சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

_____________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (28-07-2012)

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

This is an experience narrated by Shri S. Pandurangan (Thanks: Mahaperiyava Darisana Anubavangal).

Shri Pandurangan was the Administrative Officer at Kanchipuram Shri Ekambaranathar temple Devasathanam (Office) during 1972. During that time, Shri V.G. Paneerdas (VGP) had opened his new branch of the money lending center at Vellore and expressed his interest to have Periyava’s darshan to Pandurangan.

Pandurangan called Srimatam and found out that Periyava was camping at Thenambakkam. On that day, Periyava was observing silence. In the morning around 10 am, former Indian President Shri V.V. Giri had Periyava’s darshan. Five people including Shri VGP, his wife, a photographer reached Thenambakkam around 5 pm.

Paneerdas instructed the photographer to take multiple pictures at different angles, when Periyava is blessing him. On hearing this, Pandurangan suggested to get permission from Periyava before taking pictures.

Paneerdas replied, “Periyava will not pose for any photograph. We only need to use these kind of opportunities for takin pictures.”

As Periyava asked them to come, all of them sat near the window. Periyava asked the reason for their visit. Paneerdas informed Periyava that, he is starting a project of building 10,000 houses to be sold to people who can pay monthly installments and he had come for Periyava’s blessings.

Periyava asked how much money will be needed for the project and also gave an estimated amount. He continued to ask the source of the money for this project.

Shri VGP replied, “I was working in a tea stall before 10 years. Then I started money lending center and it has expanded to various places. These are people’s money. Similarly I am also starting this housing project. This does not requires lot of initial investment. Trust and honesty are two of our major investment.”

Periyava replied, “This is a good plan. This will help lot of poor families who do not have proper homes. Please do your service with honesty.”

During this time, the photographer had taken around 20 pictures. After getting Periyava’s blessings, they got ready to leave. Paneerdas said to Pandurangan, “After I return, in another 4 days, I will send you the copies of the picture.”

Five days after Paneerdas left, Pandurangan received a letter from him. It said, “Periyava is the living God of our times. All of the pictures that were shot using the expensive camera has come blank. None of it had captured the picture. I ignored your advice to get Periyava’s permission before taking pictures. He made me realize that He is the God who decides and know what is supposed to happen. I am very happy that my proposal has been blessed by Periyava.

Shri Pandurangan says that, it is due to Periyava’s blessings that he was able to perform his duties at Ekambaranathar temple from 1972 until 1975 without any problems.


Mahaperiyava’s divine play

Shri Venkataramani and his wife had a desire to visit Periyava at Pandaripuram and participate in the Chaturmasya Vratham.

Periyava was blessing His devotees at banks of river Chandrabagha. The couple bathed in the river and went for Periyava’s darshan. During that time, Periyava was discussing with some Pundits about Vishnupuram Narayana Swami Iyer’s research article on Chaturmasya Vratham. After that Periyava enquired the couple and asked them to sit.

After the discussion, Periyava asked the Pundits to write the final outcome in the same letter. Then He asked them to read it completely for one time. Once He was satisfied, he gave the letter to Venkataramani, asked him to go to Chennai, drop his wife and then to go to Vishnupuram and read the response in the letter to Shri Narayana Swami and then go back to Chennai.

All these were supposed to happen before 16th of the month, so Venkataramani got permission from Periyava and started to Chennai. He was feeling sad that he was unable to witness the Chaturmasya Vratham. He consoled himself that he was still carrying out the order of Periyava.

All these happened on Ashada Ekadashi. It was an auspicious day to have Rukmayi’s darshan. So Venkataramani’s wife suggested her desire to have Rukmayi Vittal darshan on that day before they left for Chennai. Even though they had to miss Periyava’s Chaturmasya Vratham, they at least wanted to have Vittal’s darshan before they went back.

For a second, they thought if it was a good decision to visit the temple, as Periyava had asked them to go back to Chennai directly. But since they were visiting the temple, they decided to go ahead.

They were disappointed on reaching the temple. Since it was Ekadashi, the darshan queue extended for miles. They decided that it was impossible to have darshan that day. They informed a policeman in the temple about their travel plans and requested if they can have a quick darshan. The policeman informed them that only if they had permission from the local DSP, they will be allowed to have darshan skipping the queue.

So they kept their luggage at a flower shop and went to meet the DSP. They could not meet the police chief, since the DSP had gone for a lunch break. Since they had travelled so far, they decided to at least circumambulate the temple praharam once. They saw a young boy who looked like a school student. The young boy came to them and asked in Hindi, “Do you want to have darshan of Pandurangan?” They were surprised to hear that, but were also skeptical if the young kid can help with the darshan on such a crowded day. They still followed the young boy. The young boy took them through a door. He asked them to look through a hole in the wall. What a wonderful darshan it was? They were able to have the darshan very clearly. When they turned around after having darshan, the boy was nowhere to be seen. It looked as if the boy had disappeared.

After Vittal’s darshan, they remembered that they had left their luggage with a stranger. They were worried because the bag had the letter that Periyava gave and also money for them to go back to Chennai. Worried, they ran towards the flower shop. They saw an old man with a turban on his head, wearing pachagacham, with sandalwood on his forehead and carrying a stick. He looked like a Maharashtra Brahmin, and before they could ask anything, told them, “Do not worry about your luggage, they are safe” and vanished from that place.

Just like what was told, their luggage were safe. They picked up their luggage, went to the bus stand and took a bus to Sholapur Railway station. As they were standing in the line for the tickets, they realized that the reserved seats were over with the person who stood before them in the queue. It was a little difficult journey to travel in the unreserved compartment until Chennai.

He realized a truth at that time.

Since they did not follow Periyava’s order of directly starting to Chennai, they had to miss the reserved seats and had to travel in the unreserved compartment. They also realized that the young boy and the old man who appeared suddenly and also disappeared in the same way, were also the blessings of Sarveshwaran.

If we pray to Periyava, who was the God for everyone across various religion, we will be blessed will happiness and peace.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

 

 

 



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

%d bloggers like this: