சமைத்துப் போடுகிறவர்களைச் சொல்லும்போது தாயாரும், பத்தினியும் பண்ணினதானால் பரவாயில்லை என்று வழக்கிலிருப்பதைச் சொல்லிவிட்டு, உடனே அவர்களும் நல்ல தெய்வ நினைப்போடு பண்ணிப் போடாவிட்டால் பிரயோஜனமில்லை என்று Veto [எதிர்வோட்டு] மாதிரியும் ஒன்று போட்டு விட்டேன்! சாப்பிடுகிற நாம் வேண்டுமானால் “கோவிந்தா கோவிந்தா” என்று சாப்பிடலாம். சமைத்துப் பரிமாறுகிற பெண்டுகள் தெய்வ நினைப்போடுதான் அப்படிப் பண்ணும்படியாக நாம் எப்படிக் ‘கம்பெல்’ செய்ய முடியும்?
இப்படித்தான் சொல்லிக் கொண்டுபோய் உங்களையெல்லாம் ‘அப்போ ஸ்வாமிகள் என்னதான் பண்ணணும் என்கிறார்? பட்டினி கிடக்கச் சொல்கிறாரா?” என்று நினைக்கும்படிப் பண்ணினேன்.
“க்ளப்பும் கூடாது, அகத்து மநுஷ்யர்களும் கூடாது என்றால்?” என்பதுதானே ‘கொஸ்ச்சின் மார்க்’ (கேள்விக் குறி)? இதற்கு பதில் சொல்வதுதான் என் முக்கிய உத்தேசம். ‘ஸ்வயம் பாகம்’- அவனவனும் தன் ஆஹாரத்தைத் தானே சமைத்துக்கொள்ளணும் – என்பது தான் பதில். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
While speaking about people who prepare the food, I mentioned it is okay to eat food cooked by one’s mother or wife, which is the usual practice. However I also cast my veto against them as well, since the food they cook will not do any good if not prepared with divine thoughts. We who eat the food can chant ‘Govinda’, ‘Govinda’ and eat it. How can we compel the women who cook to have divine thoughts while preparing and serving the food?
I made you all wonder ‘What does Swamigal want us to do? Remain hungry?’ The question mark is, ‘If one cannot eat in restaurants, and also not eat food prepared by people at home, then?’ Answering this question is my main intent. The answer is ‘Swayam Paakam’ – Self cooking is my answer. –
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply