Periyava Golden Quotes-785

இத்தனை வேளைதான் என்று கணக்கேயில்லாமல் ஹோட்டலைக் கண்ட இடத்தில் காஃபி, டிபன் என்று போகிறதற்கு ஏற்க எல்லாருக்கும் இத்தனைதான் வியாதி என்று கணக்கில்லாமல் ஆயிருக்கிறது! குடியரசு யுகம் என்பதற்கு ஸரியாக எல்லாவற்றிலுமே ‘க்வாலிடி’யைவிட ‘க்வான்டிடி’தான் முக்யமென்றாகியிருப்பது ஆஹார விஷயத்திலும் நடந்திருக்கிறது! எங்கே பார்த்தாலும் ஹோட்டல் வைத்து எதையாவது தின்னச் சபலம் ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, அந்த வஸ்துவின் தரத்தைப் பற்றிக் கவலையேயில்லை. இந்தத் தரம் ‘க்வாலிடி’, ருசியில் மட்டுமில்லை. பதார்த்தம், சமைத்துப் போடுகிறவர்கள் என்ற இரண்டின் ஸாத்விகம்தான் ஆஹாரத்தின் ‘க்வாலிடி’யை நிர்ணயிப்பவை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

People consume tiffin and coffee in any hotel they see and any number of times. That is the reason there are so many diseases today. In the Republic Yuga, importance is given to ‘quantity’ rather than ‘quality’; this applies to everything. The same has happened on the food front as well. Opening of restaurants everywhere has increased the desire to eat with no attention being paid to the quality of the foodstuff. The ‘quality’ is determined not only by the taste but also by the materials used in cooking and by the person who cooks it. The real ‘quality’ of the food is determined by the Sathvik nature of the two factors mentioned above. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: