Periyava Golden Quotes-784

பஞ்ச கோசங்களில் அன்னமயம்தான் முதல். அதிலிருந்து பேரின்பம் என்கிற ஐந்தாவதான ஆனந்தமய கோசத்துக்குப் போக வேண்டுமே தவிர அதோடேயே நின்று விடக் கூடாது. அதுவும் ஒரு கோசமாக இருப்பதால் அதை அடியோடு அலக்ஷ்யம் பண்ணி நிந்திக்கவும் கூடாது. “அன்னத்தை நிந்திக்கப் படாது; நிறைய அன்னத்தை விருத்தி பண்ணு” என்றெல்லாம் உபநிஷத்தே சொல்கிறது. அதற்காகக் கண்ட வேளைகளில், கண்டதை, கண்ட பேர் கையிலிருந்து வாங்கித் தின்ன வேண்டுமென்று அர்த்தமில்லை. வசனமே இருக்கிறது, ஒரு வேளை சாப்பிடுபவன் யோகி, இரண்டு வேளை சாப்பிடுபவன் போகி, மூன்று வேளை சாப்பிடுபவன் ரோகி என்று. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Among the Pancha Kosam (five layers in humans) it is said that Annamaya Kosam is the first layer progressing all the way till the blissful fifth layer called ‘Anandamaya Kosam’. One should progress from the first to the fifth and not stop at the first state itself. Since it is the first state it should not be neglected either. One should not mistreat the food he eats. Upanishads speak about the importance of Annam. But that does not mean one should eat food at all odd places, cooked by anyone and everyone. There is a proverb – ‘he who eats one meal a day is a Yogi, he who eats two meals a day is a Bhogi, and he who eats three meals a day is a Rogi’. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: