Periyava Golden Quotes-782


வெறும் சீடை, வெல்லச் சீடை, முறுக்கு, என்று கோகுலாஷ்டமிக்கு. பிள்ளையார் சதுர்த்தியா?- அதிலே பிள்ளையார் அளவுக்கு முக்யம் மோதகம்! ஸங்க்ராந்திக்குச் சர்க்கரைப் பொங்கலை வைத்தே ‘பொங்கல்’ என்றே பேர். தீபாவளிக்கு எத்தனை ‘ஸ்வீட்’ உண்டோ, உப்பு தினுஸு உண்டோ தின்றுதான் ஆகவேண்டுமென்று நரகாஸுரன் கிருஷ்ண பரமாத்மாவிடம் வரமே வாங்கிக் கொடுத்திருக்கிறான்! நவராத்திரி என்றால் சுண்டல். அம்பாளுக்குப் பௌர்ணமி பூஜையா? சர்க்கரைப் பொங்கல், வடை, சித்ரானங்கள். ஸுப்ரமண்யருக்குத் தேனும் தினைமாவும். தினைப்பாயஸங்கூட உண்டு. ராம நவமிக்குப் பாயஸம், பானகம், வடைப்பருப்பு. வைகுண்ட ஏகாதசி, சிவராத்திரி, ஷஷ்டி மாதிரி உபவாஸமிருக்கிற வ்ரத தினங்களை விட சுசி ருசியாக, தினுஸு தினுஸாகச் சாப்பிடுகிற பண்டிகைகள் தான் ஏராளமாக இருக்கின்றன. சாஸ்திரம் சொல்கிறபடி உஷத் காலத்திலிருந்து மாத்யான்ஹிகம் வரையில் நன்றாகக் கர்மாக்களை உழைத்துச் செய்துவிட்டு அப்புறம் இப்படிப் புஷ்டியாகச் சாப்பிடுவதால் அது நன்றாக உடம்பில் ஒட்டவும் ஒட்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Normal Seedai, Jaggery Seedai, Murukku are items made for Gokulashtami (Sri Krishna Jayanthi). If it is Vinayaka Chaturthi, Modaks are made, which are as important as Pillayar Himself! Sankaranthi is called as ‘Pongal’ because of the prepartion of Sakkarai Pongal. During Deepavali one has to consume sweets and salt dishes as much as possible because of the boon by given by Lord Sri Krishna to Narakasura. If it is Navaratri, Sundal is made. During Pournami Puja for Ambal, Sakkarai Pongal, Vada, Chitra Annams (varieties of mixed rice) are prepared. Lord Subramanya is offered Honey, Thinai flour (millet flour) and Thinai Payasam (Kheer). For Sri Rama Navami, there are Payasam, Paanagam and Vadai Paruppu. As compared to the number of upavas (fasting) days like Vaikunta Ekadasi, Sivaratri, Sashti, etc. there are more festival days where one gets to eat many delicious varieties of food items. If one follows the Sastras and does all the Karmas from dawn to noon (Ushath Kaalam to Maadhyanikam) and thereafter consumes sumptuous food, it does well for the body also. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Jaya Jaya Sankara Hara Hara Sankara, Janakiraman. Nagapattinam

Leave a Reply

%d