Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 6

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava’s subtle relationship with this Guru and his ascendancy as Peetathipathi has been explained here by Shri Ra Ganapathi Anna.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the series, translation and a beautiful drawing…Rama Rama

ஸ்ரீ ரா.கணபதி  கண்ட  மஹாபெரியவா. (அவர்  எழுத்திலேயே)

ஆறாம்படி

ஸ்வாமிநாதன் ஸ்வாமிகளாவதற்கு முந்தைய ஆண்டு, அப்போதைய ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் திண்டிவனத்திலிருந்து சில கல்கள் அப்பாலுள்ள சாரம் என்ற கிராமத்தில் முகாமிட்டிருந்தார். அதற்குச் சிறிது காலத்திற்கு முன்பு அவர் திண்டிவனத்திற்கு அருகிலுள்ள மற்றோர் ஊரான பெருமுக்கலில் சாதுர்மாஸ்யத்திற்காக எழுந்தருளியிருந்தார். அப்போதே அப் பீடாதிபதி ஸ்வாமிகளுக்கும் ஸ்வாமிநாதனுக்குமிடையே ஒரு காந்த ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. பன்னிரு பிராயப் பள்ளி மாணவனிடம் ஜகதாசார்யரொருவர் அந்தரங்கமாக உரையாட அப்படி என்ன விஷயம் இருக்கும் என ஊரார் வியக்கும் விதத்தில் இருவரிடையே சந்திப்புக்களும் ஏற்பட்டிருக்கின்றன. ஆயினும் அந்த ஸாமீப்ய சந்திப்புக்களை விடவும் சாதுர்மாஸ்யம் முடித்துப் பீடாதிபதிகள் விச்வரூப யாத்ரை என்பதாக இரு மாத முகாமிலிருந்து புறப்பாடு செய்து அவ்வூர் ஆலயத்திற்குச் செல்ல, ஆலயத்திலிருந்த ஆசார்ய தேவரை எட்டத்திலிருந்து பாலகன் பார்த்தபோதே அவனுக்கு “இன்னன்னு சொல்லத் தெரியாத ஏதோ ஓண்ணு மனஸுலே ஆழப் பதிஞ்சுது!

தமது வெளி வாழ்க்கை விவரங்கள் ஏராளமாக, தாராளமாக இக்கட்டுரையாசிரியனிடம் கூறியுள்ள மஹா பெரியவாள் தம்முடைய உள்வாழ்க்கை விவரங்களை மட்டும் ‘டிப் ஆஃப் தெ ஐஸ்பெர்க்’க்கும் குறைவாகவே காட்டியதில், மேலே சொன்னதற்கதிகம் தெரிவிக்காமல் கழற்றிக் கொண்டுவிட்டார்.!

ஆக, அந்த ‘இன்னன்னு சொல்லத் தெரியாத ஏதோ ஒண்ணு’ பாலகனைச் சும்மா இருக்கவிடவில்லை. அப்போதைக்கு அப்பா – அம்மாவோடு அவன் ஊர் திரும்பினானாலும், சிறிது காலத்திற்குப் பின் பீடாதிபதிகள் சாரம் கிராமத்திற்கு விஜயம் செய்திருக்கிறாரென்று தெரிந்தபோது அந்த ‘ஏதோ ஒண்ணு’ அவனை உந்திக் கிளறியது; வீட்டை விட்டுக் கிளப்பியது.

ஓருநாள் விடியுமுன்னர் வீட்டினரிடம் சொல்லிக் கொள்ளாமல் ஸ்ரீமட முகாமுக்குப் புறப்பட்டான்.

ஒரு துணை சேர்த்துக்கொள்ள இளநெஞ்சு விரும்பியது. கிளாஸ்மேட் கிருஷ்ணஸ்வாமியின் வீட்டுக்குச் சென்றான். கும்பகர்ண உபாஸனை நன்கு செய்து கொண்டிருந்த அவனை ரகசியமாகக் ‘கடத்தி’ப் போக முடியாததால், அவனுடன் உறங்கிக் கொண்டிருந்து, சட்டென விழிப்புப் பெற்ற அவனுடைய உறவுக்காரப் பிள்ளை ஒருத்தனைச் சப்தம் செய்யாது தன்னோடு வருமாறு ஸமிக்ஞை செய்தான்.

சிட்டுக்கள் இரண்டும் பறந்தன.

ஆசார்யபாதரின் ஸ்ரீபாதத்தை நாடி ஓடிக் கொண்டிருந்த பாலனுக்குக் கால் வலி கண்டது. அயனாக அச்சமயம் பார்த்து மடத்து வண்டி ஒன்று சாரம் நோக்கிப் போவது தெரிந்தது. அந்த வண்டியைப் பிடித்து அதில் ஏறிச் செல்லலாம் என்ற எண்ணத்தில் இரு சிறுவர்களும் வலித்த காலை மேலும் கடுக முடுக்கி விரைந்தனர்.

அப்போது ஸ்வாமிநானின் ஆனந்தம் ஒரு க்ஷணம் பொங்குமாறு வண்டிக்கு முன்னே பீடாதிபதிகளின் மேனா செல்வதையும் கண்டான். ஆயினும் அந்த ஆனந்தம் ஏன் ஒரே க்ஷணந்தான் பொங்கிவிட்டு அமுங்கிப் போயிற்றென்றால்., மேனாவை தூக்கும் போயிகள் அதி வேகமாகச் சென்று கொண்டிருந்தார்கள். சுற்றுப்புற கிராமம் எதற்கோ முன்னாள் விஜயம் செய்துவிட்டுப் பீடாதிபதிகள் இன்று இவ்விளங் காலையில் சாரம் முகாமுக்கு அவசரமாக விரைந்து கொண்டிருக்கிறார் என்பது புத்திசாலிப் பிள்ளைக்குப் புரிந்து விட்டதால், மேனா தரிசனத்தோடு சரி, மேனாரூடரை இப்போது தரிசிப்பதற்கில்லை என்பதை ஒரு மாதிரி ஜீர்ணித்துக் கொண்டான்.

முதலில் எண்ணியபடி மடத்து வண்டியில் இடம் கேட்க வேண்டியதுதான் என்று சிறுவர்கள் விரைந்து சென்று அவ்  வண்டியைப் பிடித்தும் விட்டனர்.

வண்டிக்குள் ‘கார்வார்’ ஸ்ரீ வேங்கடராமய்யர் இருந்தார்.

தெலுங்கில் ‘காருபாரு’ என்றால் ஆட்சி நிர்வாகம். அதை வைத்துப் பெரிய ஸ்தாபனங்களின் நிர்வாகத்தில் முக்கியமான பொறுப்பு வகிப்பவருக்கு ‘கார்வார்’ என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீ மடத்தின் தலைமை அதிகாரிக்கு ‘ஸ்ரீகார்யம்’, ‘ஏஜண்டு’ என்று பெயர்கள். ‘ஸர்வ முக்தியார்நாமா’ என்பதுமுண்டு. அடுத்து கஜானா அதிகாரியான ‘கஜான்ஜி’. மூன்றாவதாகக் ‘கார்வார்’. அப்புறம் ‘மேஸ்திரி’.

ஸ்ரீ மஹா பெரியவாள் பீடம் ஏறுவதற்குப் பல்லாண்டு முன்பே ஸ்ரீமடத்தில் சிப்பந்தி ஆன வேங்கடராமய்யர் பெரியவாளது பீடாதிபத்தியத்திலும் நெடுங்காலம் கறாராகக் கார்வார் செய்தவர்.

அந்தக் கறாரை அவர் அன்று அந்தச் சிறாரிடமும் காட்டிவிட்டார்!

வண்டியில் இடம் கேட்ட ஸ்வாமிநாதனிடம், “மடத்தைச் சேர்ந்தவர்களுக்குத்தான் மடத்து வண்டி” என்று விதிமுறை காட்டி, ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டார்.

முறுக்குப் பாட்டி விலை குறைத்துக்கொள்ள மறுத்தது போல! இப்படியும் இன்னொரு பரிபவம் தவக்குழந்தைக்கு!

ஆனால் அப்போது பாட்டியம்மையிடம் சவால் விட்டாற்போல இப்போது அவன் ஏதும் செய்யவில்லை.

தொடர்ந்தான் ‘நடராஜா ஸர்வீ’ ஸையே!

பாலர்கள் சாரம் முகாமை அடைந்தனர்.

முகாமில் குருநாதர் மலர்ந்து வரவேற்றார், சுத்தப் பிரேமையின் சாரமாக!

‘தனியாக இரண்டு சிறுவர்கள் வந்ததெப்படி?’ என்று கேட்காமல், ஸர்வ ஸஹஜமாக, “ஸ்வாமிநாதா, இங்கேயே இருந்துடேன்!” என்றார்.

பிற்காலம்தான் அதை எத்தனை  தீர்க்க தரிசன வாக்காகக் கண்டது? ஆனால் அக் காலத்திலோ? இதற்கு முன் பாலகனுக்கும் ஸ்ரீகுருவை தரிசித்த சமயங்களில் வீடு திரும்பாமல் அவரோடயே இருந்தாலென்ன என்று தோன்றியதுண்டு. ஆனால் குறிப்பாக இச் சமயத்திலோ? பாலகன் அகத்தில் சொல்லிக்கொள்ளாமல் ஏதோ வேகத்தில் வந்து விட்டாலும், இப்போது தன்னை – ஸகாவையுந்தான் – காணாமல் அவரவர் வீட்டினர் எப்படித் தவிப்பார்கள் என்ற உணர்வைப் பெற்றுவிட்டதால் பீடாதிபதிகளிடம் உண்மையை ஓளிக்காமல் சொல்லி, சீக்கிரமே விடை தர உத்தரவு கேட்டான். (பிற்பாடும் அவன் அகத்தில் சொல்லிக் கொள்ளாமல்தான் ‘அங்கேயே இருந்து விடு’வதற்காக ஸ்ரீமடத்தினரால் கொத்திக் கொண்டு போகப்பட்டான்!)

“வந்தது வந்தே! ரெண்டு நாளாவது இருந்துட்டுப் போ. ஆத்துக்கு இப்பவே தகவல் அனுப்பிச்சுடறேன்” என்றார். சிறுவனிடம் தன் ஞான புத்திரனைக் கண்ட வாத்ஸல்ய குருநாத பிதா.

தகவலும் உடனே அனுப்பினார்.

இரண்டு நாள்களானபின் ஸ்வாமிநாதனுக்கு விடை தரும்போது சிப்பந்தி ஒருவரிடம் அவ்விரு பிள்ளைகளையும் ஸ்ரீமடத்து வண்டியிலேயே திண்டிவனத்திற்குக் கொண்டுவிடுமாறு ஆணை பிறப்பித்தார்.

மடத்தை சேர்ந்தவருக்கே மடத்து வண்டி என்ற நியாயப்படியும் அவர் இந்தப் பிள்ளைக்கு இந்த அதிசயமான வாஹன உபசாரம் செய்யலாம்தானே? ஆம், அப்போதேதான், ஏன், அதற்கு முந்தி ஸ்வாமிநானைக் கண்டவுடனேயேதான் அவர் தமது வாரிசாக அப்பிள்ளையை ஸங்கல்பித்தாயிற்றே!

மடத்து வண்டியில் வீடு புறப்பட்ட பாலர் அச்சமயம் கார்வார் அவர்களை நேரில் காணவில்லை. ஆயினும் மடத்து விவகாரங்கள் அணுவும் தப்பாமல் கறாராக கவனித்து வந்த அவர் இரு பள்ளிப் பிள்ளைகளுக்காக வண்டி அனுப்பப்பட்ட அதிசயத்தைத் தெரிந்து கொண்டேயிருப்பார். உள்ளூரப் பரிபவமும் பட்டிருப்பார். பாட்டியம்மை கதையேதான்!

அப்புறம், நாலைந்து மாதங்களுக்குள்ளேயே இந்த ஸ்வாமிநாதன் அடுத்த பீடாதிபதிபராகத் தேர்ந்தெடுக்கப் பட்டபோது, அன்றைய அவசர நெருக்கடியில் அப்போது ஸ்ரீமடம் முகாமிட்டிருந்த கலவையிலிருந்து வாரிசை அழைத்துவர கோவேறுக் கழுதை பூட்டிய வண்டியாக்கும் அனுப்பப்பட்டது! கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல நடுவழியில் ஸ்ரீமடத்தின் தனிப் பெரும் ராஜதானியான காஞ்சியிலேயே இளங்கோ எதிர்ப்பட, கோவேறு விலங்கு பூட்டிய வாஹனம் அங்கேயே அவனை ஏற்றிக் கொண்டு கலவை கொணர்ந்து சேர்த்தது.

இது சர்வ நிச்சயமாக கார்வாருக்குத் தெரிந்தே இருக்கும். ‘தெரிந்தே’ மட்டுமில்லை. வண்டியனுப்ப முடிவு செய்ததிலேயே  அவர் பங்கும் இருந்திருக்கும்.

ஆயினும் இங்கும் அவரது பரிபவத்தை நமது கட்டுரை நாயகர் நேரில் காணவில்லை.

அப்புறம் சில காலமாயிற்று. இப்போது ஸ்வாமிநாதன் ஸ்வாமிகளாகிக் கார்வாருக்கும் மேலே ‘காருபாரு’ செய்யும் யஜமானர்!

அன்று ஏதேனும் விசேஷ நாளாக இருக்கலாம். மடத்து வண்டிகளுக்கெல்லாம் வர்ணம் அடித்து அலங்கரிக்கப்பட்டது.

பார்வையிடுவதற்காக ‘யஜமான’ ஸ்வாமியை அந்தக் கார்வார் அவர்களே அழைத்து வந்தார்!

அத்தனை வண்டிகளையும் தனது ஒளிக் கண்ணைச் சுழற்றிப் பார்த்தார் பாலகுருஸ்வாமி. கார்வாரையும் பார்த்தார் – பொருள் பொதிய; அவருடைய உள்ளத்திலேயே அந்தப் பொருள் புதைய!

‘ஒரு வண்டியில் இடம் தர மறுத்தோம். இன்று அத்தனை வண்டியும் அவரைச் சேர்ந்தது’ என்ற எண்ணத்தில் கார்வாரின் முகம் குனிந்தது.

குனிந்த முகத்தைக் குளிர நிமிர்த்தியது பாலகுரு ஸ்வாமியின் பாலான வாக்கு! பரிபவ உணர்வைத் துடைத்து இதம் செய்யும் பரிவுமொழி! அதில் நயமான நகைச்சுவையும்!

“அன்னிக்கு மடத்தைச் சேர்ந்தவாதான் வண்டில ஏறலாம்னுது! இப்போ இந்த வண்டி எல்லாம், இந்த மடமே, என்னெச்  சேந்துதுன்னு பண்ணியிருக்கேள். ஆனா இப்பவும் நான் ஒரு வண்டியிலகூட ஏறமுடியாதபடிதான் இருக்கு” என்றார். சக்கரம் போட்ட வண்டியில் ஏறுவதேயில்லை என்ற துறவற நியமத்தை கறாராகக் கைக்கொண்ட ஸந்நியாஸச் சக்கரவர்த்தி!

___________________________________________________________________________________

MAHAPERIAVA  AS  SHRI Ra.GANAPATHY  SAW  HIM.

(IN  HIS  OWN  WORDS)

STEP 6.

The  year  before  Swaminathan  became  ‘Swamigal’,  the  then  Sree  Kamakoti  Peetathipathi  was  camping  in  a  place  called  ‘ SAram’   a  few  miles  away  from  Tindivanam.  Still  before  that  time  He  had  camped   for  Chaturmasya  Vratam  in  another  village  Perumookkal  also  near  Tindivanam (as  we  have  already  seen).  There  existed,  at  that  time  itself,  a  magnetic  attraction  between  Swamigal  and  Swaminathan.  There have  been    meetings  between  them  which  made  the  village  folks  wonder  what  sort  of  confidential  matters  the  JagatAcharyar  could  have  had  to  talk  to  a  twelve  year  old  school  boy.  But  more  than  those  meetings,  when  the  Peetathipathikal  concluded  His  Chaturmasya  Vrata  and  went  to  the  village  temple  in  Viswaroopa  YAtrA,  Swaminathan  had  a  look  at  Him  from  a  distance,  and  at  that  time  only,  “something  which  cannot  be  expressed  was  etched  deep  into  my mind.”

Mahaperiava,  had  given  plenty  of  details  on  His  outside  life  to  this  writer (Ra.Ganapathy),  but  what  He  had  given  about  His  ‘inner’  life   was  less  than  the  ‘tip  of  the iceberg’.  Hence  He  did  not  give  more  details  than  what  He had   said  before.

Therefore,  the  ‘something  which  could  not  be  expressed’  did  not  allow  the  boy  to  keep  quiet.   Though  he  returned  home  with  his  parents  then,   after  sometime  when  he  came  to  know  that  Peetathipathi  had  come  down  to  the  village  Saram   that  ‘Something’  pushed  him  and  drove  him  from  home.

One  day,  he  left  for  the  SreeMatam  camp  before  sunrise,  without  telling  anybody  in  the  house.

His  tender  heart  wanted  to  take  somebody  with  him  for  company.  He  went  to  his  classmate  Krishnasamy’s  house.  As  he  was  having  a  sound  sleep,  he  could  not  ‘abduct’  him  ‘secretly’.  But  a  relative  of  his  who  was  sleeping  by  his side  woke  up.  He  called  him   silently  and  asked  him  to  accompany  him.

The  two  birds  flew  off.

The  young  boy  who  was  running  after  the  ‘Sree  PAtham’  of  the  AchAryA,  felt  a  lot  of  pain  in  the  legs.  Exactly  at  that  time,  a  cart  belonging  to  Sree  Matam  was  proceeding  towards  SAram.  Hoping  to  get  a  ‘lift’  in  that  vehicle,  the  two  boys  increased  their  speed  unmindful  of  the  pain  in  the  leg.

Swaminathan,  to  his  great  pleasure  saw  the  ‘MEnA’ (palanquin)  of  the  Peetathipathi   going  in  front  of  the  cart.   But  it  was  only  a  momentary  pleasure  as  the  MEnA  was  going  very  fast.  As  he  soon  understood  that  Peetathipathikal  was  returning  to  ‘SAram’  camp in  the  early  morning    urgently  after  visiting  a  neighbouring  village,   he  digested  the  inevitable—that  he  could  only  have  Darsan  of  the  MEnA  and  not  its  occupant.

As planned  before,  they  returned  to  the  cart  behind  and  decided  to  ask  for  a  lift.  ‘KArvAr’ Sree  Venkatramaiyer  was  sitting  inside  the  cart.

In  Telugu  language, ‘KArubAru’  means  administration   of  the  government.  Based  on  that,  those  who  hold  important  positions  in  big  organizations  used  to  be  called  ‘KArvAr’.   The  top  administrator  of  Sree  Matam  was  called  ‘KArubAru’,  or  ‘Agent’.   They  were  also  called  ‘Sarva mukthiyArnAmA’.  Next  to  him  was  the  treasurer  who  was  called  ‘GajAnji’.  The  third  in  line  is  ‘KArvAr’,  and  then  the  Supervisor (Maestri).

Sree  Venkatrama  Iyer  who  was  an  employee  of  Sree  Matam  many  years  before  Periava  ascended  the  Peetam,  was  serving  as  ‘KArvAr’  for  a  long  time  during  Periava’s  reign  as  Peetathipthi.

The  ‘KArvAr’  showed  his  ‘karAr’ (strictness)  on  the  boys  that  day!

He  told  Swaminathan,  who  asked  a  lift, “The  Sree  Matam  cart  is  only  for  the  use  of  those  belonging to the  Matam”,  and  refused  to  take  him  in  the  vehicle.

Just  like  the  ‘Murukkup  Patti’( the  old  woman  who  sold  ‘Murukku’)  who  refused  to  give  him  discount !  The  Divine  child  had  one  more  such  disrespect  shown  to  him!

But,  Swaminathan  did  not  throw  any  challenge  this  time,  as  he  did  with  the  ‘Murukku  Patti’.

He  continued  walking.

The  boys  reached  the  ‘SAram’  camp.

GurunAthar  welcomed  him  with  the  essence  of  pure  love.

Instead  of asking how  the  two  boys  came  there,  He  said,  “Swaminatha !  Why  don’t  you  stay  here  itself?”

Oh!  How  the  future  proved  those  words  to  be   words  of  prophecy ?  But  at  that  time ?  Swaminathan  also,  in  his  many  previous  visits  to  have  the  Darsan  of  his  ‘Parama  Guru’,  had    in  fact  desired  to  stay  back  there  and  not returning  home.  But  now,  as  he felt  that  his  and  his  friend’s families  will  be  worried  at  their  sudden  disappearance,  he  told  Peetathipathi  the  truth and  asked  for  leave. (Later  also,  he  was  ‘picked’  by  the  folks  of  Sree  Matam  to  be  there  for  good,  without  telling  the  family !)

“You  have  come  anyway;  stay  here  for  at  least  two  days  and  then  leave.  I  will  send  the  message  to  your  home.”—  Gurunathar,    who  found  His  ‘GnAnaPuththiran’ ,  told  the  boy  with  a  lot  of  affection.

He immediately  sent  the  message  also.

After  two  days,  He ordered  an  attendant  to  take  the  two  boys  in  the  Sree  Matam   vehicle itself  and  leave  them  in  Tindivanam.

As  per  the  rule  of  Sree  Matam  that  its  vehicle  is  solely  for the  use  of  Sree  Matam  personnel  only,  He  probably   could  allow  the  vehicle  to  be  used  for  leaving  the  two  boys,  is  it  not ?  Yes,  He  had  already  decided  during his  previous  visits,  that  he(Swaminathan)  would  be  the  heir—in—charge.

When  Swaminathan  left  in the  Sree  Matam  cart,  he  did  not  see  the  ‘KArvAr’.  But  he,  who  has  been  looking  after  the  affairs  of  Sree  Matam  minutely  would  have  certainly  known  the  fact  that  the  vehicle  had  been  sent  to  leave  them  home,  and  might  have  felt  a  little  guilty.  The  story  (of  Murukku  Patti)  repeats!

Within  the  next  four  or  five  months,   when  Swaminathan  was  elected  as  the  next  Peetathipahi,  because  of  the  critical  circumstances  prevailing  then,   a  vehicle  drawn  by  a  mule  was sent  from  Kalavai  to  fetch  him!  But  on  the  way,  in  Kancheepuram  itself  the  vehicle  met  with  Swaminathan  and  took  him  to  Kalavai.

This  would  have  been  certainly  known  to  the  ‘KArvAr’, and  also  he  would  have  been  a  part  to  that  decision.

But  now  also  Sree  Saranal  did  not  have  the  opportunity  to see  him.

Some  more  time  passed  and  Swaminathan  became  the  Swamigal,  who  would  ‘KArubAru’ over  the  ‘KArvAr’!

It  was  probably  a  special  day.  All  the  vehicles  of  Sree  Matam  were painted  fresh  and  decorated.

The  same  ‘KArvAr’  lead  his  ‘boss’  Swami  to  have  a  look  at  them.’ |

The  ‘Bala  GurusAmi’  looked at  all  the  vehicles  with  His  shining  eyes,  and  looked  at  the  ‘KArvAr’  also—-a  meaningful  glance.

‘KArvAr’s   face   hung  a  little  with  the  thought,  ‘  I  refused  to  give  Him  a  lift  in  one  vehicle,  but  now  all  these  vehicles  belong  o  Him’!

But,  the  kind  words from  BalaGuru  lifted  his  hung  face—-soothing  words  which  wiped  off  his  feeling  of  guilt.  Laced  with   a  little  humour !

“That  day,  it  was  a  rule  that  only  those  belonging  to  Matam    can  use  the  vehicle.  Now  you  have  made  it  that  all  these  vehicles,  and  the  whole  Matam  belong  to  me.  But  now  also I  am  not  destined  to  get  into  any  vehicle.”—said  the  ‘SanyAsa  Chakravarthi’,  who  had  adopted  the  dictum  of   renunciation,  that  He  would  not  travel  in  any  vehicle  fitted  with  wheels!

TO  BE  CONTINUED………

 

 



Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

Leave a Reply

%d bloggers like this: