Periyava Golden Quotes-777



‘சாத்விக ஆஹாரமென்றால் கிளப் (ஹோட்டல்) கூடாது, கான்டீன் கூடாது என்று ஸ்வாமிகள் சொல்வாரென்று எதிர்பார்த்தோமானால், அவர் இன்னும் ஒரு படி மேலே போய் அகத்து மனுஷ்யர்கள் சமைத்து போடுவதற்கும் தோஷம் கொண்டு வந்து விட்டாரே!’ என்று தோன்றும்.

க்ளப், கான்டீன், ஹாஸ்டல், மெஸ் இதுகள் எதையும் நான் ஒப்புக் கொள்வதற்கில்லை. நானென்றால் என்ன? சாஸ்திரம் சொல்கிறதை, சாஸ்திரஜ்ஞர் சொல்கிறதைத்தான் நான் ஒப்பிக்கிறேன். சாஸ்திரம் ஒப்புக்கொள்கிறதை நான் ஒப்பிக்கிறேன்! க்ளப்பிலும் ஹாஸ்டலிலும் ஹைஜீன் சுத்தமே இருக்குமா என்பது ஸந்தேஹந்தான். வெளியிலே எல்லாம் ‘நீட்’டாக இருந்தாலும் உள்ளே எத்தனை அசுத்தமிருக்குமோ? இதிலே சுத்தமாயிருக்கிறதென்றே வைத்துக் கொண்டாலும் ஆசார சுத்தி, பண்ணுகிறவர்களின் மனஸ் சுத்தி என்பது இங்கெல்லாம் கொஞ்சங்கூட இருக்காது. பகவத் ஸ்மரணையோ, நாம் நன்றாயிருக்க வேண்டுமென்ற பிரேமையான எண்ணமோ, ஆசார அநுஷ்டானமோ துளிக்கூட இல்லாத எவனோ சமைத்துப் போடுகிறதைச் சாப்பிடுவதில் ஒரு நல்லதும் வராது. வேறே எந்தத் தொழிலும் கிடைக்காமல்தான் அநேகமாக இதற்கு வருவானாதலால் அவனுக்குப் புத்தியும் அதிகமிருக்காது. இந்த நாளில் எல்லாரையும் பிடித்து ஆட்டுகிற பொருளாசை, ஸினிமா (காமம்), பாலிடிக்ஸ் (க்ரோதம்) இவற்றில்தான் அவன் தோய்ந்து போனவனாயிருப்பான்.  அதனால் இவன் கைச் சாப்பாடு நல்லது பண்ணாதது மட்டுமில்லாமல் கெடுதலே பண்ணும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

This thought might come to you: ‘We expected that by saying Sathvik food, Swamigal did not want us to eat at hotels or canteens. But he is going a step further and finding fault even with the food cooked at home!’

I will not accept the eating out at a Club (Hotel), Canteen, Hostel, Mess, etc. When I say I won’t accept it, I am only repeating what the Sastras and the Sastragnas (people well versed in the Sastras) say. I’m only reiterating what the Sastras permit! It is doubtful if the food served in hostel and clubs are hygienic. Even though it may appear ‘neat’ externally, do we know how the quality is inside? Even if we agree that the food is pure, the person who prepared will definitely not have a pure mind. What is the point of eating the food cooked by someone who does not have any Bhagwath Smarana, Aachara Anushtana, or who does not have any love or affection for us? We will derive nothing good out of the food prepared by such persons. This person might have landed up in this profession because he did not find any other job; he might not be a bright person too.  Like all others these days, he too will be immersed in movies (desires) and politics (anger). Therefore the food prepared by him will do no good but will cause harm to us. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: