Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him-Part 5

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyava’s knowledge as an young boy and his attachment/detachment at various times has been explained here by Shri Ra Ganapathi Anna.

Many Jaya Jaya Sankara to Shri B. Narayanan Mama for the series, translation and a beautiful drawing…Rama Rama

ஸ்ரீ ரா.கணபதி  கண்ட  மஹாபெரியவா. (அவர்  எழுத்திலேயே)

ஐந்தாம்  படி

ஸ்ரீசரணரின் பதினோராம் வயதில், 1905-ல், அவருக்கு உபநயனமாயிற்று. அதற்குப் பீடாதிபதிகள் பிரஸாதங்கள் அனுப்பியும் இருக்கிறார். என்றாலும் அப்போதுங்கூட பாலனை அவரது திருச்சந்நிதிக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்விக்கவில்லை. சில காலம் பின்னர் திருமுக்கல் முகாமில்தான் நமது குருநாதன் தமது பரமகுருநாதரை முதன்முறை கண்டது.

தேவ பாஷையைத் தாய்மொழிபோலவே கொண்டிருந்த நமது தேவதேவர் பதினோரு பிராயத்தில் பிரம்மோபதேசம் பெறும் வரையில் ஸமஸ்கிருதம் ஆனா-ஆவன்னாகூட எழுதப் படிக்க அறிந்ததில்லை! சிதம்பரத்திலும் விழுப்புரத்திலும் திண்டிவனத்திலும் அவர் படித்த பள்ளிகளில் ஸமஸ்கிருதம் போதிக்கப்படாததே காரணம். உபநயனம் ஆனவுடன் திண்டிவனத்தில் ஒரு ஸமஸ்கிருத பண்டிதர் நடத்தி வந்த ட்யூஷன் வகுப்புக்கு அனுப்பப்பட்டார்.

பாடம் படிப்பதோடு, உபநயனம் ஆனதும் அந்தணச் சிறுவர்கள் ‘வழக்கமா கத்துக்கற’தை ஸ்ரீசரணரும் கற்றார் என்பதால், புருஷ ஸூக்த, ஸ்ரீஸூக்த, ஸ்ரீருத்ர – சமகாதிகளும், விஷ்ணு ஸஹஸ்ரநாமமும் கற்றிருப்பார் எனக் கொள்ளலாம்.

இங்கு ஒரு முக்கியமான விஷயம் – திருத்தம் – தெரிவிக்கவேண்டும். பல பெரியோர்களிடம் வாழ்க்கை அவர்களுக்குப் புகட்டிய பாடம் என்ன என்ற தலைப்பில் கட்டுரைகள் பெற்று பாரதீய வித்யா பவனத்தார் ‘பவன்’ஸ் ஜர்ன’லில் வெளியிட்டு வந்தனர். அதில் ஸ்ரீசரணாளின் கட்டுரை 1961-ல் வெளியாயிற்று. அக் கட்டுரையில், சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் ஸ்ரீகாமகோடி பீடாதிபத்தியம் தமக்கு வாய்த்ததை அறிந்து, தாம் பதறியதையும் கதறியதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். அந்த நெருக்கடியில் அவர் ராமநாமம் ஒன்றையே பற்றியிருந்ததாகவும், அக்காலத்தில் அவர் மதசம்பந்தமாக அறிந்திருந்ததே அது ஒன்றுதான் என்றும் கட்டுரை கூறுகிறது.

இந்த நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஒரு பதின்மூன்று வயஸு பிராம்மணப் பிள்ளைக்கு – அதுவும் – ஸ்ரீமடத்துடன் விசேஷத் தொடர்பு கொண்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவனுக்கு – ராமநாமம் தவிர மதவிஷயம் எதுவும் தெரியாதிருந்ததாகக் கண்டது விசித்ரமாக இருந்தது. அதோடு ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் எழுதியுள்ள ஸ்ரீ மஹாபெரியவாளின் வாழ்க்கை வரலாறான ‘ஸ்ரீஜகத்குரு திவ்ய சரித்திர’த்திலோ [பெரியவாளின் தாயாராகிய] “மஹாலக்ஷ்மி அம்மாள் தம் குழந்தைக்குத் தாம் அறிந்த ஸ்தோத்திரச் செய்யுட்களையெல்லாம் சொல்லி வைப்பார். இளஞ் சுவாமிநாதருக்கு அவற்றை மனப்பாடம் செய்வதில் விருப்பம் அதிகம்” எனக் காண்கிறது. ஸ்ரீ ஸாம்பமூர்த்தி சாஸ்திரிகள் ஸ்ரீசரணாளின் சாக்ஷாத் பூர்வாசிரமத் தம்பியார், ஸ்ரீசரணாளை விட ஐந்தே வயது சிறியவர், தாமே அம்மாவிடம் ஸ்தோத்திரம் கற்றவரும்.

இதுதவிர, பெரியவாளே நினைவுகூறும் இன்னொரு பாலகாண்ட விருத்தாந்தமும் உண்டு; பெருமுக்கல் ஸ்ரீமட முகாமுக்கு அண்டையூர் அந்தணப் பிரபு ஒருவர் ஆர்ப்பாட்டமாக வந்தாராம். பணம் கொழுத்த தமக்கு அன்றைய ஆசார்ய ஸ்வாமிகள் விசேஷ கவனம் அளித்துக் கௌரவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் அவர் வந்திருந்தார். ஸ்வாமிகளோ அப்படியொன்றும் செய்யாமல், மற்ற சாமானிய சிஷ்ய கோடிகளுடன் உரையாடலைத் தொடர்ந்தார். பிரபுவிக்குக் கோபம் வந்துவிட்டது. ஆதி ஆசார்யாளின் ச்லோகத்தைச் சொல்லியே அன்றைய ஆசார்யரைத் ‘தாக்க’ வேண்டும் என்ற ‘திவ்யமான’ எண்ணத்தில், “காஷாயாம்பர பஹூக்ருத வேஷ:| உதர நிமித்தம் பஹூக்ருத வேஷ:” என்பதாக ‘பஜ கோவிந்த’த்திலிருந்து ஒரு பாணத்தை எடுத்து எய்தார். வயிற்றைப் போஷித்துக் கொள்வதற்காக மாந்தர் போடும் பல வித வேஷங்களில் காஷாயம் தரித்த வேஷதாரி ஸந்தியாஸிகளக் குறிப்பிட்டுக் காட்டும் ச்லோகம் அது. ஆசார்ய பீடத்திற்கே அந்தக் களங்கத்தைக் கல்பித்து தனவான் கூசாமல் கோஷம் போட்டுவிட்டார். ஆயின் அவர் கூறியது பீடாதிபருக்கு லவவேசமும் பொருந்தாது என்பது எவருக்கும் தெளிவாயிருக்கும். ஏனெனில் வயிற்றை வளர்க்கும் வேஷதாரி சந்நியாசியாக அன்றைய மடாதிபர் இருந்தால் மடத்தின் பெரிய வயிற்றையும் வளர்ப்பதற்காகத் தனவான்களுக்கே கவனம் தந்து பிறரைத்தானே புறக்கணித்திருப்பார்?

சாந்த ஸத்வ ஸம்பன்னரான ஸ்வாமிகளை ‘பாணம்’ ஒன்றும் செய்யவில்லை. அவர் பாட்டுக்கு இருந்தார்.

ஆனால் அங்கேயிருந்த மடத்து வித்வானொருவருக்குப் பொறுக்கவில்லை. வெகு நயமாக அவர் அதே ‘பஜ கோவிந்த’த்திலிருந்து வேறொரு பாணத்தை எடுத்து எதிர்த் தாக்குதல் செய்தார்! “மா குரு தன – ஜன – யௌவன கர்வம்; ஹரதி நிமேஷாத் – கால; ஸர்வம்” என்றார். ‘பணத்தாலும், ஆள்கட்டாலும், யௌவனத்தாலும் கர்வம் கொள்ளாதே. காலன் நிமிஷத்தில் இவ்வனைத்தையும் கவர்ந்து விடுவான்’ எனப் பொருள்.

பணம் படைத்தவரைப் பாணம் சுருக்கெனத் தைக்க, அவர் மூஞ்சியைத் தொங்கப் போட்டுக்கொண்டு போய்விட்டார்!

(இக்கதைக்குத் தொடர்ச்சி உண்டு. பிற்பாடு எப்போதேனும் பார்ப்போம்.)

சம்பவம் நடந்தபோது பால ஸ்வாமிநாதன் அங்கு இருந்தான். அவனது ஃபோடோக்ராஃபிக்’ நினைவில் அது பதிவாகி நீண்ட காலத்துக்குப் பின்பும் பக்தகோடிகளுக்கு ஃபோடோ’ப் பிரதிகள் கிடைத்து வந்தன!

இதை இங்கு எடுத்துச் சொல்லக் காரணம், அப்பெருமுக்கல் முகாம் நடந்த நாளிலேயே ஸ்வாமிநாதனுக்கு, ‘பஜ கோவிந்தம்’ தெரிந்திருந்ததாக இதிலிருந்து நாம் பெறுவதால்தான். ஸ்ரீசரணாள் நினைவு கூர்ந்த பாணியிலிருந்து அவர் அந்த ஆதி நாளில் ‘பஜ கோவிந்தம்’ அறிந்திருந்து, முதலில் ப்ரபு அதை உதாஹரித்த போது பதற்றமடைந்ததையும், பிற்பாடு வித்வான் பதிலடியாக உதாஹரித்தபோது குஷிப்பட்டதையும் தெரிந்துகொள்ள முடிந்தது.

1967-ல் ஸ்ரீசரணாள் மஹாநந்தியில் முகாமிட்டிருந்தபோதுதான் ‘பவன்ஸ்’ கட்டுரை விஷயமாக அவரிடம் பிரஸ்தாவிக்க முடிந்தது.

“அப்படியா வந்திருக்கு?” என்று கேட்டார்.

பெரியவாளின் அதிசயத் துறவு மனப்பான்மையில் இது ஓர் அருமையான அம்சம். வெகு நுணுக்கமாக ஒரு விஷயத்தில் ஈடுபட்டு அதில் அதீதப் பற்றுதல் கொண்டிருப்பவராகப் பல காலம் காணப்படுவார். அதன் விளைவாக ஒன்று ஏற்படும்போதோ பற்று அறவே அற்று ஒதுங்கி நிற்பார்! பவனத்தாரின் வேண்டுகோளை நிறைவேற்றுவதில் நிரம்ப ஈடுபாடு காட்டி, பேராசிரியர் ஒருவரிடம் விவரங்கள் கொடுத்து ஆங்கில ஆக்கம் செய்யப் பணித்தார். ‘ஆக்கும்’போதே அவராகக் கேட்டும், தாமே அவரைக் கேட்டும் மாற்றங்களும் கூறினார். புகழ் பெற்ற அப் பேராசிரியரின் ஆங்கிலத்தையே அவரும் புகழுமாறு சில இடங்களில் திருத்தியும் கொடுத்தார். ஆனால் தட்டெழுத்துத் தாள்கள் முழுக் கட்டுரை உருவில் சமர்ப்பிக்கப்பட்டபோது, ‘பேருக்கு’ப் புரட்டிப் பார்த்துவிட்டு சரி சொல்லிவிட்டார். பிற்பாடு அது அச்சில் பிரசுரமாகி வந்தபோதோ, தலைப்பு, மத்தியில் ஏதோ ஓரிடம், முடிவு ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அடுத்த கட்டுரைக்குப் போய்விட்டார். ஆறாண்டுக்குப் பின் இப்போது நிதானமாக, “அப்படியா வந்திருக்கு?” கேட்கிறார்.!

“[வேத] பாடசாலையில் படிச்சோ, பாகவதாளோட ஸங்கத்துலேயே வளர்ந்தோ [மதநூல்கள்] தெரிஞ்சுக்கறதோட பாத்தா எனக்கு அப்ப தெரிஞ்சது ரொம்ப கொஞ்சந்தான். ஆனா அந்த [நெருக்கடிச்] சமயத்துல அது எதுவுங்கூட மனஸுக்கு வராம ராமநாமாதான் வந்துது. அதை [ஆங்கில ஆக்கம் செய்த பேராசிரியரின் பெயரைச் சொல்லி]……….இடம் சொல்லியிருப்பேன். அவர் இந்த மாதிரிப் புரிஞ்சுண்டு எழுதிட்டார் போல இருக்கு” என்றார்.

நூலுருவிலும் அக் கட்டுரைகளின் தொகுப்பு வந்திருப்பதால் தற்போது திருத்தம் தெரிவித்தால் அடுத்த பதிப்புக்களில் சரி செய்வார்கள் என்று ரா.க. விஞ்ஞாபிக்க,

“அதெல்லாம் ஓண்ணும் இப்பக் கௌறிண்டு இருக்க வேண்டாம்!” என்று முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

ஸ்ரீ பெரியவாள் வாய்மொழியாகச் சொல்லி ஆங்கிலத்தில் ரூபம் பெற்ற அக் கட்டுரையை ரா.க.வே ஆங்கிலத்திலிருந்து தமிழ் செய்ததுண்டு. பெரியவாள் போட்ட முற்றுப்புள்ளி வைபவத்தால் போலும், அவர் உடல் உகுக்கும் வரை பல மலர்களுக்கு அத் தமிழ் வடிவைப் பிரசுரிக்க அநுமதி தந்த சமயங்களிலும் அவனுக்கு இந்தத் திருத்தம் செய்யவேண்டும் என்று நினைவு வரவில்லை! இப்போது அவரது ஸ்தூல உடல் முற்றி இற்றுப்போன பின்னரே நினைவு வந்து திருத்தம் அச்சேறுகிறது!

__________________________________________________________________________________
MAHAPERIAVA  AS  Shri Ra.GANAPATHY  SAW  HIM. (IN  HIS  OWN  WORDS)

STEP 5.

Upanayanam  was  performed  for  Sree SaranAl   at  the  age  of  11,  in 1905. The  then  PeetAthipathi  had  even  sent  ‘PrasAdham’  to  him. But  Swaminathan  was  not  taken  to  His ‘Sannidhi’  to  obtain   His  blessings.   Some  time  later  on  Perumookkal  camp  only  our  GurunAthar  had  the  Dharsan  of  his ‘Parama  Guru’  for  the  first  time.

Our  MahAPeriava (Swaminathan),  who  handled  Samskrit  as  His  own  mother tongue, did  not  know  ‘ABCD..’  of  Samskrit  till  his  BrahmOpadEsam.  The  reason  for  this  was  that  in  the  schools  in  Chidambaram, Vizhuppuram  and  Dindivanam  where  he  did  his schooling,  did  not  teach  Samskrit.  After  the  Upanayanam  he  was  sent  for  tuition  to    a   Samskrit  Pundit  in  Dindivanam.

We  can  infer  from  the  statement  “Along  with  the  study  of  school  lessons,  after  the  Upanayanam,  I  learnt  what  was to  be  learnt  by    Brahmin  boys  after  Upanayanam,”  that  Sree  SaranAl  learnt   Purusha  Sooktam,  Sree  sooktham  etc.,  Sree  Rudram  Chamakam  etc.,  and Sri  Vishnu  SahasranAmam  etc.

An  important  matter—correction—must  be  mentioned  here.  Bharathiya   Vidya  Bavan  requested  and  obtained  articles  from  various  ‘Mahan’s  with  regard  to  what  life  had  taught  them  and  published  them in  their  journal  ‘Bavan’s  Journal’.  Sree  Saranal’s   article  appeared  in  the  year 1961.  In  that  article  He  has  mentioned  how  He  was  shocked ,  worried  and  cried  on  hearing  that  He  was  to  take  over  the  Peetam.  In  that  critical  situation,  He  had  known  only  Rama  NAmA,  and  that   was  the  only  thing  He  had  known  on  matters  of  religion.

It  was  strange  that  in  the  beginning  of  this  century (20th),  a  thirteen  year  old  Brahmin  boy,  that  too  one  belonging  to  a  family  which  was closely  associated  with  Sree Matam,  would  not  know  anything  related  to  his  religion  other  than  Rama  NAmA.  Moreover,    in  the  biography  of  MahaPeriava   Sri Jagatguru  Divya  Charithram’,  written  by Sri  Sambamurthy  Swamikal,  it  is  mentioned,  that  “Smt.Mahalakshmi,  Periava’s  mother,  used  to  make  her  children  learn  all  the  Stotram  verses  known  to  her.  Swaminathan  showed  much  interest  in  learning  them”.  Sri  Sambamurthy  Swamikal  was  the  brother  of  our  ‘PoorvAsrama’  Sree  Saranal.  He  was  just  five  years  younger  to  Him.  He  himself  learnt  StOtrAs  from  his mother.

Besides  this,  there  is  another  young—age  incident  which  Periava  remembered.  Once,  a  rich  Brahmin  baron  from  a  nearby  place,  came  to  the  Perumookkal  camp  with  a  lot  of fanfare.  He  had  come  with  a  lot  of  expectation  that  the  then  Acharya  Swamikal  sould  give  him  special  attention  and  honour  him.  But  Swamikal  did  not  do  anything  like  that  and  continued  his  conversation  with  His  humble  Sishyas.  The  baron  got  terribly  annoyed.  With  the  ‘noble’  intention  of  ‘attacking’  the  Acharya  with  a  slOkA  of  Adhi  Acharya,  he  threw  at  the  Acharya this  slOkA  from  Bajagovindam,  “KAsAyAmbara  Bhahukrta VEsha: ! Udara nimittam  Bhahukrta  VEsha:!”  It  identifies  one  of  the  various  disguises  used  by  humans,  robing  themselves  with  the  knew  Bajagovindam  in  those  early  dayssaffron  clothes, for  the  sole  purpose  of  filing  the  stomach.  The  baron  shouted  the  slOKA  and  tarnished  the  image  of  the  Acharya  Peetam  itself.  But  it  would  be  clear  to  everyone  that  the  slOkA  would  not  apply  to  the  Peetathipathi.  Because,  if  the  intention  of  the  Peetathipathi  were  to  disguise  Himself  with  saffron  clothes  in  order  to  fill  the  stomach,  He  would  have  certainly   honoured  rich  persons  in  order  to  fill  the  big  stomach  of  the  Matam  itself,  and  ignored  others.

The  ‘bullet’  did  not  affect  in  the  least,  the  Swamigal,  the  epitome  of  truth.  He  just  kept  quiet.

But,  one  of  the  Sree  Matam’s  pundits,  could  not   control  himself.  He  quietly  threw  at  the  baron  another  slOkA  from  Bajagovindam:  “MA  kuru  Dhana  Jana  Youvana  Garvam;  Harathi  NimEshAt—kAla:  sarvam.”  The  meaning  of  this  slOkA  is  “Do  not  become  arrogant  due  to  wealth,  support  of  people  around  you,  and  youth.  Time  will  wipe  out  all  these  in  a  minute.”

This  (counter)  bullet  pierced  the  baron  strongly,  and he  left  the  place,  hanging  his  head  in  shame. (This  story  continues,  but  we  will  see  it  at  a  later  time).

When  this  incident  happened,  Bala  Swaminathan  was  present  there.  It  was  etched  in  his  photographic  memory  and  for  a  very  long  time,  prints  were  available  for  the  devotees!

The  reason  for  quoting  this  incident  is,  we  can  infer  from  this,  that  Swaminathan  had  studied  Bajagovindam  even  in  those days  of  Perumookkal  camp.  The  way  Sree  Saranal  remembered  this  showed  us  that  he had  known  Bajagovindam in  those  early  days,  and  how  he  was  tensed  on  hearing  the  baron  and  how  he  was  pleased  when  the  Matam  pundit  retaliated .

I (Ra.Ganapathy)  could  open  the  matter  regarding  the  article  in  Bavan’s  Journal,   only in  1967  when  Sree Saranal  was  camping  in Mahanandi.

He  asked,  “Is  it  published  that  way?”

This  is  a  very  beautiful  part  of  the  strange  attitude  of  an  ascetic,  Sree  Periava.  He  would  involve  Himself  very  minutely  in  some  matter  and  would  seem  to  be  attached  to  it  for  a  very  long time.  If  something  happens  as  a  result  of  that  matter,  He  would  detach  Himself  from  it  and  stand  aloof.  In  fulfilling  the  request  of  Bharathiya  Vidya  Bavan,  He  showed  a lot  of  interest  and  involvement,  gave  details  to  a  professor,  and  asked  him to  make  the  English  translation.  While  the  job  was  being  done,  He  would  ask  for  various  changes  to  be  done  from  his  side  as  well  as  from  doubts  raised  by  the  professor.  He  corrected  the  English  (of  the  famous  professor)  to  his  utter  amazement  in  some  places.  When  the  whole  matter  was  typed  and  given  to  Him  as  an  article  for  His  verification, He  just  looked  at  a  few pages  and  approved  it.  When  it  came  in  print,  He  looked  at  the  title,  one  or  two  places  in  the  middle  and  end  and proceeded  to  the  next  article.  After  six  years,  now,  He  is asking,  “Is  it  published that  way?”!

“Compared  to  what  one  can  learn  from  studying (religious  books)  in    a  (Veda)Patasala  or  from  the  company  of  pundits,  what  I  knew  was  very  little.  But  at  that  critical  time,  nothing  came to my  mind  except  Rama  NAmA.  I  would  have  told  him  like  that.  He  had  probably  understood  it  this  way  and  written.”—said Periava.

When  Ra.Ganapathi   told  Him  that  those  articles  have  now  come  in  books  form,  and  if  we  inform  them  of  these  corrections,  they  would  make  the  corrections  in  future  editions,    He  put  a  full stop  to  the  subject  by saying,  “Let  us  not  re—open   those  old  matters”.

Ra.Ganapathy  had  translated  that  article,  (which  was  originally  written  by  translating  what  Periava  said  in  Tamizh  into  English),    into  Tamizh.   Because  of  the  full  stop by  Periava, when  permission  was  given  to  many  journals  to  publish  the  Tamizh  article,  till  His  Sidhdhi,  the  writer  did  not  think  about  this  correction  at  all.  Now,  after  His  mortal  body  was  discarded only,  the  writer  remembered  it  and   the  correction  is  being  incorporated.

TO  BE  CONTINUED……..

 Categories: Deivathin Kural, Devotee Experiences

Tags:

1 reply

  1. HARA HARA SHANKARA Jaya Jaya SHANKARA Periyava is incornation of Lord Shiva.

Leave a Reply

%d bloggers like this: