மனஸின் எழுச்சி ரஜஸ்; தாழ்ச்சி தமஸ்; ஸம நிலை ஸத்வம். எண்ணம் காரியம் இதுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற ஸத்வத்தையும்விட உசந்த ஒரு நிலை உண்டு. அங்கே மனஸ் (எண்ணம்), சரீரம் (காரியம்) இதுகளை ஒருத்தன் அடியோடு கடந்து விடுவான். தமஸ் மனஸின் தாழ்ச்சி என்றால், இது மனஸின் வீழ்ச்சி! தமஸிலே தூங்குவான்; இதிலே ஸமாதி நிலைமை அநுபவிப்பான். என்ன வித்யாஸமென்றால், தூங்குகிறவனுக்குத் தன்னைத் தெரியாது; ஸமாதியிலிருக்கிறவனும் வெளியில் பார்த்தால் தூங்குகிறாற்போலத் தானிருந்தாலும் அவனுக்குத் தன்னை நன்றாகத் தெரியும்; தான் ஒன்றுதான் இருக்கிற எல்லாமும் என்று தெரியும். இப்படியிருக்கிறவன், நாமெல்லாம் சின்னதாக ‘நான்’, ‘நான்’ என்று எதையோ சொல்லிக் கொண்டு அதற்காக இத்தனை ஹிம்ஸையும் பட்டுக் கொண்டிருக்கிறோமே, அந்த ‘நானை’ப் பற்றின நினைப்போ, அரிப்போ கொஞ்சங்கூட இல்லாமல், ஈஸ்வரன் கைக்கருவியாக, லோக கல்யாணத்துக்காக ரஜோகுணக்காரனைவிட நிறையச் சிந்தித்து, நிறையக் காரியமும் பண்ணுவான். நாம் பட்டுக்கொண்டு, அடிப்பட்டுக் கொண்டு பண்ணுவதை விட ஜாஸ்தியாகவும் சவரணையாகவும் இவன் பட்டுக் கொள்ளாமலே பண்ணி விடுவான். ஸத்வ-ரஜஸ்-தமஸ்களை முக்குணமென்றும், இப்போது சொன்ன மூன்றும் கடந்த நிலையை குணாதீத ஸ்திதி என்றும் சொல்லியிருக்கிறது. .- ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
An active mind denotes Rajas; an unreceptive mind denotes Tamas. When the mind is balanced, it is Sathvam. Sathvam keeps the mind and action under control but there is a state beyond this too. In that state a person transcends the mind, thoughts and actions. If Tamas is thought of as lowering of the mind, this state is the conquering of the mind! In Tamas he will be asleep; but in this state he will be in Samaadhi! The difference is that the person who sleeps does not realize he is sleeping; the person in Samaadhi will also seem to be sleeping, but is fully aware of himself. He knows that he is present in everything else too. We keep saying ‘I’, ‘Me’ and suffer a lot because of this ego. The person in Samaadhi state does not have any thought of ‘I’ nor is concerned about anything else. He functions as Eswara’s tool; he thinks more than a person with Rajo Guna and also performs more tasks than him, but all for the welfare of the world. We get bonded with everything and carry out our actions, resulting in suffering; this person does not get bound by anything but does more actions, in a much better manner than us. Sathva, Rajo, Tamo Gunas are called as ‘Mukgunas’ (the three Gunas).The above mentioned state goes beyond all these gunas and is called as ‘Gunaatheetha Sthithi’ (गुणातीत स्थितिः) (a state beyond all Gunas). – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply