Thanks a million to Sri Siva BGS for the series he started recently in his blog (http://sivabgs.blogspot.in). Only recently I was interested in reading about this Periyava and now, I ran into these articles – Periyava anugraham. Pl visit his blog to read a lot about Sankara Guruparampara details. This site has so much of treasure about our guru paramapara.
Hara Hara Sankara Jaya Jaya Sankara!
ஸ்ரீஇளையாற்றங்குடிபெரீவா ..இளமையில் திருவிடைமருதூரில் மஹாராஷ்ட்ர ராஜ வம்சத்துக் குழந்தைகளுடன் விளையாடி வளர்ந்தவர்..
அதனால் மராட்டி ..ஹிந்துஸ்தானி பாஷைகளில் அனாயாசமாகப் பேசுவார்.. குதிரையேற்றத்திலும் நிபுணர்..
பீடாதிபத்யம் ஏற்ற பிறகு ஒருமுறை அர்தோதயம் ஸம்பவித்தபோது ஸ்ரீஆசார்யர்கள் குடந்தையில் இருந்தார்கள். மறுநாள் கோடியக்கரையில் ஸமுத்ரஸ்நாநம் பண்ணவேணுமென்று அவர்கள் சொன்னபோது ஸ்ரீமடத்து அதிகாரிகள் திகைத்துப் போயினர்..
ஒருநாளில் அவ்வளவு தொலைவை எப்படி அடைவது என்று அனைவரும் யோசித்தனர்…
இரவு பூஜையை முடித்துக் கொண்ட ஸ்ரீஆசார்யாள் ஸ்ரீமடத்துக் குதிரையொன்றின் மீதேறி இரவு நேரத்தில் பயணித்துக் கோடியக்கரையை அடைந்து அர்தோதய புண்யகாலத்தில் ஸமுத்ர ஸ்நநாநம செய்து பிற்பாடு அதே குதிரையின் மீதேறி ஸ்ரீமடம் திரும்பினார்களாம்..
ஸ்ரீ இளையாற்றங்குடி பெரீவா..அவர்களின் சிவபூஜை மிகவும் ப்ரஸித்தி பெற்றது ..
அவர்கள் தம் திருக்கண்களை மூடி ஸ்ரீசந்த்ரமௌளீச்வரருக்கு பில்வார்ச்சனை செய்யும்பொழுது.. தோஷ வில்வம் மட்டும் தனியாகத் தெறித்துப் போய் வெளியில் விழுமாம்..
உவேசா அவர்கள்தம் முதிர்ந்த ப்ராயத்தில் ஸ்ரீமடத்திற்கு அவ்வப்பொழுது வந்து ஸ்ரீபெரீவா அவர்களின் ஸ்ரீசந்த்ரமௌளீச்வர பூஜையை தர்சனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்..
அப்போது ஒருமுறை.. உவேசா அவர்கள்.. “ஸ்ரீஇளையாற்றங்குடி பெரீவா அவர்கள்உடலெங்கும் கண்ணாக மிக விமர்சையாக சிவ பூஜை செய்யும் பாங்கைத் தம் சிறு வயதில் கண்டிருப்பதாகவும் .. அதைப்போலவே ஸ்ரீபெரீவா அவர்களின் ஸ்ரீசந்த்ரமௌளீச்வரபூஜையின் அழகும் இருக்கிறது” என்றுஸ்ரீபெரீவாளிடம் மகிழ்வுடன் தெரிவித்துக்கொண்டாராம்..
Categories: Devotee Experiences
ஓம் நமசிவாய! மஹா பெரியவா திருவடிகளே சரணம்! ஹர ஹர சங்கர, ஜெய ஜெய சங்கர!
Namaskaram Anna, I’m not sure you’re aware or not. Yesterday was Ilayathangudi Periyava Aradhanai🙏🙏🙏 Very timely post. Jaya Jaya Sankara Hara Hara Sankara🙏🙏🙏