43.2 Sri Sankara Charitham by Maha Periyava – Incarnations of Vishnu and Shiva: Shiva-Vishnu similarities and differences

Jaya Jaya Sankara Hara Hara Sankara – In continuation of the last chapter Sri Periyava continues to explain how Lord Krishna is no different from Eswara citing many interesting incidents.

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the riveting drawing and the audio. Rama Rama


விஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்: சிவ-விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள்

க்ருஷ்ணராக வந்தபோது அப்படித்தான், தாம் வேறில்லை, ஈச்வரன் வேறில்லை என்று அவர் ப்ரூவ் பண்ணிக் காட்டினார். மஹாவிஷ்ணுவின் அவதாரமானாலும், பரமேச்வரனுக்குரியதாகக் கருதப்படும் ஸம்ஹாரம், ஞானோபதேசம் இரண்டையும் நன்றாகச் செய்து காட்டினார். எல்லா அவதாரங்களிலுமே ஸம்ஹார மூர்த்தியாக இருந்திருக்கிறாரென்றாலும், இங்கே அந்த ‘ஆஸ்பெக்ட்’டை நன்றாகவே ‘அன்டர்-லைன்’ பண்ணிக் காட்டினார். அர்ஜுனனுக்கு விச்வரூப தர்சனம் கொடுக்கும்போது,

திவ்யம் ததாமி தே சக்ஷு:, பச்ய மே யோகம்-ஐச்வரம்1

-“உனக்கு தெய்விகமான பார்வை கொடுக்கிறேன். அதைக்கொண்டு, ஈச்வரனுக்குரியதான யோக சக்தியை என்னிடத்தில் பார்” என்கிறார்.

இங்கே ‘ஈச்வரன்’ என்னும்போது வேதாந்தம் சொல்லும் ஸகுண ப்ரம்மத்தைச் சொன்னாரா? அல்லது, வ்யவஹாரத்தில் பரமசிவனையே ‘ஈச்வரன்’ என்று சொல்லும் அர்த்தத்தில் சொன்னாரா?

வெகு காலமாக உலக வழக்கம் பரமசிவனையே ஈச்வரன் என்று சொல்வதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. (அகராதியான) ‘அமர கோச’த்திலேயே சிவனுடைய பெயர்களைச் சொல்லும்போதுதான், “ஈச்வர: சர்வ ஈசாந:” என்று இருக்கிறது. காளிதாஸனுடைய வாக்கு உத்தமமான வியவஹாரம். அவர் ‘ரகுவம்ச’த்தில்,

“ஹரிர்-யதைக: புருஷோத்தம ஸ்ம்ருத:
மஹேச்வரஸ்-த்ர்யம்பக ஏவ நாபர:” 
(III.49)

“எப்படி விஷ்ணு ஒருத்தரே புருஷோத்தமன் என்றும் த்ரிநேத்ரரான சிவன் ஒருத்தரே மஹேச்வரன் என்றும் கருதப்படுகிறார்களோ, அப்படி…” என்று ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லிக்கொண்டு போகிறார். பரமசிவனைப் புருஷோத்தமன் என்று சொல்லும் வழக்கமே கிடையாது. ‘புருஷ உத்தமன்’ தான் ‘பெரும் ஆள்’-‘பெருமாள்’ என்று ஆனது. பெருமாள் கோவில் என்றால் விஷ்ணு ஆலயம் தானே? சிவனுடையதில்லையே? அப்படியே, ஈச்வரன் கோவில் என்றால்…?

இப்படி ‘அமரகோசம்’, மஹாகவியின் வாக்கு, லோக வ்யவஹாரம் மூன்றிலும் ஈச்வர சப்தத்தால் குறிக்கப்படும் சிவனை க்ருஷ்ண பரமாத்மா சொன்னாரா, அல்லது வேதாந்த பரிபாஷைப்படி ஸகுண ப்ரம்மத்தைச் சொன்னாரா என்று கேட்டால், இந்த இடத்திலே சிவனைச் சொன்னதாகத்தான் அடுத்தாற்போல் நடப்பதிலிருந்து தெரிகிறது. அடுத்தாற்போல் என்ன நடக்கிறது? பகவான் விச்வரூபம் காட்டுகிறார். ஆனால் மாயா மோஹனனாக ஜகத் பரிபாலனம் பண்ணி விளையாடும் மஹாவிஷ்ணுவாகவா அந்த விச்வரூபத்தில் அவர் (தம்மைக்) காட்டினார்? இல்லை. ப்ரளய கால ருத்ரனாகத்தான் காட்டினார்! அவரே,

“காலோ (அ)ஸ்மி லோக-க்ஷய-க்ருத் ப்ரவ்ருத்த: (XI.32)

-“உலகை அழிக்கும் மஹாபலம் கொண்ட காலனாக இருக்கிறேன்” என்கிறார்! கால காலனான பரமசிவனுக்கே மஹா காலன் என்று பெயர். உஜ்ஜயினியில் அந்தப் பெயரில்தான் ஜ்யோதிர்லிங்கமாயிருக்கிறார்.

பரம லாவண்ய மூர்த்தியாக வேணுகானம் பண்ணுபவனை இந்த உக்ரரூபத்தில் பார்க்கவே அர்ஜுனனுக்குக் குலை நடுங்குகிறது! ஸம்ஹார மூர்த்தியாக, ஆகாசத்துக்கும் பூமிக்குமாக விச்வரூப தர்சனம் தந்தால்? அர்ஜுனன் “ஐயோ, அப்பா!” என்று அலறிப் புடைத்துக் கொண்டு, “இந்த உன்னுடைய உக்ரரூபத்தைப் பார்த்து த்ரிலோகமும் நடுங்குகிறது. ததா (அ)ஹம் : நானும் அப்படியே! அக்னிஜ்வாலை வீசும் உன் கண்ணைப்பார்த்தால், காப்ராவில் என் தைர்யம் போன இடம் தெரியவில்லை! உன் கோரைப்பல்லையும், ப்ரளயாக்னி வீசும் வாயையும் பார்த்தால் எனக்கு திக்குத் திசையே புரியவில்லை!

இங்கே (போர்க்களத்தில்) கூடியிருக்கிற அத்தனை ராஜாக்களும், கௌரவ ஸமூஹமும், பீஷ்ம த்ரோணாதிகளும், கர்ணனும், நம்படைகள் உள்பட எல்லாரும் நீ பயங்கரமாகத் திறந்து கொண்டிருக்கும் வாய்க்குள் போய் அரைபட்டு, உன் பல்லுக்கு நடுவில் சூரணமாக ஈஷிக்கொண்டிருக்கிறார்களே!” என்றிப்படி விலவிலத்துப்போய் பெரிய ஸம்ஹாரமூர்த்தியாகத்தான் அந்த விச்வரூபத்தை வர்ணிக்கிறான்.

பூமாதேவி துஷ்ட அரசர்களின் பாபத்தைத் தாங்க முடியாமல் முறையிட்டதன் பேரில்தான் க்ருஷ்ணாவதாரமானது பூபாரம் தீர்ப்பதான ஸம்ஹார உத்தேசத்துடன் ஏற்பட்டது. ‘விநாசாய ச துஷ்க்ருதாம்’ என்று ருத்ரனின் ஸம்ஹார க்ருத்யம் மற்ற அவதாரங்களிலும் நடந்தது தானென்றாலும், க்ருஷ்ணாவதாரத்திலேயே அது ஒரு நீண்ட ஆயுஸுக்காலத்தில் ஆரம்பத்திலிருந்து ஏறக்குறைய கடைசிவரை நெடுக நடந்தது.

மத்ஸ்ய, வராஹ, நரஸிம்ஹ அவதாரங்களில் சட்டென்று ஒரு ஸந்தர்பத்தில் ஆவிர்பாவம், ஒரு அஸுரனை அல்லது அஸுரக் கூட்டத்தை வதம் செய்வது என்பதோடு ஸரி. கூர்மம் அமிருதம் கடைந்த காலத்தில் மத்தாக இருந்த மந்தர மலையைத் தாங்கியதோடு ஸரி. வாமனாவதாரம் ப்ரம்மசாரியாக சில வருஷங்கள் லோகத்திலிருந்து, மஹாபலிக்கு ஸம்ஹாரம் என்று சொல்ல முடியாத பரமாநுக்ரஹமாகப் பண்ணியே அவனிடமிருந்து பூலோக, ஸ்வர்க லோகங்களை மீட்டது. பரசுராமர் ரொம்பவும் நீண்டகாலம், 21 தலைமுறை துஷ்டராஜாக்களை ஸம்ஹாரம் செய்தாலும் தனியாட்களைத்தான் கொன்றாரே தவிர ஸேனை ஸேனையாக வதம் செய்யவில்லை. ராமர் முதலில் பால்யத்தில் ஸுபாஹு மாரீசரோடு ஒரு சின்ன ராக்ஷஸ கோஷ்டி, அப்புறம் பல வருஷத்திற்கு அப்புறம் தண்டகாரண்யத்தில் விராதன், பிறகு 14,000 கர, தூஷணாதி ராக்ஷஸர்கள், அதற்கப்புறம் மிகப் பெரிய ராவண ஸைன்யம் என்று நாலைந்து ஸந்தர்ப்பங்களில்தான் ஸம்ஹாரம் செய்தார். நடுவில் கபந்தன், வாலி மாதிரியான தனி ஆஸாமிகளின் வதமும் நடந்தது. பிற்பாடு லவணாஸுரவதம் சத்ருக்னனால் நடந்தது. க்ருஷ்ணர்தான் பிறந்தவுடன் பூதனையில் ஆரம்பித்து, அப்புறம் சகடாஸுரன், த்ருணாவர்த்தன், பகாஸுரன் என்று கம்ஸன் வரையில் போய் ஒரு பட்டாளத்தை பால்யத்திலேயே ஸம்ஹரித்து விட்டு, அப்புறம் எழுபது எண்பது வருஷம் ஒன்று மாற்றி இன்னொன்று என்று — ஜராஸந்தனின் பெரிய ஸேனையைத் திரும்பத் திரும்ப அழித்து, காலயவனன் போன்றவர்களையும் மறைமுகமாகக் கொன்று, அப்புறம் ருக்மிணி விவாஹத்தில் மச்சினன்மார்களுடனேயே சண்டை (கொல்லவில்லை), நரகாஸுரனுடன் யுத்தம், பாண்டவர்களைக் கருவியாகக்கொண்டு மிகப் பெரிய மஹாபாரத யுத்தம், தாத்தாவான பிறகுகூட பேரன் அநிருத்தனை ஜெயிலில் வைத்த பாணாஸுரனுடன் யுத்தம் என்று விடாமல் பண்ணி ருத்ர பாவத்தை நன்றாகக் காட்டினார். அவரே ஸபஷ்டமாக,

காலோஸ்மி லோக க்ஷயக்ருத் ப்ரவ்ருத்த: |
லோகாந் ஸமாஹர்த்தும் இஹ ப்ரவ்ருத்த: ||

“நான் லோகத்தை அழிக்கும் பலவானான காலனாக இருக்கிறேன். லோகங்களை ஸம்ஹரிக்கவே இங்கே வந்திருக்கிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

இது மிகைப்படுத்திச் சொன்னதுதான். வாஸ்தவத்தில் அவர் லோகம் முழுதையும் ஸம்ஹாரம் செய்து விடவில்லை. அவதாரத்தை முடித்தபோது லக்ஷோபலக்ஷம் கௌரவ-பாண்டவர்கள் செத்துப்போய், யது வம்சமும் அழிந்து போயிருந்தாலும் அப்போதும் நிறைய ப்ரஜைகள் பாக்கியிருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மேல்தான் பரீக்ஷித்து ஆட்சி செலுத்தினான். ஏன் மிகையாகச் சொன்னாரென்றால், ……இவரே தேரை ஒட்டிக்கொண்டு வந்து அர்ஜுனனை யுத்த பூமியில் நிறுத்தியிக்கும்போது அவன், ‘யுத்தமா, பண்ணுவதா?’ என்று முரண்டு பண்ணுகிறான். ‘டேய், நீ இல்லாவிட்டாலும் நானே தீர்த்துக் கட்டி விடுவேண்டா! அதுதான் என் ஸங்கல்பம். உனக்கு வெற்றி வீரன் என்று யசஸ் சேர்க்கணுமென்றே போனால் போகிறதென்று உன்னை எனக்குக் கருவியாக ‘சூஸ்’ பண்ணினேன்’ என்று பகவான் அவனுக்குச் சொல்ல வருகிறார். அது அவனுக்கு நன்றாக மனஸில் தைக்கணுமானால் இப்படி மிகைப்படுத்தித்தான் சொல்லணும்…….ஒரு ஸத்கார்யம், ஆயிரம் ரூபாய் வேண்டியிருக்கிறது, நாமே போட்டுப் பண்ணிவிடலாம். ஆனாலும் நாலுபேருக்குப் புண்யம் வரட்டுமே என்று நினைத்து ஒருத்தனிடம் போய்க் கேட்கிறோம். அவன் மூக்கால் அழுகிறான். அப்போது, “அடேய், உன் ஸஹாயமில்லாமல் நானே லக்ஷரூபாய் போட்டுப் பண்ணிவிட முடியும்டா” என்று, — நமக்கு வேண்டியது ஆயிரம்தான், நம்மால் முடிந்ததும் அவ்வளவுதான் என்றாலும்கூட — அதை ஒரே தூக்காக லக்ஷம் என்று தூக்கித்தானே சொல்வோம்? அப்படித்தான், துஷ்ட ஜன ஸம்ஹாரத்திற்கு மட்டுமே வந்த பகவான் ஸர்வ லோகத்தையுமே ஸம்ஹரிக்க வந்ததாகச் சொன்னார்! அப்படிச் சொல்லும்போதே இப்படி ஸர்வலோக ஸம்ஹாரம் செய்வது ப்ரளய கால ருத்ரனே ஆனதால், தானும் அவனும் ஒன்றுதான் என்று தெரிவித்துவிட்டார்!

___________________________________________________________________________

Incarnations of Vishnu and Shiva: Shiva-Vishnu similarities and differences

The same thing happened when He incarnated as Lord Krishna.  He proved that He was not different from Eswara.  Although it was an incarnation of Maha Vishnu, He demonstrated very effectively, the two activities, normally associated with Eswara, destroying (the evil) and teaching of superior knowledge.  Even though He had been an icon of annihilation (of the evil) in all the incarnations, in this, He demonstrated it underlining this aspect emphatically.

When He showed His variegated form (Vishwaroopa) to Arjuna,

Divyam dhadhhami thae chakshu:  pashyamae yogam aiswaram1

He says, “I am giving you the divine eyes, using that, look at the Yoga power, belonging to Eswara, in me”.

Here, when He said, “Eswara”, did He mean the omniscient Supreme spirit (Brahmam) or Paramasiva, customarily referred to as Eswara?  Since long time, only Paramasiva is referred to as Eswara, customarily in the world.  In ‘Amarakosa’ (dictionary), while listing out the names of only Lord Shiva, it is mentioned as “Eswara: Sarva Esanaha:”

The words spoken by Kalidasa are of the highest propriety.  In “Raghuvamsa”, he has said,

“Harir-yathaika: purushothama smruthaha:
Maheswaras-thrayambaka eva Naaparaha:” (III.49)

While going about describing something, he says, “In the same way as how only Vishnu is considered as the Purushothama and the three-eyed Shiva alone is considered as Maheswara”.

There is no practice of referring Paramashiva as Purushothama.  Only “Purusha Uthaman” has become “Perum Al” (Perumal).  Is it not that Perumal temple always means, Vishnu temple?  Not of Shiva no?  In the same way, Ëswara temple” means…..?

In this way, if you ask, whether Krishna referred to Shiva when He mentioned, Eswara, as the word is referred to in “Ämarakosa”, words of the great poet (Kalidasa) and worldly customs or in the pure language of Vedanta, to refer to the Parabhraman, it can be stated that He meant only Lord Shiva, as can be seen from what happened next.  What happened next?  Bhagawan shows his variegated form (Vishwaroopa). Did He show himself as the attractive Maha Vishnu, the protector of this world? No.  He showed the form of Rudhra, at the time of dissolution of the world (pralaya).  He himself says,

Kalo (a)smi loka-kshaya-kruth pravruddha:” (XI.32)

“I am the person who has the greatest power to destroy the world”.

Only Paramashiva, the destroyer of time itself, is known as Mahakalan.  In Ujjain, He is in the form of Jyothirling with that name only.

Arjuna is terribly scared to see the sweetest person who mellifluously sings, in this very furious form. What if He shows the gigantic form of an annihilator, extending from the earth to the sky? Arjuna cries, saying that “looking at your ferocious form, all the three worlds are trembling.  Thatha (a)ham:, Me too, in the same way.  Looking at your burning eyes, I do not know where my courage has gone.  Looking at your sharp teeth and destructive fire spitting mouth, I have lost the sense of directions!

“All the people who have assembled here (in this battle field), all the kings, Kaurava clan, Bheeshma and Dhronas, Karna and including our own army, are entering through your large mouth and getting ground and smeared to powder in between your sharp teeth!”.  He describes the variegated form (vishwaroopa), like this, totally aghast, on seeing Him as an annihilator.

The incarnation of Krishna happened with an objective of annihilation to reduce the weight of the world, on the basis of the plaint of Bhooma Devi that she was unable to bear the weight of the sins of the evil kings.  Although the objective of “Vinasaya cha Dushkrutham” was there in other incarnations also, in this only, it happened for a long life time starting from the beginning to approximately towards the end.

In the incarnations of Matsya, Varaha and Narasimha, it was just a manifestation in a sudden moment and killing one demon (asura) or an evil clan.  Koorma (incarnation) did the role of only bearing the weight of the mandara mountain when it served as the churning stick for getting the nectar (Amrut).  Vamana incarnation, lived in the world as a celibate (Brahmacharya) for some years.  The earthly and heavenly worlds were regained from Mahabhali, in the form of the most merciful boon, without actually being termed as annihilation of Mahabhali.  Although Parasurama, killed evil kings of 21 generations over a very long period of time, he killed only individuals and not armies and battalions.  Rama resorted to elimination only on four or five occasions, like a small group of rakshasas along with Subahu and Mareecha during his childhood and then after many years, in Dhandakaranya, Viradha and still much later, 14000 kara dhooshana rakshasas, and later the very big army of Ravana.  In between, the killing of individuals like Kabhandan, Vaali, etc., also happened.  Thereafter, Lavanasura was killed at the hands of Chathrugna.  Only Krishna, showed his ferocious form very emphatically, starting from Bhoothana immediately after His birth, later Sakatasura, Dhrinavardhana, Bhagasura, etc., till Kamsa, an entire battalion during his childhood itself and later during the next 70 to 80 years, one after the other, destroying the army of Jarasandha repeatedly, also indirectly killing people like Kalayavana, then fighting with the brothers-in-law (not killing) at the time of marrying Rukmini, war with Naragasura, the great battle of Mahabharatha, with the aid of Pandavas and later, even as a grandfather, battling with Banasura, who jailed Anirudha, His grandson.  He himself, very clearly spells out,

Kaalosmi loka kshayakruth pravruddha:
Lokaan samaaharthum iha pravruttha:

“I am the annihilator, capable of destroying this world.  I have come here to destroy all the worlds”.

This may be an exaggerated statement.  In reality He did not destroy the entire world.  At the end of the incarnation, even though lakhs and lakhs of kaurava and pandavas had died and the Yadu community had been destroyed, still there were many citizens, remaining.  These were the people, who were ruled by King Pareekshit. Why He exaggerated was, He himself had driven the chariot and brought Arjuna to the battle field, at which time, he (Arjuna) was protesting “why war? Why fight”.  Bhagawan wants to convey that whether Arjuna was there or not, He would wipe them out himself and that was what He has already decided and that He was just trying to give him (Arjuna) the name of a victorious warrior and therefore He has chosen him as the tool.  If that were to be deeply ingrained in his mind, it had to be exaggerated this way.

There is one holy deed to be done.  It would require Rs. 1000/- We ourselves can contribute and get it done.  Still, with a view to enabling a few persons to get the punnya (credits), we go and ask one person.  That fellow grumbles.  Would we not say that we are capable of contributing a lakh of rupees ourselves and complete it, – we might require only a thousand rupees and maybe we can also afford only that much.  But would we not say a little exaggeratedly?  In the same way, Bhagawan who had come to destroy only the evil people, is saying that He had come to destroy the entire world.  In saying so, since the person who destroys the whole world is the Rudra, the universal destroyer, He has conveyed that He and Rudra are one and the same.

__________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

4 replies

  1. அருமை திரு ஸ்ரீனிவாசன்

    அற்புதம் சௌம்யா.

    பெரியவா அனுகிரஹத்தால் உங்கள் அனைத்து படைப்புகளும் மிக மிக பிரமாதமாக வந்துள்ளன.

    தொடரட்டும் உந்தன் கலை
    வளரட்டும் நின் படைப்புகள்
    மெருகட்டும் மென் மேலே
    பெருகட்டும் நின் புகழ்

    வாழிய வாழிய

    சந்தர் சோமயாஜிலு

  2. Great explanation of Siva & Vishnu.
    Stunning drawing !! Tathroopam!!
    Jaya jaya Sankara Hara Hara Sankara!!

  3. Siva Vishnuthvam the apt explanation, need one can with simple manner except our MahaPerivaa.

    The Painting by Sow.Sowmya Murali is excellent. A Blessed Devotee of Mahaperivaa.

  4. Periyava anugraham…. Excellent drawing

Leave a Reply

%d bloggers like this: