Sri Periyava Mahimai Newsletter- Mar 14 2012

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The first incident will certainly move even the stone hearted to tears. Would anyone even have the heart and mind to take unfair criticism when the whole world is showering praises for ‘Maithreem Bhajatha’ song? Think for a minute; When we hear someone criticizing us or even if we perceive so, how much will we fume inside?  A great incident and lesson for all of us to self-introspect on where we are. Second incident shows Periyavas infinite compassion to his sishyas.

Adiyen has not seen any picture of Sri Periyava with Shri Ra. Ganapathy Anna though Anna has spent several years with Sri Periyava. It seems that Periyava knows this incident is coming up (Periyava promise I don’t know :-))  and it is his sankalpam that he has made this apt picture for this newsletter through Smt. Sowmya. This is also the first picture we see Anna Ganapathay with Shri Periyava. Is this what we call Amaanushya leela???

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

 

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (14-3-2012)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ  மஹா பெரியவாளெனும் திரு அவதாரத்தில் சர்வேஸ்வரர் நம்மிடையே சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.


மைத்ரீம் பஜத!

(நன்றி: திரு. ரா. கணபதி அவர்கள்)

அன்பே சிவமென அவதரித்திட்ட மகான் வேண்டுதல் வேண்டாமை என்ற பக்குவத்தை வெளிப்படுத்திய சம்பவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கின்றது. ஸ்ரீ பெரியவாளின் பரம பக்தையான ஸ்ரீமதி. எம்.எஸ். சுப்பலட்சுமி அவர்கள் 1966- ஆம் வருடம் அக்டோபர் மாதம் 23ம் தேதி விஜயதசமித் திருநாளில் ஐக்கிய நாடுகள் சபையில் இசைவிருந்து வழங்க ஏற்பாடாயிற்று. அவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா ஒரு ஆசிகீதம் இயற்றியளித்தார்.

மிகப் பிரசித்தி பெற்ற கீதம் அது.

‘மைத்ரீம் பஜத’ என்று தொடங்கும் அந்த கீதம் உலகமக்கள் யாவரும் அன்புடனிருக்கவும், போரினை விட்டு அமைதியினைப் பெற்று வாழ வேண்டும் என்ற பொருள்பட எழுதப்பட்டிருந்தது.

சாட்சாத் தெய்வத்தின் குரலாகிய அந்த கீதம் ஐக்கியநாட்டு சபையின் எல்லா  தேசத்து அங்கித்தினைரையும் உருகச் செய்துவிட்டது. அப்படி ஒரு வரவேற்பு கிட்டியது.

‘மைத்ரீம் பஜத’ என்றால் அன்பைப் பயிலுங்கள் என்பதாக அர்த்தம். அப்படிப்பட்ட அன்பில் ஊறிய ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா அவரிடம் பகை பாராட்டித் தாக்குவோரிடமும் எப்படி எதிரொலிக்கிறார் என்பதை திரு. ரா. கணபதி அவர்கள் ஒரு சம்பவத்தின் மூலம் தெரிவிக்கிறார்.

மைத்ரீம் பஜத பாடல் எல்லோரையும் ஒரு பக்கம் கவர்ந்திழுக்க அந்த தெய்வீக கீதமே சிலரை வன்மையாக விமர்சிக்க வைத்திருந்தது. ஒருமுறை ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க திரு.ரா. கணபதி அவர்கள் சென்றபோது ஐ.நா. சபையில் இந்த கீதத்தைக் கேட்டவர்களுக்கு ஏகப்பட்ட சந்தோஷம் என்பதாக இவர் சிலாகித்துக் கூறினார்.

“எல்லோருக்கும் சந்தோஷம்-னு உனக்கு எப்படி தெரியும்?” என்று ஸ்ரீ பெரியவா புதிர் போட்டார். எல்லோருமே சந்தோஷப்படுவதற்கு மாறாக இந்தப் பாடலில் வேறு ஏதும் வித்யாசமாக இல்லையே என்று கணபதி எண்ணியவராய் அதையே ஸ்ரீ பெரியவாளிடம் கூறினார்.

உடனே ஸ்ரீ பெரியவா மடத்து மேனேஜர் விஸ்வநாதய்யரைக் கூப்பிட்டு கன்னடத்தில் என்னவோ சொன்னார். ஸ்ரீ பெரியவாளிடம் சுவாதீனமாகப் பழகும் மேனேஜர் எதற்கோ மறுப்பு சொல்வது போலிருந்தது. ஸ்ரீ பெரியவா ஏதோ சில கடிதங்களை எடுத்து வரச் சொல்லி அவர் அதைக் கொண்டுவர மறுக்கின்றார் என்பது புரிந்தது.

கடிதங்கள் “அக்னயே ஸ்வாஹா” பண்ணிவிட்டாரா என்று ஸ்ரீ பெரியவா கோபமாகக் கேட்க, மேனேஜர் அதெல்லாமில்லை என்று விருட்டென எழுந்து போய் ஒரு கொத்துக் கடிதங்களை கொண்டு வந்து கொடுத்தார்.

அவரைப் போகலாமென்று ஸ்ரீ பெரியவா அனுப்பிவிட்டார்.

“ஓரே மாதிரி அபிப்ராயத்துல மூணு கடுதாசி வந்திருக்கு. மூவாயிரம் பேருக்கு அந்த அபிப்ராயம் இருந்திருக்கலாம். ஆனா மூணு பேருதான் மெனக்கெட்டு கடுதாசி எழுதியிருக்கா…. அந்த மூணு கடுதாசுலே ரொம்பவும் ரசமா இருக்கிறதை தர்றேன்” என்று கடிதங்களை அலசி ஒரு கடித்ததை மட்டும் கண்டுபிடித்துக் கொடுத்தார்.

ரா. கணபதி அந்த கடித்ததைப் படித்துவிட்டு மிகவும் வேதனையடைந்து விட்டார். ரசமான கடிதமல்ல. அது மிகவும் விரசமாக எழுதப்பட்டிருந்தது. இப்படிக்கூட ஒரு மகான் மீது குற்றச்சாட்டைக் கண்டுபிடிக்கும் குணம் ஒருவரிடம் இருக்க முடியுமா என்று இவருக்கு அருவருப்பும் வெறுப்பும் அக்கடிதம் ஊட்டியது.

பொடி எழுத்தில் ஃபுல்ஸ்கேப் காகிதத்தின் இரண்டு பக்கம் வரிந்து தள்ளியிருந்த அக்கடிதத்தின் ஒரு பக்கத்தைப் படித்தவுடன் அதை மடித்து வைத்து விட்டு இவர் ஸ்ரீ பெரியவாளைப் பார்த்தார். அக்கடிதத்தைக் கிழித்துப் போட கைகள் துறுதுறுத்தன.

ஸ்ரீ பெரியவா இவரைப் பார்த்து “சாந்தப்படுத்திக்கோ” என்று பரிவு சொட்டக் கூறிவிட்டு “லோகத்திலே நாலு தினுசான மனுஷா இருப்பா. நாலு தினுசான அபிப்ராயம் இருக்கும். எல்லாத்தையும் சாந்தமாப் பாத்துண்டு போனாத்தான் நமக்கு நல்லது. நம்மை ஒருத்தர் ஸ்துதிக்கிறதுலே நமக்கு லாபமில்லே. மாத்து அபிப்ராயம் சொல்லும் போது தான் நம்ப குறைபாடு நமக்கே தெரிஞ்சு அப்புறம் அதை நிவர்த்தி பண்ணிக்கிறதுக்கு வழி பொறந்தாலும் பொறக்கலாம்” என்று விருப்பு வெறுப்பில்லாமல் எல்லா அபிப்பிராயங்களையும் பார்க்கும் பக்குவத்துடன் சொன்னார்.

“சொந்த அபிப்ராயம் மாதிரியே மாத்து அபிப்ராயத்தையும் மனங்கோணாம பார்த்துப் பழகினா நல்லது. அதுக்காகதான் அந்தக் கடுதாசியைக் காட்டினேன். உனக்கு பாவம் கஷ்டமாயிருந்தா மேலே படிக்க வேண்டாம் இங்கே கொண்டா” என்று ஸ்ரீ பெரியவாளே சொன்னதிலிருந்து அந்தக் கடிதம் எத்தனை கடுமையாக எழுதப்பட்டிருக்க வேண்டுமென்பது புரிகிறதல்லவா?

“பின் பக்கம் புது பாயின்ட் ஏதாவது இருக்கான்னு அதையும் பார்த்துடறேன்” என்றார். கணபதி அவர்கள்.

“அப்படி ஒண்ணும் இல்லே. முன்பக்க விஷயத்தை நீட்டிண்டு போய் இன்னும் தீவிரமா முடிச்சிருக்கு. நீ சங்கடப்படுவே .எழுதினவாளையும் பாவம் திட்டுவே” என்று ஸ்ரீ பெரியவா கூற கடிதத்தை இவர் கொடுத்துவிட்டார்.

“உனக்கு பாவம் படிச்சா கஷ்டமாயிருக்கும்’ என்று இவருக்கு பாவப் பட்ட அதே பரிவோடு எழுதினவாளையும் பாவம் திட்டுவே” என்று ஸ்ரீ பெரியவா கூற வேண்டுதல் வேண்டாமை என்ற சமநிலை நோக்கோடும், மனத்தோடும் பேசியவிதம் திரு. ரா. கணபதியை நெகிழச் செய்தது.

மேலும் நெகிழவைக்கும் சம்பாஷணையும் தொடரலாயிற்று.

அதன்முன் அக்கடிதத்தில்  கண்டிருந்ததைத் தெரிந்துக் கொள்வது அவசியமாகின்றது.

ஒரு இசைக் கலைஞரைக் கொண்டு ஸ்ரீ பெரியவாள் தம்மை ஒரு உலக உபதேசகராகக் காட்டி தன்னை சர்வதேச மஹா ஸ்தானத்தில் இடம் பிடிக்க முயற்சித்திருக்கிறார் என்பதே அந்த கடித்ததில் ஸ்ரீ பெரியவாள்மேல் சுமத்தப்பட்டிருந்தக் குற்றச்சாட்டின் சாரம்.

“சரி இப்போ சொல்லு கடுதாசிக்காரரோட அபிப்ராயத்தைப் பத்தி உன் அபிப்ராயம் என்ன?” என்று ஸ்ரீ பெரியவா கேட்டார்.

“எனக்கென்னவோ கொஞ்சம் கூட சரியா படலே” என்றார் இவர்.

“எனக்கென்னவோ அது ரொம்பவும் சரின்னுதான் தோன்றது” என்று தன் மாசிலாமணியான மனதை மகான் காட்டினார். “ஐ.நா. சபைக்காரா இப்படி ஒரு ‘மெஸ்ஸேஜ்’ ஜை. ஆசிர்வாத உபதேசத்தை என்னைக் கேட்டா அந்த பாட்டைக் கொடுத்திருக்கேன்? இல்லையே அவாளுக்கு சங்கராச்சார்யார்னு இப்படி நாங்க இருக்கோம்னு தெரியுமான்னு சந்தேகம் தான். அப்படி இருக்கும் போது நானே ஏன் அட்சதை போட்டுண்டு லோகம், தேசம், பூராவுக்கும் நான் உபதேசம் கொடுக்கிறவனாக்கும்னு பாட்டு போட்டு தரணும்? சாஸ்திரத்திலே சீடனா கேட்டுக் கொள்வோரன்றி பிறருக்கு உபதேசிக்கலாகதுன்னுதானே இருக்கு. நாங்களெல்லாம் உபதேசம் உபந்நியாசம்னு பண்றது சிஷ்யலோகம்னு இருக்கிறவாளுக்கு ட்யூட்டியா நாங்க பண்றது.

‘இதே ஒரு ஆர்கனைசேஷன் கேட்டுண்டா, அதாவது ஐ.நா. சபையே இப்படி ஒரு மெஸேஜ் வேணும்னு கேட்டு கொடுத்திருந்தா அது வேறு விஷயம். அதில் நியாயம் உண்டு. அப்படி இது நடக்கலே. அதனாலே ‘ஸெல்ஃப் ப்ப்ளிசிடிக்கு தானாகவே பண்ணின காரியம்’னு இதைப்பற்றி ஒருத்தர் அபிப்ராயப்படறதுலே தப்பில்லையே இதை எப்படி அவர் சொல்லலாம்ன்னு புரிஞ்சுண்டு இனிமேலாவது ஜாக்ரதைப் படுத்திக்கணும்”

ஜகத்குரு என்ற இலக்கணத்திற்கு சான்றாக நிகழும் ஒரு மகான், லோக சமாதானத்திற்காக சர்வதேச சபையில் அனைவரும் பயனுற வேண்டுமென்பதற்காக  ஒரு கருத்தை பாடலாக்கி அளித்திருந்ததைக் கூட அநாகரிகமாக விமர்சனம் செய்யவும் சிலரது மனதில் விகாரம் மேலோங்கியுள்ளதை நினைத்து வேதனைப் படுவது ஒரு பக்கம், அப்படி ஒரு அநியாயத்தையும் சமநிலையோடு எதிர் கொண்டு அதற்குத் தக்கவாறு நியாயப்படுத்தி பதில் கூற கூட எண்ணம் கொள்ளாமல், அந்த அபாண்டத்தையே தனக்கு ஒரு பாடமாக பாவித்துக் கொள்ளும் ஒரு மனோ நிலையை என்னென்பது?

‘சத்யமூர்த்தி, தர்மவிக்ரஹம், நியாயதேவதை என்பதற்கு மேல் என்ன சொல்ல இருக்கிறது’ என்று திரு. ரா. கணபதி மெய்சிலிர்க்கிறார்.

‘அந்த மாண்புதான், தான் இயற்றியே இருக்கக்கூடாது என்று ஸ்ரீ பெரியவா கருதிய கீதத்தை நானிலமெங்கும், உபதேச கானமாக பரப்பியுள்ளது என்றும் இவர் வியக்கிறார்.

பிறைசூடி ஸ்ரீ பெரியவா சூடிக்கொண்ட பாமாலை

இப்படி புகழ்ச்சி இகழ்ச்சி என்பதெற்கெல்லாம் அப்பாற்பட்ட பரப்பிரம்ம சொரூபமான மகான் தன்னை ஒரு பக்தர் ‘சங்கரசிவா’ என்று போற்றி இயற்றியப் பாடலைப் பரிபூர்ணமாக ஏற்றுக்  கொண்டு தான் சர்வேஸ்வரர் என்பதை இதுபோன்ற பக்தர்களுக்கு உணர்த்தியும் அருளியுள்ளார்.

பிரதோஷ புண்ணிய தினத்தில் பிரதோஷ வேளையில் அருணாசல ஈஸ்வரரான ஸ்ரீ பெரியவாளின் திருவடிகளில் தன் குருவாம் பிரம்ம ஸ்ரீ பிரதோஷமாமாவுடன் ஐக்கியமாகும் பாக்யம் பெற்றவரான அகத்தியான் பள்ளி கிருட்டிணமூர்த்தி எனும் பக்தரின் பாடல்களைதான் இப்படி ஈஸ்வரன் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

தாய் தந்தையரின் உயரிய பக்தியாலும், குருவாம் பிரம்மஸ்ரீ பிரதோஷமாமாவின் பூர்ண ஆசியாலும், தாய் மாமன் கவிசக்ரவர்த்தி வைத்தியநாத சர்மாவின் வம்ச புண்ணியத்தாலும் கிருட்டிணமூர்த்திக்கு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளை சாட்சாத் ஈஸ்வர்ராகக் காணும் பக்தி ருசி ஏற்பட்டு, அந்த சங்கரரை துதிபாடும் பாக்யம் கிட்டியது.

நாயன்மார்கள் ஈஸ்வரருக்கு பள்ளி எழுச்சிமுதல், தாலாட்டு வரை பாடி மகிழ்ந்தது போல் நடமாடும் ஸ்ரீ பெரியவாளிடம் ஈஸ்வரரைக் கண்டிட்ட கவிஞருக்கு ஸ்ரீ பெரியவாளை துயில் எழுப்பி, நாள் முழுவதும் பார்த்துக்கிட்டே இருக்கத் தோன்றும் பரவசத்தைப் பாடி துயில் கொள்ள வைப்பது முதல் துதிபாடும் பாக்யம் கிட்டியுள்ளது.

ஸ்ரீ ரமண பகவான் இயற்றிய அட்சர ரமண மாலை போல, ஸ்ரீ பெரியவாளை ‘சங்கரசிவா’ எனப் போற்றி இவர் ஸ்ரீ பெரியவாளின் 86 வது ஜயந்தி உற்சவத்திற்காக பிரம்மஸ்ரீ பிரதோஷமாமாவின் ஆக்ஞைப் படி எழுதினார். மீரஜ் என்ற ஊரில் இதனை ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பித்த போது அதை ஸ்ரீ பெரியவா அங்கிருந்த பக்த கூட்டத்திற்குள் குறிப்பாக ஒருவரைக் கூப்பிட்டு அவரிடம் அளித்தார்.

குருவாய் எமக்கருள் பெரிதாம் பரம்பொருள்

குருசங்கரர் அவர் பதம் எண்ணி……

என்று தொடங்கும் இந்தப் பாமாலையை ஸ்ரீ பெரியவா அழைத்துக் கொடுத்த பக்தரின் பெயரும் குருசங்கரர் என்பது தான் விசேஷம். பின் பிரதோஷமாமாவின் தர்மபத்தினியாம் மாது ஸ்ரீ வேதாம்பாளை இந்தப் பாமாலையைப் படிக்கும்படி இரண்டு தரிசனங்களில் வலியுறுத்தி அதன்படியே பக்தையும் சதாராவில் இப்பாமாலையை உருக்கமாக ஸ்ரீ பெரியவா சன்னதியில் பாடினார். அப்போது திரு.ஜோஷி எனும் பக்தர் ஒரு தட்டில் பூராசக்கரையை சமர்பிக்க அதை ஸ்ரீ பெரியவா தன்னிடமிருந்த அந்த சர்க்கரை அடங்கியப் பொட்டலத்தில் பொத்தலிட்டார்.

பின் மாது ஸ்ரீ வேதாம்பாள் ‘இந்த ஜகத்குரு தமிழட்சரப்பாமாலையை’ சொல்ல, சொல்ல ‘சங்கரசிவா’ எனும் முடியும் ஒவ்வொரு முறையும் பூராசக்கரையை தன் திருவிரல்களால் ஒரு சிட்டிகை எடுத்து தன் பவளவாயில் குசேலுனுக்காக பரந்தாமன் போட்டுக் கொண்டது போல் இங்கே பரமேஸ்வரர் போட்டுக் கொண்டார். ஒரு முறையல்ல; 126 வரிகள் கொண்ட பாமாலையின் 126 சங்கரசிவாவிற்கும்  ஈஸ்வரரின் திருநாவில் இனிப்பு சேர்ந்தது,.

அண்ணாமலை வளர் அருணாசலம் நீ

சுந்தரன்பாடிய தேவாரம் புகழ் சுந்தரன் நீ

செண்பகமாலையும் கொன்றையும் சூடும் சிவன் நீ

தில்லையில் கூத்தனாய் திகழ்ந்திடும் தெய்வம் நீ

என்பது போன்ற பொருட்பட அமைந்த 126 வரிகளிலும் ‘ஆமாம் அது உண்மையே’ என்று அங்கு தரிசித்தோருக்கெல்லாம் ஸ்ரீ பெரியவா தன்னை சாட்சாத் சங்கரர் என்பதை உணர்த்தி அருளினார்.

தன் தெய்வ வாக்கான பாடலையே ஒருவர் அவதூறு சொல்வதை ஏற்ற ஸ்ரீ பெரியவாளின் விருப்பு வெறுப்பிற்கு அப்பாற்பட்ட மாமனம், தன்னை சாட்சாத் சங்கரர் என்று ஒரு பரமபக்தன் பாமாலைப் பாடி புகழ்வதை ஏற்றுக்கொண்ட விதமே நமக்கெல்லாம் அத்தெய்வத்தை பரபிரம்ம சொரூபம் என விளங்கச் செய்து விடுகிறதல்லவா.

எல்லையிலா உம் கருணைதனைப்பேச வார்த்தையில்லை குரு சந்திர சேகரரே வாழிய நீ நீடுழி! என ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வத்தை சரணடைந்து சர்வ மங்களங்களயும், சர்வ ஐஸ்வர்யங்களையும் அடைவோமாக.

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

———————————————————————————————————————————————-

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (14-03-2012)

 “Maithreem Bhajatha! (Thanks Ra. Ganapathy)”

Shri Mahaperiyava, who is the avatar of Shri Adi Shankara, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

“Anbe Sivam” (Love is God), which forms an important part of Periyava’s avatar, had clearly explained the difference between what we want and what we do not want through an interesting experience. Periyava’s ardent devotee, Shrimathi M.S. Subbulakshmi, had been invited by United Nations to perform on October 23, 1966. On her request, Periyava had composed a hymn, which is the famous song that begins with “Maithreem Bhajatha”. The song is about the importance of love, to stop all the wars and live in peace. The song, which stands true to Deivathin Kural (Voice of God), had captivated all the audiences from around the world.

“Maithreem Bhajatha” means to practice love and compassion for others. Shri Ra. Ganapathy refers to an incident where Periyava practiced love and compassion even to people who were against Him.

Even though the song had captivated a lot of people from across the world, it had also attracted some criticism. Once when Ra. Ganapathy went for Periyava’s darshan, he mentioned to Periyava about the great reception of the song at the United Nations.

Periyava asked a puzzling question, “How do you know that everyone was happy about this song?”

Shri Ra. Ganapathy was confused and replied that there is nothing different in this song that will make people not like this.

Periyava called the Srimatam manager Shri Viswanatha Iyer and told him some information in Kannada. It looked as if Periyava had asked something and Viswanatha Iyer was not ready to do it. Periyava had asked him to bring him some letters and he was refusing to bring them.

Periyava asked if the letters had been burnt. Manager replied that they were not and went immediately to get them. When he came back with the letters, Periyava asked the manager to leave.

“There are three letters with similar thoughts. There could be around three thousand people with the same thoughts, but only three of them took pain in sending a letter. I will give you the one that is the best of these three.” Periyava told Ra. Ganapathy.

Ra. Ganapathy felt very bad after reading the letter. It was not the best letter, but instead was the worst. He could not even imagine if people could make such comments on a Mahan. In a full-scape paper, with tiny alphabets, the letter was written on both sides. Shri Ra. Ganapathy did not turn the page to continue reading the letter. He folded the letter and kept it on the floor, after reading the first page. His hands wanted to tear the letter into pieces.

Periyava asked Ganapathy to calm himself down and continued, “There are various kinds of people in this world. Everyone have their own thought process. It is good only if we only look at them calmly. There is no use in one praising us. Only when they tell their different opinion, it will help us realize our shortcomings and we will find a way to rectify our problem.” Periyava told this with an attitude to look at everything without any bias.

“It is very important to look at different opinions also with the same mindset. That is the reason, I showed you this letter. Don’t read more, if you do not like it.” Periyava said. This tells us how strong and harsh the letter was written.

Ganapathy said, “I want to see if there are any new points mentioned in the second page.”

Periyava replied, “No. Nothing new has been said in the second page. They have just said the same thing in a more strong way. You might start to scold them, if you read that page.” So he gave back the letter to Periyava.

Periyava did not want Ganapathy to scold the person who wrote the letter and at the same time for Ganapathy to not feel bad for the contents of the letter. Ganapathy was surprised by the way Periyava looked at both of them with compassion.

The conversation continued. It is also important to learn the contents of the letter.

The summary of the content of the letter was that Periyava was trying to use a music artist to project Himself as a religious leader of the world and is trying to get a place in the international arena.

Periyava asked Ganapathy, “What is your opinion of the author of the letter?”

Ganapathy replied, “I do not think this is right”.

Periyava replied, “I think whatever he is saying is correct. It is not the United Nations requested me to write a song/message. I do not even know if they are aware that there is Shankaracharya like me. Then why should I go by myself and tell them that I will write a song preaching world peace? Even in the Shastra’s, it is said that we are only supposed to preach to only the Sishyas (students). That should be the only duty.”

Periyava continued, “If the organization itself (like United Nations) had asked for a message, then it would have been different and correct too. But this did not happen that way. So it is not wrong to say that this was a “Self publicity act”. We cannot argue that the points mentioned in the letter is wrong. We need to understand that the points mentioned in the letter is correct and act carefully in the future.

Even though one tends to feel bad that someone can criticize Periyava, who stands true to His title Jagad Guru, and who wrote the song for everyone’s benefit and for world peace, how do we describe Periyava’s compassion even for the criticizer and His thought process to accept such comments?

Shri Ra. Ganapathy describes Periyava to be the epitome of dharma, justice and truth.

He firmly believes that Periyava’s thought that He should not have written the song itself has made it so popular among everyone.

A Pamalai (song) for Periyava

Periyava who is beyond praise and criticism has also accepted a devotee referring Him as Sankara Siva, thereby letting all the devotees know that He is none other than Sarveswaran.

It is the songs from Agathiyampalli Krishnamurthy, who was fortunate to merge with his Guru Shri Pradosham Mama and Periyava’s feet during the auspicious day of Pradosham.

Due to his parent’s devotion, his Guru Pradosham Mama’s blessings and his maternal Uncle Kavi Chakravarthy Vaidhyanatha Sharma’s ancestral blessings, Krishnamurthy had the opportunity to look at Periyava as Sarveshwaran and also sing praises of Him.

Just like how the Nayanmars enjoyed singing Palli Ezhuchi (song to wake up the Lord) to thalattu (lullaby to put the Lord to sleep), Krishnamurthy, who saw Eshwaran in Periyava, wanted to sing like the Nayanmars.

Like Shri Ramana Bhagawan’s Atchara Ramana Malai, Krishnamurthy had written “Sankara Siva” on Periyava’s 86th Jayanthi celebration under the guidance of Shri Pradosham Mama. When he had given this to Periyava at Miraj, Periyava had called a devotee and gave these songs and blessed him.

Guruvai emaku arul peritham param porul

Gurusankarar avar padham enni

(You have blessed me as my Guru, you are everything,

I submit this at the feet of Gursankarar)

This is the beginning verse of the song. The specialty was that the name of the devotee that Periyava had called was Gurusankar too. At two different times, Periyava had also asked Pradosham Mama’s wife Madhushree Vedambal to sing this pamalai. At Satara, when Madhushree Vedambal was singing this pamalai, a devotee called Jothi had bought purasakkarai (a sweet made of sugar). Periyava opened the packet and as Vedambal completed each stanza with “Sankara Siva”, Periyava took a pinch and ate it. He did not do this once or twice, but for all the 126 stanzas in the pamalai.

Annamalai valar Arunchalam nee

Sundaran padiya Devaram pughazh Sundaran nee

Shenbaga malaiayum Kondraiyum Soodum Sivan nee

Thillaiyil Koothanai thigazhthidum Deivam nee

(You are the Arunachala at Annamalai

You are the Sundaran praised by Sundarar in Devaram

You are the Siva who adorns the garland of Shenbaga and Kondrai flowers

You are the lord of Thillai (Chidambaram)

All the devotees present there realized that Periyava is Sarveshwaran and all the 126 stanzas in the pamalai (like the stanzas above) are true.

Just like Periyava accepted the criticism for the song He had written without any differences, He also accepted a devotee referring to Him as Sarveshwaran. This incident helps us realize that Periyava is indeed Sarveshwaran.

Let us all surrender to Periyava with these prayers – “There are no words to describe your kindness, long live Guru Chandrasekhara!”

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

%d