43.1 Sri Sankara Charitham by Maha Periyava – Incarnations of Vishnu and Shiva: Shiva-Vishnu similarities and differences

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Why do we keep saying Acharya is Siva Avataram and Lord Krishna is avatar of Maha Vishnu. What are the differences between them? Well, there aren’t actually any as clearly expressed by Sri Periyava below. It is also Sri Periyava’s sankalpam that this chapter that explains the indifference between Siva and Vishnu has to be published at the same time when we are publishing the Siva Vishnu Abedham series. Perfect timing by the great master 🙂

Many Jaya Jaya Sankara to our sathsang volunteers, Shri ST Ravi kumar for the great translation and Smt. Sowmya Murali for the mesmerizing drawing and the audio. Rama Rama


விஷ்ணு அவதாரமும் சிவாவதாரமும்: சிவ-விஷ்ணு ஒற்றுமை வேற்றுமைகள்

க்ருஷ்ணாவதாரத்தைத் திரும்பத்திரும்பக் குறிப்பிட்டு, அவர் சொன்ன கீதையையும் திரும்பத்திரும்ப quote பண்ணி, அதோடு ஆசார்யாள், ஆசார்யாள் என்று முடிச்சுப் போட்டால் ஒரு கேள்வி வரலாம்: “ஆசார்யாள் பரமசிவ அவதாரமென்றுதான் கேள்விபட்டிருக்கிறோம். க்ருஷ்ணர் மஹாவிஷ்ணுவின் அவதாரம். அப்படியிருக்க, அவர் அந்த மாதிரி பண்ணினார், இவர் இந்த மாதிரி பண்ணினார். ஆனாலும் அவர் கீதையில் சொன்ன வாக்குபடிதான் இவர் அவதரித்ததே; காலச் சூழ்நிலை மாறுபட்டதால் அவதார வாழ்க்கைமுறை மாறுபட்டாலும் கீதையில் சொன்ன அதே தர்ம ஸம்ஸ்தாபன நோக்கத்தைத்தான் பூர்த்தி பண்ணினார்” என்றால் எப்படி?”

அப்பா! சிவன், விஷ்ணு என்று முழுக்கவும் பேதப்பட்டு இரண்டு பேர் இல்லை. ஒரே பரமாத்மா போட்டுக் கொண்டுள்ள இரண்டு ரூபபேதங்கள்தான் அவர்கள். “ப்ரச்நோத்தர ரத்னமாலிகா”வை முடிக்கிற இடத்தில் ஆசார்யாள் ஒரு கேள்வி கேட்கிறார்:

கச்ச பகவான்?” “பகவான் என்பது யார்?”

மஹேச: சங்கரநாராயணாத்மைக:” என்று பதில் கொடுக்கிறார்.

வேதாந்தத்தில் ஈச்வரன் என்றும், ஈசன் என்றும் சொன்னால் சிவன் என்று அர்த்தமில்லை. ஜகத் வியவஹாரத்தையெல்லாம் நடத்திக் கொண்டிருக்கும் மஹா சக்தியான ஸகுண ப்ரமத்தைத்தான் ‘ஈச்வரன்’ என்று அங்கே சொல்வது. “மஹேச:” என்னும்போது மஹிமை வாய்ந்த ஈசனான அந்த ஸகுண ப்ரஹ்மம்தான் பகவான் என்று ஆசார்யாள் பதில் கொடுத்துவிடுகிறார். உடனே அடுத்த கேள்விக்குப் போய்விடவில்லை. “முக்யமாக நம் மதத்தில் சைவர், வைஷ்ணவர் என்று இரண்டு பிரிவு இருப்பதால், ‘மஹேசன்’ என்றால் அதோடு விடமாட்டார்கள். பகவான் ‘யார்?’ என்று கேட்ட மாதிரியே, ‘மஹேசன் என்றால் யார்? சிவனா, விஷ்ணுவா?’ என்று கேட்பார்கள்” என்று ஆசார்யாள் நினைத்து, அதற்கும் பதிலைச் சேர்த்துச் சொல்லிவிட்டார் :

“மஹேச: சங்கர-நாராயணாத்மைக:” சங்கர-நாராயண-ஆத்மா-ஏக :”.

“சங்கரன், நாராயணன் இருவருக்கும் ஆத்மாவாக இருக்கப்பட்ட ஏக வஸ்து”, அல்லது, “சங்கரன், நாராயணன் இருவராகவும் உள்ள ஆத்மா என்ற ஏக வஸ்து,”-அதுதான் பகவான், அதுதான் மஹேசன்.

இருக்கிற அத்தனையும் ஒரே ஆத்மா அல்லது ப்ரம்மம்தான். அதுவே சிவன், அதுவே விஷ்ணு.

“அதுவே எல்லாமாய், எல்லாருமாய், நாமாகவுங்கூட இருக்கும்போது, இந்த இரண்டு பேரைக் குறிப்பாக ஏன் அப்படிச் சொன்னார்?”

அதுதான் நம் எல்லோருமாகவும்கூட இருப்பது என்பது வாஸ்தவந்தானப்பா! ஆனால் நம்மில் ஒருத்தருக்கொருத்தர் நாமேதான் மற்றவரும் என்று தெரிகிறதா? தெரிந்தால் இத்தனை போட்டி, அஸூயை, த்வேஷம் இருக்குமோ? நாம் ஆத்மாதான் என்பதாவது நமக்குத் தெரிகிறதா? ஈச்வரனும் (சிவனும்) மஹாவிஷ்ணுவும் இப்படியில்லை. அவர்களுக்குத் தாங்கள் ஆத்மாவான ப்ரஹ்மம்தான் என்று நன்றாகத் தெரியும். அதோடு ஈச்வரனுக்குத் தானே மஹாவிஷ்ணு என்று தெரியும். மஹா விஷ்ணுவுக்கும் தானே ஈச்வரன், அதாவது சிவன் என்று தெரியும்.

லோக நாடக தர்பாரில் ஒரே பரமாத்மா பல ரூபங்களை எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றும் ஒரு இலாகாவை நிர்வஹித்து விளையாடும்போது, மாயா ப்ரபஞ்சத்தை நடத்தி வைத்து ப்ரவ்ருத்தி தர்மத்தைப் பரிபாலிக்கும் சக்ரவர்த்தியாக மஹாவிஷ்ணுவும், ப்ரபஞ்சத்திலிருந்து விடுவித்து மோக்ஷத்தை அருளும் நிவ்ருத்தி தர்ம மூர்த்தியாகப் பரமசிவனும் பொதுவில் இருப்பார்கள். சிவன் மோக்ஷம் தருவதில் இரண்டு வகை. ஒன்று — தகுதி பார்க்காமல் ஸகலருக்கும் ஸம்ஸார விடுதலை தருவது. ப்ரளயத்தில் அப்படித்தான் எல்லா ஜீவர்களுக்கும் ரெஸ்ட். ஆனால் இது சாச்வதமில்லை. மறு ஸ்ருஷ்டியில் அவர்கள் திரும்பவும் ஸம்ஸாரத்தில் பிறக்கத்தான் வேண்டும். இன்னொரு வகை தான் சாச்வத மோக்ஷம்: தகுதி பெற்றவர்களுக்கு மாத்திரம் ஞானத்தை அளித்து ஸம்ஸாரத்திலிருந்து விடுவிப்பது. பரமசிவன் இந்த இரண்டுவித மோக்ஷங்களையும் இரண்டு விதமான அவஸரங்களில் (கோலங்களில்) அருளுகிறார். தகுதியில்லாதவர்களுக்கு ஒரு ப்ரளயத்திற்கும் மறு ஸ்ருஷ்டிக்கும் இடையிலுள்ள அவ்வளவு நீண்ட காலம் ஸம்ஸார நீக்கம் தருவதுகூட கர்ம நியதிக்கும் நீதிக்கும் பொருந்தாத ‘ஓவர்-கருணைதான் என்பதால், அதைக் கொஞ்சம் ஈடுகட்டுவதற்காக அப்போது ஜீவர்களை பயமுறுத்துகிற மாதிரி ருத்ரன் என்ற பெயரில் ஸம்ஹார மூர்த்தியாகி ப்ரளயம் என்று கோரமாகக் காட்டுகிறார். தகுதியுள்ளவர்களுக்குப் பரம சாந்தமாக ஞானாநுக்ரஹம் செய்து நித்ய மோக்ஷத்தில் சேர்க்கும்போது தக்ஷிணாமூர்த்தியாக சாந்தமான ஸெளம்ய ரூபத்தில் இருக்கிறார்.

பொதுவிலே இப்படி மஹாவிஷ்ணு-மாயா லோக நிர்வாஹம், பரமேச்வரன் – ஞான* ப்ரதானம் என்று தோன்றும்படியிருந்தாலும், பரமாத்மாவின் லீலையே ” unity in diversity” (வேற்றுமையில் ஒற்றுமை) என்பதில் தான இருக்கிறது? அதனால் இரண்டும் ஒரே பரமாத்மா என்று காட்டும்படியாக அவ்வப்போது இந்த இரண்டு பேர்களும் தங்கள் இலாகாக்களைக் கொஞ்சம் பரஸ்பரப் பரிவர்த்தனையும் பண்ணிக்கொள்வார்கள்! தங்களுடைய ஐகீ பாவத்தை (ஒற்றுமையை) இப்படி விளையாடிக் காட்டுவார்கள்.

எல்லா அவதாரங்களிலுமே மஹாவிஷ்ணு துஷ்ட ஸம்ஹாரம் பண்ணினார், அவர் கையால் ஸம்ஹாரமானவர்கள் மோக்ஷத்திற்கே போனார்கள் என்னும்போது அவர் பரமேச்வரனின் ருத்ர கார்யத்தைத்தானே பண்ணியிருக்கிறார்?

வேதம் சிவபரமாக ஸூக்தங்களையும் யஜ்ஞங்களையும் கொடுத்திருக்கிறது; விஷ்ணு பரமாகவும் அதே மாதிரி கொடுத்திருக்கிறது. இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி அடைமொழிகளைத்தான் கொடுத்து, பேதமேயில்லை என்று காட்டுகிறது. ஸ்ம்ருதிகளிலும் அப்படித்தான். புராணங்களைப் பார்க்கும்போதுதான் சைவமான புராணங்கள், வைஷ்ணவமான புராணங்கள் என்று இருப்பதில், பேதப்படுத்தி, ‘இதுதான் ஒசத்தி; இல்லை, இன்றொன்றுதான் ஒசத்தி’ என்று காட்டுவதாகத் தோன்றும். ஆனாலும் ஆதார சாஸ்த்ரங்கள் என்று ‘அதாரிடி’ பார்த்தோமானால் முதலில் ச்ருதி (வேதம்) , அப்புறம் ஸ்ம்ருதி, அப்புறந்தான் புராணம் என்று வரும். அது மட்டுமில்லாமல் புராணங்களையேகூட ஆழ்ந்து பார்த்தால் ஒவ்வொன்றிலும் சில இடத்திலாவது, ‘பேதமே கிடையாது, இரண்டும் ஒன்றுதான்’ என்ற அபிப்ராயம் தத்வோபதேசமாக மட்டுமின்றி, நன்றாக மனஸில் தைக்கிற மாதிரி கதா ரூபமாகவேகூட விளக்கப்பட்டிருக்கும். அவரவர் மனஸுக்கு ஏற்றபடி இஷ்ட தெய்வமாக வரித்த மூர்த்தி ஒன்றிடமே சித்தம் சிதறாமல் ஒருமுகப்பட வேண்டுமென்றே ஒசத்தி-தாழ்த்தி சொல்லியிருப்பதெல்லாம் என்று புரியும்.

ஆகையால் சிவ-விஷ்ணுக்களை ஒரேயடியாக பேதப்படுத்தி நினைப்பது ரொம்பத் தப்பு. பூர்ண வைதிகமாக ஆசார்யாள் மறுபடி ஸ்தாபித்த ஸ்மார்த்த ஸம்ப்ரதாயஸ்தர்களுக்கு சிவ-விஷ்ணு பேதம் இருக்கவே கூடாது என்று தான் அவர் வைத்திருக்கிறார். ச்ருதி, ஸ்ம்ருதி, புராணங்கள் காட்டுகிற அபேதத்தையே அவர்கள் பின்பற்ற வேண்டுமென்று வைத்திருக்கிறார்.

__________________________________________________________________________________

Incarnations of Vishnu and Shiva: Shiva-Vishnu similarities and differences

A question may arise when the incarnation of Lord Krishna is repeatedly mentioned and the Gita expounded by Him is also quoted again and again and a connection is drawn to Acharya. “We have heard that the incarnation of Acharya is that of Shiva, whereas Krishna was that of Vishnu.  In which case, what is the point in saying that He (Krishna) did like this and he (Acharya) did like this and that Acharya’s incarnation took place as per the word given by Krishna and that although there were differences between the two due to the differences in the circumstances, only the same objective of reestablishing the Dharma was fulfilled by Acharya, etc.?”

Man, there are no two different persons as Shiva and Vishnu.  They are only the two different forms of the same Supreme God.  Acharya asks one question in the concluding portion of “Prachnothara Malika”.  “Kacha Bhagawan?”  “Who is the one called as Bhagawan?”  He replies, “Mahesa: Shankaranarayanathmykha:”.

In Vedantha, when we say Eswara and Easa, it does not mean Shiva.  It is the virtuous Supreme Brahman, the supreme power, who is conducting the affairs of the worlds, is referred to as Eswara.  Acharya clarifies that when it is said, “Mahesa:”, it refers to the wonderful God, who is the virtuous Supreme Brahman.  He did not go to the next question immediately.  Particularly, in our religion, since we have two divisions as Saivite and Vaishnavite, People will not leave it at only saying “Mahesa:”.  Knowing that just like asking “Who is God?”, people will ask, who, Shiva or Vishnu? When you say, Mahesa, Acharya has replied to that also.

“Mahesa: Shankaranarayanathmykha: Shankara-Narayana-atma-ekaha:”

It means that the one thing which is the soul for both Shankara and Narayana or the one thing which is the soul, which is both Shankara and Narayana – and that is Bhagawan and that is Mahesa.

Everything that is there, is only one soul or Brahmam.  It is Shiva and also, It is Vishnu.

When it is everything, everybody and also us, why did he mention two people, in particular?

It is true that it is all of us also.  But how many of us realize that each and every one of us are same?  If we know that, would there be so much competition, dissatisfaction, hatred?  Do we at least realize that we are a soul?  Eswara (Shiva) and Maha Vishnu are not like that.  They know very well that they are the soul, the Supreme spirit (Brahmam).  Moreover, Shiva knows that he himself is Maha Vishnu, and Maha Vishnu knows that he is himself Eswara, that is Shiva.

When the same paramathma is playing in the worldly theatre of court, taking different forms to administer different departments, in general, He is as Maha Vishnu, the emperor or the supreme ruler to nurture the pravruthi dharma for administering the illusory world and He is as Paramashiva, the Nivruthi Dharma icon for freeing from the earthly world and blessing liberation.  There are two ways in the liberation given by Shiva.  One – giving liberation from the material life to all, without looking into the eligibility, that is how all the souls get rested at the time of delusion (Pralaya). But this is not permanent.  All of them have to take birth in this material life, in the next creation.  The other type is the permanent liberation.  The liberation granted by bestowing the superior knowledge (Gnana) only to the eligible people.  Paramashiva gives these two types of liberation in two different contexts.  As providing relief to the undeserving people for a somewhat very long period of time between one delusion and the next creation, is a rather, little exaggerated mercy, not in accordance with karma rules and justice, in order to compensate the same, He takes the form of destructive icon with the name of Rudhra and displays the horrible delusion, as though to instil fear in the hearts of the living souls.  For those who are eligible, He blesses them with the superior knowledge, in a very peaceful manner, in the form of the calm, tranquil Dhakshinamurthy, and enable them to join the permanent liberation.

Even though, in general, it appears that Maha Vishnu – is for administering the illusory world and Parameswara – for providing the supreme knowledge, is it not that the divine sport lies in “unity in diversity’?  Therefore, to show that both of them are the same Supreme God, they will, once in a while, mutually exchange their departments.  They will demonstrate their quality of being one, by playing this way.

In all incarnations, Maha Vishnu destroyed the evil.  When all the people who were destroyed by Him, were liberated, was He not discharging the activity of Parameswara?

Vedas have given as proof of Shiva, the holy hymns (Sukthas) and holy sacrifices (Yajnas).  Similarly, it has given as proof of Vishnu also.  By giving the same titles, it has shown that there is no difference between the two.  In smruthis (whole body of sacred tradition or what is remembered by human teachers) also, it is the same.  Only when you see the Puranas, since there are Saiva puranas and Vaishnava puranas, it may appear as though one is superior to the other and vice versa.  However, when you consider the order of authority of the treatises (sasthras), first comes, Shruti (Vedas), then Smruthi and then only, Puranas.  Not only that, if one studies deeply the Puranas also, it can be observed that at least in a few places, there will be a mention that there is no difference and both are same, not only in the form of original enunciation of truth, but also explained in the form of stories to imprint the concept strongly in the mind.  It could be understood that the superior-inferior etc., have been talked about only with the objective of conveying that one should concentrate with a pointed focus on the one God, whom he likes, without any wavering of the mind.

Therefore, it is very wrong to think Shiva and Vishnu as different ones.  Acharya has prescribed that all the followers of the Smartha traditions reestablished by him as a complete Vedic religion, should not have any Shiva-Vishnu discrimination.  He has laid down that they should follow the same non-different concept shown by the hymns (Shruti), remembrances (Smruthi) and the Puranas.

_________________________________________________________________________________
Audio



Categories: Deivathin Kural

Tags: ,

4 replies

  1. Awesome, Sowmi!Amazing work, Sri Sai Srinivasan!

  2. சிவ விஷ்ணு இரண்டுமே ஒரே பரமாத்வாவின் வெவ்வேறு ரூபங்கள் எனும் தத்துவத்தை உணர்த்தும் பொருட்டு, சிவனை சங்கு, சக்கரத்தோடும், விஷ்ணுவை பிறை சூடிய பெருமானாகவும், கூடவே ஆச்சார்யாளையும் சேர்த்த சௌம்யாவின் அற்புதமான கைவண்ணத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். மஹாபெரியவா சரணம். ஹரஹர சங்கர ஜயஜய சங்கர.

  3. Amazing drawing !! Jaya Jaya Sankara Hara Hara Sankara

  4. A suggestion: Please don’t translate Puranas as mythological, as it was introduced by Christians as derogatory to undermine our Puranas. Please use the same word, Puranas, as it is non translatable.

    Thanks for the great service. My namaskarams

Leave a Reply to A.S.KannanCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading