Jaya Jaya Sankara Hara Hara Sankara – Sri Periyva’s Thrikaala Gnanam and Saint Thirumoolar’s significance has been detailed out in this newsletter from Sri Pradosha Mama Gruham.
Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (15-2-2012)
“திரிகால ஞானேஸ்வர பெரியவா”
(நன்றி: மகாபெரியவாள் தரிசன அனுபவங்கள்)
எத்தனையோ மகிமைகளைப் புரிந்தருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் சாட்சாத் சர்வேஸ்வரர் அம்மகிமைகளை மறைத்து ஒரு எளியத் துறவிகோலம் கொண்டு அதே சமயம் சுகப்பிரம்மரிஷி அவர்களின் தவ வலிமைக்கு நிகராக நம்மிடையே அருள்பாலித்துள்ளார்.
கும்பகோணம் ஸ்ரீ வேங்கடேச நடராஜன் எனும் ஸ்ரீ பெரியவா பக்தர் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் தன் அனுபவத்தில் கண்ட தெய்வாம்சத்தை விளக்குகிறார். இந்த பக்தர் தான் அனுபவித்த ஸ்ரீ பெரியவாளின் தெய்வாம்சத்தைச் சொல்லுவதற்கு முன் தன்னுடைய வம்சாவளி பற்றிக் கூறினால் தான் அந்த சம்பவத்தின் சிறப்பு விளங்கும் என்றும் கூறுகிறார்.
இவருடைய தந்தையார் G. வேங்கடேசன் என்பவர் வாழ்ந்த காலம் 1897 முதல் 1976 வரை. இவர் மஹாமஹோபாத்யாய உ. வே. சாமிநாத ஐயர் எனும் தமிழ் தாத்தாவிடம் தமிழ் கற்றவர். 1930 முதல் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் உத்யோகம் ஏற்று பின் கிராம அபிவிருத்தி ஆபீஸராகவும் பணியாற்றி 1957 இல் ஓய்வு பெற்றவர். ஸ்ரீ மஹாபெரியவாளின் பூர்வாஸ்ரம இளைய சகோதரரான ஸ்ரீ சாம்பமூர்த்தி சாஸ்திரிகள் 1931 முதல் இவர்களுடைய குடும்ப நண்பர்.
தந்தையார் ஸ்ரீ வேங்கடேசன், ராமாயண – சிவ – விஷ்ணு புராண அடிப்படையில் மடை திறந்தாற்போல சொற்பொழிவு ஆற்றும் திறமை மிக்கவர். இதை ஸ்ரீ மஹா பெரியவாளும் பாராட்டியுள்ளார்.
நடராஜன் அவர்களின் அம்மாவழிப் பாட்டனாரும் ஸ்ரீ மஹா பெரியவாளிடம் ஸ்ரீ மடத்தில் அனுசரணையாக இருந்தவர். அவர் பெயர் திருவாலங்காடு ராமசேஷ சாஸ்திரிகள் என்பதாகும்.
ஸ்ரீ மேட்டூர் சுவாமிகளும் பூர்வாஸ்ரமத்தில் புதுக்கோட்டையில் நடராஜன் அவர்களது வீட்டின் அடுத்த ஒட்டின வீட்டில் வசித்தவர். நடராஜன் 19 வயதில் உத்யோகம் வகிக்கத் தொடங்கி வடக்கே பீஹார், ஒரிஸ்ஸா மகாணங்களுக்குச் சென்று விட்டார்.
நடராஜன் அவர்களின் தந்தை ஸ்ரீ வேங்கடேசன் அவர்களின் மறைவுக்கு பின் அடுத்த வருடம் இவருடைய தம்பி பாலசுப்ரமணியன் ஸ்ரீ பெரியவாளை கர்நாடக தேசத்தில் முகாம் ஒன்றில் தரிசிக்கச் சென்றார். தன் தந்தையின் நினைவாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற தன் எண்ணத்தைப் பிரார்த்தனையாக ஸ்ரீ பெரியவாளிடம் விண்ணப்பித்துக் கொண்டார்.
ஆனால் அன்று ஸ்ரீ பெரியவா மௌனம். அதனால் ஒன்றும் சொல்லவில்லை. அடுத்த நாள் காலையில் ஸ்ரீ பெரியவாளே பாலசுப்ரமணியனைக் கூப்பிட்டுப் பேசினாராம்.
“ஏண்டா……….உங்கப்பா நிறைய தமிழ் பேசுவாரே? திருமந்திரம் பாட்டெல்லாம் சொல்வார்…… உனக்கு ஏதாவது தெரியுமா? சொல்லுவியா?” என்று ஸ்ரீ பெரியவா கேட்க, பாலசுப்ரமணியன் கொஞ்சம் யோசித்து விட்டு ஒரு பாட்டைச் சொன்னார் போலும்.
பின் ஸ்ரீ பெரியவா அவரிடம் “சுந்தரநாதன் திருமூலரா ஆனது உங்க பெரியம்மாவை கொடுத்திருந்ததே அந்த சாத்தனூர், ஒவ்வொரு ஐப்பசி மாதம் பௌர்ணமியோடே சேர்ந்து அசுவதி நட்சத்திரம் வரும்………..அன்னிக்குத்தான் திருமூலரின் திருநட்சத்திரம். உங்க அப்பா ஞாபகமா வருஷாவருஷம் திருமூலர் நட்சத்திரத்தை கொண்டாடணும்……..ம் நீ எவ்வளவு செலவு பண்றதா இருக்கே” என்று கேட்டுள்ளார்.
பின் அதை எப்படிக் கொண்டாட வேண்டுமென்று ஸ்ரீ பெரியவா விளக்கியபோது, இப்படியும் எளிமையாக அதே சமயம் திருமூலரின் திருமந்திர பாடல்களை பரவலாக அனைவரும் அறியச் செய்யமுடியும் என்பது புரிந்தது.
திரு டன்லப் கிருஷ்ணன் என்பவரையும், கதர்க்கடை வேங்கட்ராமன் என்பவரையும் சேர்த்து ஒரு டிரஸ்ட் ஏற்படுத்திக் கொள்ள ஸ்ரீ பெரியவா சொல்லிவிட்டுத் தொடர்ந்தார்.
“சாத்தனூர்லே அஞ்சாறோ, பத்துப் பன்னிரெண்டோ எத்தனை பள்ளிக்கூட பசங்க கிடைக்கறாளோ அவாளை சேர்த்துக்கணும், ஜாதி, மதம் வித்யாசம் கிடையாது. ஒரு நோட்டு போட்டுண்டு ஒவ்வொரு பையனும் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திருமந்திரப் பாட்டுக்களை எழுதணும், ஐப்பசி மாசத்துக்கு முன்னாடி எழுதி முடிக்கணும். நீங்களெல்லாம் முதல் நாள் சாத்தனூர் போய் சாயங்காலம் கோயில்லே பிரசங்கம் பண்ணனும் . உங்க அப்பா பாணியிலே யாராவது பேசட்டும்……….
“மறுநாள் அசுவதி நட்சத்திரம்! அன்னிக்கு விடியகார்த்தாலே அந்த ஊர்க்கோடியிலே இருக்கிற ஐயனார் கோயிலுக்குப் போயி அங்கே திருமூலர் சன்னதியிலே பூஜாரியை வச்சுண்டு கற்பூர ஆர்த்தியெல்லாம் காட்டணும். அப்புறம் எல்லோரும் சன்னதி முன்னாலே உட்கார்ந்துண்டு ‘ஐந்து கரத்தனை’ பாட்டிலேர்ந்து ஆரம்பிச்சு, ஐம்பது பாட்டு படிச்சுட்டு நமஸ்காரம் பண்ணிட்டு அங்கிருந்து கிளம்பணும்.
‘அங்கிருந்து நடந்துண்டே, படிச்சுண்டே, திருவாவடுதுறை மாசிலாமணீஸ்வரர், கோயிலுக்குப் போய் அந்த கோயில்லே வெளி பிரகாரத்திலே ஒரு படர் அரசமரம் இருக்கு. அந்த அரசமரத்துக்கு கீழே உட்கார்ந்து தான் திருமூலர் வருஷத்துக்கு ஒரு பாட்டு வீதம் மூவாயிரம் பாட்டும் பாடினதா சொல்றா…..
‘நீங்க கோஷ்டியா போறவா அந்த மரத்தின் கீழே உட்கார்ந்துண்டு அன்னிக்கு முழுக்க, சாயந்தரத்துக்குள்ளே திருமந்திரம் பாட்டு முச்சூடும் பாராயணம் பண்ணணும். ஓரே கண்டிஷன் அப்படி நீங்க பாத்துப் படிக்கிற பாட்டெல்லாம் பள்ளிக்கூட பசங்க தங்களோட கைப்பட எழுதின நோட்டைப் பார்த்துத் தான் படிக்கணும்’.
ஸ்ரீ பெரியவா இப்படி நீண்ட தொரு விளக்கமாக திருமூலரை எப்படிக் கொண்டாடுவதென்று விவரித்து கொஞ்சம் நிறுத்திக் கொண்டார். அங்கு சூழ்ந்திருந்த பக்தர்கள் அனைவரும் வேறு எங்கும் தாவாத மனோ வாக்யத்துடன் ஸ்ரீ பெரியவாளின் இந்த அரிய தெய்வ வழிபாடு முறை பற்றின விளக்கங்களை மெய்மறந்து கேட்டு அனுபவித்துக் கொண்டிருந்தனர்.
ஸ்ரீ பெரியவாளெனும் காருண்யத் தெய்வம் பின்பு ஒரு மோஹனப் புன்னகையுடன்,
“எல்லோரையும் பட்டினியா இருக்கச் சொல்லலே…..சௌகர்யம் போல நிறுத்திண்டு, அப்பப்போ ஆகாரமும் பண்ணிக்கலாம், காப்பி குடிக்கலாம். டிரஸ்டிலேர்ந்து எவ்வளவு வட்டி வருமோ அதை வைச்சுண்டு நோட்டிலே திருமந்திர பாடல்களை எழுதின பசங்களுக்கு ஏதாவது சன்மானம் பண்ணலாம்.
தெய்வவாக்காக, ஒரு தெய்வீக தொண்டினைத் தொடங்குவதற்காக ஸ்ரீ பெரியவா இப்படி ஒரு எளிமையான வழியை பாலசுப்ரமணியன் அவர்களிடம் மடைதிறந்தார்போல் கூறி முடித்தபோது அங்கிருந்தோருக்கும் அவருக்குமே பிரம்மையாக இருந்தது.
தன் அப்பாவின் ஞாபகமாக ஏதாவது செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டு கேட்டவரை காரணமாக வைத்து ஸ்ரீ பெரியவாளெனும் தெய்வம், அவரது தந்தை திருமூலர் பாட்டெல்லாம் சொல்வாரென்று நினைவு படுத்திக் கூறும் சாக்கில் திருமூலரை வழிபட்டு கொண்டாடும் ஒரு தெய்வீகப் பணிக்கு வழிகாட்டியுள்ளதை அங்கிருந்தோர் உணர முடிந்தது.
அதினிலும் மேலாக ஸ்ரீ பெரியவாளின் தெய்வீகத்தன்மை இச் சம்பவத்தில் தான் உணர்ந்தவிதத்தை பாலசுப்ரமணியனின் சகோதரர் நடராஜன் எடுத்துக்காட்டுகிறார்.
அதாவது ஸ்ரீ பெரியவா இந்த தெய்வப்பணியினை செய்யச் சொல்லி ஆரம்பித்தபோது “சுந்தரநாதன் திருமூலரா ஆனது உங்க பெரியம்மாவைக் குடுத்திருந்ததே அந்த சாத்தனூர்….என்று சர்வசாதாரணமாக சொல்வது போல் சொல்லியிருந்தார்.
இதில் அதிசயம் என்னவென்றால் சாத்தனூர் என்ற பெயரில் பாஸ்கர க்ஷேத்ரத்திலே ரெண்டு, முணு சாத்தனூர்கள் உண்டு. பெரியம்மாவை அதாவது இவருடைய அம்மாவின் சகோதரி திருமணம் செய்து கொடுத்த கொளத்தங்கரை சாத்தனூர் என்று ஸ்ரீ பெரியவா குறிப்பிட்டது தான் அதிசயம். எல்லாமும் அறிந்த தெய்வமாகையால் சர்வ சகஜமாக இப்படி எதிரே நிற்கும் பக்தரைப் பற்றியும், அவருடைய குடும்பத்தின் அனைத்து விபரங்களையும் நடமாடும் தெய்வமாக தான் அறிந்தே இருக்கும் அதிசயம்; ஸ்ரீ பெரியவாளே அறியாமலேயே வெளிப்படுவது போலாகிறதல்லவா?
மேலும் பாலசுப்ரமணியன் அம்மா வழி தாத்தா ஸ்ரீ பெரியவாளிடம் பால்ய பருவத்திலிருந்தே அனுசரணையாக இருந்ததால் அவர் பெண்ணாண ‘பெரியம்மாவைக் கல்யாணம் செய்து கொடுத்த இடம் சாத்தனூர் என்பதை ஸ்ரீ பெரியவா அறிந்திருக்கக்கூடுமே என்று வைத்துக் கொண்டாலும், பெரியம்மாவை கொடுத்திருந்ததே’ என்று பெரியவா கூறியபோது அந்த பெரியம்மா இப்போது இல்லை என்பதையும் எத்தனை வருடம் கடந்தும் ஸ்ரீ பெரியவா அறிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறதல்லவா?
தினமும் பல்லாயிரம் பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்தாலும் அந்த பல்லாயிரம் பக்தர்களையும் தாண்டி அவர்களின் உறவினர்களின் விபரங்கள் என அனைத்தையும் அறிந்த மகான் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாள் அல்லவோ?
மேலும் திருமூலருக்கு அற்புதம் நிகழும் முன் சுந்தரநாதன் என்ற பெயர் தான் என்பதை ஸ்ரீ பெரியவா சொன்னது ஞாபக சக்தியால் என்பதா ஞானத்தால் என்பதா என்று ஸ்ரீ நடராஜன் வியக்கிறார்.
கூடவே எப்படியெல்லாம் திருமூலரைக் கொண்டாட வேண்டுமென்று விவரிக்கும் போது படர் அரசமரம், திருவாவடுதுறை மாசிலாமணீச்வரர் கோயில், ஐயனார் கோயில் என்பதாக அப்படியே அந்த சிறு ஊரின் விபரங்களையும் அந்த கோயிலுறை சுவாமி சித்தேஸ்வரர், ஆனந்த கௌரி போன்ற நுணுக்கமான சங்கதிகளையும் ஸ்ரீ பெரியவா சரளமாக சொல்லும்போது ஸ்ரீ மகான் முக்காலமும் உணர்ந்த ஞானியாக திட்டவட்டமாக உறுதிபடுவதாகவும் நடராஜன் சிலாகித்துக் கூறுகிறார்.
இந்த தெய்வத் தொண்டு ஆரம்பிக்கப்பட்டு பதிமூன்று முறை நடந்தது. முதல் வருடம் நூறுபேர், கடைசியில் தேய்ந்து ஆறேழு பேர் என்று ஆகி ஸ்ரீ பெரியவாளே “போறும்” என்று சொல்லிவிட்டார்.
இது நடந்து பல வருடங்களாயின. 1982 இல் ஒருநாள் திடீரென்று நடராஜனுக்கு ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க ஆசை ஏற்பட்டது. அதே போல் தம்பி பாலசுப்ரமணியனும் நினைத்ததாகக் கூற இருவரும் சதாராவிற்குக் கிளம்பினர். போய்ச் சேர இரவாகிவிட்டதால் தரிசிக்க முடியவில்லை. மறுநாள் விடியற்காலையில் ஸ்ரீ பெரியவாளின் விஸ்வரூப தரிசனத்திற்கு இருவரும் காத்திருந்தனர். சிறியதொரு சாளரம் திறந்து கதவும் திறந்து கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. ஆனால் இவர்களுக்குத் தரிசனம் கிட்டவில்லை. சிறு சந்துபோல வெராண்டா இருந்ததால் தரிசிக்க முடியவில்லை. கொஞ்சம் வருத்தத்தோடு இவர்கள் இருவரும் நின்றபோது “திருமூலர் படிக்கறவா யாராவது இருந்தா பெரியவா கூப்பிடறா” என்று உள்ளிருந்து ஒருவர் கேட்டபோது, சதோதரர் இருவரும் ஸ்தம்பித்து நின்றனர். ஸ்ரீ பெரியவாளின் ஞானதிருஷ்டி மகிமையை இருவரும் உணர்ந்ததில் மெய்சிலிர்க்க தெய்வத்தைத் தரிசிக்க உள்ளே சென்றனர்.
இப்பேற்பட்ட திரிகாலஞானேஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவாளிடம் நாம் புகும் சரணாகதி நம்மை எப்போதும் காப்பாற்றி சகல ஐஸ்வர்யங்களையும், சர்வ மங்களங்களையும் அள்ளித்தரும் என்பது உறுதி!!
— கருணை தொடர்ந்து பெருகும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
________________________________________________________________________________
Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (15-02-2012)
“The Saint who knows everything”
(Thanks: Maha Periyavaa Darisana Anubavangal)
Shri Mahaperiyava, who is the avatar of Shri Adi Shankara, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.
Kumbakonam Shree Venkatasa Natarajan, an ardent devotee of Periyava, explains the divine aspect of Periyava based on his experience. He feels that, he needs to explain a little bit about his ancestors before he can explain the experience, so everyone can help better understand this experience.
His father Shri G. Venkatesan, who lived from 1897 until 1976, learned Tamil under Maha Upadhyaya U. Ve. Swaminatha Iyer, who was also called as “Tamil Thatha”. He worked a Village Development Officer from 1930 at the Pudukottai Samasthanam and retired in the year 1954. Periyava’s Poorvashrama brother Shri Sambamoorthy was their family friend.
Shri Venkatesan had the talent to talk about Ramayana, Shiva Puranam and Vishnu Puranam. Periyava had talked great about him and his talks multiple times.
Natarajan’s maternal grandfather Shri Thiruvalangadu Ramasesha Shastrigal was also a great devotee of Periyava and was very closely involved with Srimatam.
Shri Mettur Swamigal before taking Sanyasa ashram was Natarajan’s neighbor at Pudukottai. When Natarajan was 19, he had started working and was posted at Orissa and Bihar during those times.
A year after the demise of Shri Venkatesan, Natarajan’s brother Shri Balasubramanian went to Karnataka for Periyava’s darshan. He requested Periyava that he wanted to do something in the memory of his father. Periyava was observing silence that day and actually talked to Balasubramanian the following day.
“Your father used to speak a lot of Tamil literature. He also knew Thirumanthiram. Do you know any of those? Can you tell me?” Periyava asked him. Balasubramanian thought for some time and said a song he knew.
Then Periyava said, “Sundaranathan turned into Thirumoolar at Sathanur, where your Periamma belongs. Thirumoolar’s star falls on Ashwathy combined with Pournami during the month of Ayippasi, and your father had a wish for celebrating it. How much money are you planning to spend on it?”
But when Periyava explained what needs to be done, Balasubramanian understood how in a simple way it can be celebrated and also at the same time Thirumoolar’s songs can be popularized.
Periyava asked for a trust to be created with the help of Dunlop Krishnan and Kadharkadai Venkataraman. Then Periyava continued, “At Sathanur, find either 5 to 6 or 10 to 12 students and ask each of them to write about 300 songs of Thirumoolar. There should not be any discrimination based on caste or religion in the selection of the students. They will have to complete it before the month of Ayippasi. You and the others involved should go to Sathanur a day before and arrange for a discourse in your father’s style. The next day being Ashwini, arrange for deeparadhani at the Thirumoolar Sannidhi at the Iyyanar temple. Then everyone has to sing all the fifty sings beginning with “Aindhu Karathinai” and prostrate to Thirumoolar.”
The Periyava continued, “You all need to then walk towards Thiruvaduthurai Masilamaneeswarar temple continuing the chanting. There is a banyan tree in the outer side of the temple. Thirumoolar used to sit under that tree and sang one song each year to a total of three thousand songs. All of those who is participating, should sit under the tree and before the evening should complete Thirumanthiram. The only one condition is that you all should read from the writings that the students had completed.”
Sri Periyava completed His long and detailed explanation of the celebration that Balasubramanian needs to undertake. All the devotees present there had been listening to Periyava intently for the entire duration.
Periyava continued with a smile, “I am not asking you all to fast, you can stop at your convenience for having food or coffee. With the interest that is generated from the trust, you can also award all the students who had participated.”
All the devotees present there were surprised to hear the detailed yet a simple way that Periyava had informed Balasubramanian.
They felt that Periyava not only remembered that his father had special affinity to Thirumoolar, but also used this as an opportunity to establish a trust that will help in conducting regular prayers for Thirumoolar. Natarajan also explains that there is more divinity embedded into this experience.
When Periyava had explained this entire procedure, he mentioned in a simple way that it was the same Sathanur that your Periamma belongs to, that also gave Thirumoolar. The surprising thing is that, there were 2 to 3 Sathanur. Periyava exactly know that his Periamma’s (mother’s elder sister) husband’s family was from Kolathangarai Sathanur. Through this simple incident, He had demonstrated that He knew all the details about His devotee’s family.
Also since Balasubramanian’s maternal grandfather was a sincere devotee of Periyava, who had been associated with Srimatam from his younger age, though it is obvious that Periyava knew where he had given her daughter (Periamma) for marriage, Periyava also mentioned in such a way to stretch that Periamma is not in this mortal world. Periyava knew all this information and conveyed all of them at the same time through this experience.
Is it not true that, though Periyava met thousands of devotees daily, He not only remembers about them, but also about their relatives?
Also Natarajan wonders if Periyava remembers Sundaranathan as Thirumoolar’s childhood name from memory or because of His all-encompassing knowledge.
Also when Periyava explained all the small details like the Banyan tree, Thiruvaduthurai Masilamaneeswarar temple, the Iyyanar temple, and the details about those villages and the names and information about the local Gods, Natarajan feels that Periyava is the Saint who knows everything.
This celebration happened for 13 long years. It started with 100 participants and then went down to 6 to 7 of them and Periyava asked them to stop it.
A long time after this was stopped, during the year 1982, Natarajan had a wish to have Periyava’s darshan. Balasubramanian also felt the same and the brothers started to Satara. It was night when they reached, so they planned for Periyava’s Vishwaroopa darshan the next day morning. The door opened and aarthi was shown, but they were unable to see Periyava because the verandah was very small. As they were standing there with sadness, someone came from inside and said Periyava is calling anyone who can read Thirumoolar. Both the brothers were stunned. Surprised how Periyava could have seen them, they went inside for Periyava’s darshan.
It is true that, if we surrender to Periyava, the saint who knows everything, we will be blessed with happiness and peace.
Grace will continues to grow.
(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)
Categories: Devotee Experiences
Sri Periyavaa also says “…அந்த அரசமரத்துக்கு கீழே உட்கார்ந்து தான் திருமூலர் வருஷத்துக்கு ஒரு பாட்டு வீதம் மூவாயிரம் பாட்டும் பாடினதா சொல்றா…..”. He indirectly conveys that Thirumoolar lived for 3000 years [Three Thousand Years]! Amazing. Ways of the Almighty! I wonder how many of us would have noted that!