ரிஷிமூலம், நதிமூலம் என்கிற மாதிரி நாம் சாப்பிடுகிற அரிசியை, கடுகை, வெண்டைக்காயை எவன் எப்படிப் பயிர் பண்ணி, எவன் எப்படி மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்தானென்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க முடியுமா? முடியாதுதான். இதனால்தான் சாஸ்திரத்திலேயே வஸ்துவுக்கே உள்ள நேர்த் தோஷத்தைக் கவனிக்கச் சொல்லிவிட்டு அதில் ஸம்பந்தப்பட்டவர்களில் மற்றவர்களை ஓரளவு தள்ளிவிட்டுக் கடைசியில் அதோடு ஸம்பந்தப்படுகிற இரண்டு பேரை மட்டும் முக்யமாகக் கவனிக்கச் சொல்லியிருக்கிறது. ‘Raw -ஆக (கச்சாப் பொருளாக) அரிசி, மற்ற தான்யங்கள், காய்கள் முதலானவை எங்கேயிருந்து வேண்டுமானாலும் வந்துவிட்டுப் போகட்டும். நாம் காசு கொடுத்து அதை வாங்குகிறபோது, இப்படி அதற்காக நாம் ஒரு தியாகத்தைப் பண்ணி விடுவதால், அதில் படிந்திருக்கிற மானஸிகப் பரமாணுக்கள் நம்மைத் தொடாது. அல்லது நம் சொந்த வயலிலோ, நாம் இருக்கிற வீட்டுத் தோட்டத்திலோ அவை விளைந்து வருகிறபோது அதன் பொருட்டு நாமே செலவழிக்கிறோம், உழைக்கிறோம், நம் எண்ணத்தையும் கவனத்தையும் கொடுக்கிறோம் என்பதால் அவை raw-ஆக உள்ள போது நம்மைப் பாதிக்காது என்று வைத்துக் கொள்ளலாம். ஆனாலும், “பச்சைத் தானியத்தையும் கறிகாயையும் நாம் புஜிப்பதற்கு யோக்யதையாக வேக வைத்தோ, பொறித்தோ, அரைத்தோ சாப்பாடாக ஆக்கும் சமையல்காரன் யார், அப்புறம் அதை எடுத்து நமக்குப் பரிமாறுவது யார் என்று பார்த்துக்கொள். இந்த இரண்டு பேர் ஸாத்விகமாக இருந்தால்தான் அந்த ஆஹாரம் நம் சித்தத்துக்கு நல்லது செய்யும்” என்று சாஸ்திரம் சொல்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Just as we cannot trace the origin of Rishis and rivers, it is not possible to trace how food materials like rice, ladies finger, mustard, etc. were farmed or brought to the market. That is the reason our Sastras ask us to look at the direct dosham of the food prepared and disregard the other factors. It is important for us to pay attention to two people who are involved in this process. Let the raw materials like vegetables and grains come from anywhere. Since we pay and buy them, there is some sacrifice in it and it won’t affect us. Also, if we have cultivated these raw materials in our own farm or garden, we have put our money and effort into that. Here we have invested our positive thoughts and efforts; so the raw materials will not affect us. However, the person who cooks these raw materials to make it fit for eating and the person who serves us have to be Sathvik. Only when these two people are of Sathvik nature will that food help our body and mind. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Good to see everyday though difficult at my age.