Periyava Golden Quotes-755


தெரியாமல்தான் அநேகத் தப்புப் பண்ணுகிறோம்; வாஸ்தவம். ஆனால் தெரிவிக்கிறதற்குத்தான் சாஸ்திரங்கள் இருக்கின்றனவே, அவற்றை ஏன் பார்க்கக் கூடாது? நமக்கு அநேக விஷயங்கள் ஸ்வயமாகத் தெரியாதபடி ஈஸ்வரன் நம் கண்ணை மூடித்தான் வைத்திருக்கிறானென்றாலும், அவனே கண்ணைத் திறக்கப் பண்ணுவதற்காக அநேக மஹான்கள் மூலம் சாஸ்திரங்களையும் கொடுத்திருக்கிறான் அல்லவா? வேறே எத்தனையோ கார்யங்களைச் செய்யும் நாம், கண்ட கண்ட விஷயங்களைப் படிக்கும் நாம், நாம் செய்ய வேண்டியது என்ன, செய்ய வேண்டாதது என்ன என்று ஈஸ்வராக்ஞையாகப் பெரியவர்கள் கொடுத்திருக்கிற தர்ம சாஸ்திரங்களைப் பார்க்க மாட்டேன் என்று இருந்து கொண்டே, “தர்மாதர்மம் தெரியாமல் தப்புப் பண்ணினதற்காக பகவான் தண்டிப்பானா?” என்று கேட்டால் அது நியாயமேயில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

We are making a lot of mistakes because of lack of knowledge. That is true. But to know the right thing there are the Sastras; why are we not referring to them? Though Eswara has closed our eyes so that we do not get to know many things, he has specifically given us Sastras through various Mahan’s to open our eyes, isn’t it? We spend our time on various other unwanted activities and read unwanted things; why are we not looking at the Dharma Sastras – given by our elders through Eswara’s order – to know what is right and wrong? It is not at all fair on our part to say “I committed this mistake unaware of Dharma. Will Bhagawan punish me for this?” – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal 



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: