Jaya Jaya Sankara Hara Hara Sankara – The first chapter of this exciting series by Shri B. Narayanan Mama.
Super chapter with a super drawing by Mama to kick start this series…Rama Rama
ஸ்ரீ ரா.கணபதி அண்ணா கண்ட மஹாபெரியவா.
(அவர் எழுத்திலேயே)
ரா.கணபதிக்(அண்ணாவிற்)கு அறிமுகம் தேவையில்லை. எங்கெங்கெல்லாம் தெய்வத்தின் குரல் வாசிக்கப்படுகிறதோ, எங்கெங்கெல்லாம் அந்த ஏழு புத்தகங்கள் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் மஹா பெரியவாளின் கூடவே அவரும் இருக்கிறார். மஹா பெரியவாளுடன் மிக நெருங்கிப் பழகிய பலரில் இவர் முக்கியமானவர். மஹான் அவரிடம், பிறரிடம் வெளியிடாத பலப்பல விஷயங்களைப் பற்றிக் கூறியிருக்கிறார்; முக்கியமாக தன் பால வயதில் நடந்தவை, காஞ்சி பீடாதிபதி ஆகும் முன்னும் பின்னும் நடந்த சம்பவங்கள், பின்னர் தெய்வத்தின் குரல் ஏழு புத்தகங்கள் தொகுத்து வெளியிடும் வரையிலுமான பல சுவாரஸ்யமான, நமக்கெல்லாம் வழி காட்டக்கூடியவையுமான பல சம்பவங்கள் என ஒரு பெரும் அமுத பொக்கிஷமே உள்ளது. அவை எல்லாவற்றையுமே புத்தகங்களாக ‘திவ்ய வித்யா ட்ரஸ்ட்’ மூலமாக வெளியிட்டிருக்கிறார். அந்த பொக்கிஷத்திலிருந்து சில பகுதிகளை பக்தர்களுடன் பகிர்ந்து கொள்வதே என் நோக்கம்.
இத்தொகுப்பில் வரும் நிகழ்ச்சிகள் அவருடைய கல்யாண குணங்களையும், அவர் நடத்திக் காட்டிய தெய்வ வாழ்க்கை நெறிகளையும் வெளிப்படுத்துவனையாகவுமே இருக்கும். எப்படிப்பட்ட ஒரு ப்ரத்யக்ஷ தெய்வம் நம்மிடையே உலவி வந்தது, அந்த தெய்வம் எப்படியெல்லாம் நம் அனைவரையும் நல்வழியில் திருப்பியது, என்பதை விளக்கும் சம்பவங்கள், அவருடைய எழுத்திலேயே இதோ விரிகின்றன.
நன்றி: காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம். ஆசிரியர்:—ரா.கணபதி. வெளியிட்டோர்:– திவ்ய வித்யா ட்ரஸ்ட்.
ஒன்றாம் படி.
“…..இனி, பாலப் பருவத்திலேயே நமது ஸ்ரீ சரணாளின் சரண மகிமை வெளியான ஒரு நிகழ்ச்சியை ஸவிஸ்தாரமான பீடிகையோடு காண்போம்.
1906 –ஆம் வருஷம்.
அன்றைய காமகோடி பீடாதிபதிகளாக இருந்த ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் திண்டிவனம் தாலுக்காவில் உள்ள பெருமுக்கல் கிராமத்தில் சாதுர்மாஸ்யம் அனுஷ்டித்து வந்தார்.
ஸ்வாமிகளைத் தரிசிக்க திண்டிவனவாசியான ஸுப்ரமண்ய சாஸ்த்ரிகள் குடும்பத்தோடு பெருமூக்கலுக்குச் சென்றிருந்தார். அக்குடும்பத்தின் இரண்டாம் மகனே பிற்காலத்தில் நமது மஹாபெரியவாளாக மலர்ந்த அக்கால ஸ்வாமிநாதன்!
அப்பொழுது ஸ்வாமிகள் பூஜையில் அமர்ந்திருந்தார். சந்த்ரமௌளீஸ்வரரையும் மஹாதிரிபுர சுந்தரியையும் கண்டு திளைத்துக் கொண்டிருந்த அவரது நயனங்கள் பக்தர்புறம் சுற்றி வருகையில் கோமளக் கொழுந்தாக அமர்ந்திருந்த பன்னீராண்டுச் சிறுவன் சுவாமிநாதன் மீது பதிந்தன.
வானையும் மண்ணையும் மாந்தரையும் மரங்களையும் கண்டவாறு பறந்து கொண்டே வரும் பட்சியின் பார்வையில் சட்டென்று அதனுடைய கூடு தட்டுப்பட்டால்? பட்சி அந்தக் கூட்டுக்குள் நுழையுமுன்பே அப்பார்வை சரேலென்று நுழைந்துவிடுமல்லவா? அங்கேயுள்ள குஞ்சிடம் அன்பைத் தூவுமல்லவா? இத்தனை காலமாக எத்தனையெத்தனையோ மக்களைக் கண்டிருந்த சுவாமிகளின் திருஷ்டி தனது கூட்டுக்குள் புகும் நிம்மதியான பார்வையாக, குஞ்சைப் பார்க்கும் கனிந்த பார்வையாக ஸ்வாமிநாதன் மீது பதிந்தது.
இரு வேறு மார்க்கங்களில் சஞ்சரித்துக் கொண்டிருந்ததாகத் தோன்றிய கிரஹங்கள் ஒன்றையொன்று ஆகர்ஷித்துக் கொள்ளும் அயனத்துக்குள் புகுந்து விட்டன.
நடக்கவிருக்கும் பெரிய நிகழ்ச்சிகளுக்கு இது அங்குரார்ப்பணம் என்பதை யாரும் அறியாதபடி அவ்வளவு எளிமையாக நடந்து விட்டது திருஷ்டி தீக்ஷை !
பூஜை முடிந்தபின் ஸ்வாமிகள் சுப்ரமண்ய சாஸ்த்ரிகளிடம் குடும்ப யோக க்ஷேமங்களை விசாரித்தார். முக்கியமாக ஸ்வாமிநாதனைப் பற்றி விசாரித்தார்.
ஸ்வாமிநாதனிடமே பேசினார்!
ஜகத்குரு ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாகிய சங்கராசார்ய ஸ்வாமிகள் ஒரு பன்னிரண்டு வயதுப் பாலகனுடன் அக்கறையுடன் பேசினார். அன்று மட்டுமல்ல, பெருமுக்கலில் சுப்ரமண்ய சாஸ்த்ரிகள் தங்கியிருந்த இரண்டு நாட்களும் அடிக்கடி ஸ்வாமிநாதனைக் கூப்பிட்டனுப்பிப் பேசிக் கொண்டிருந்தார். பீடாதீஸ்வரரின் சந்திப்பில் பாலன் என்ன விதமான அனுபவங்களை அடைந்தான் என்பது நமக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.
இன்னும் வரும்…………….
________________________________________________________________________
Maha Periyava As Shri Ra.Ganapathy Saw Him
(IN HIS OWN WORDS)
Shri Ra. Ganapathy Anna does not need any introduction. Wherever the seven volumes of ‘DHEIVATHIN KURAL” are kept, and wherever they are read, Shri Ra.Ganapathy lives there along with MahaPeriava. He was one among those who have been fortunate to have moved with MahaPeriava very closely. HE has narrated to him many incidents that have not been told to anybody else. Most important among them are about His childhood days, what happened before and after HE became the Peetathiathi of Sri Kachi Matam, and all through the years till HIS Sidhdhi. It is a big treasure house of pure nectar. He has published them under various titles through Divya Vidhya Trust. Through this series, I wish to share some of them with the devotees.
The incidents which find a place here will consist of those which reveal HIS exemplary qualities (traits), the way HE lived HIS life as per SAstrAs, through which HE told us to follow at least some of them. They will make us realize that HE was the Almighty Himself who lived with us in a human body and showed us and guided us to live life as mentioned in SAstrAs.
Let us look at an incident, with elaborate prelude, which reveals the greatness of our Sree SaranAl during HIS childhood itself.
It is the year 1906.
Sri ChandrasEkarEndra Saraswathi SwAmikal, who was then the peetAthipathi of KamakOti, was observing ‘ChAturmAsya vratam (fasting)’ at a village called Perumookkal in the Thindivanam Taluk.
Subramanya SAstrikal who lived in Thindivanam, went to Perumookkal along with his family to have Dardsan of SwAmikal. The second son in that family was Swaminathan who was to become our ‘MahaPeriava’ later.
Swamikal was performing Pooja then. His eyes, which were immersed in Lord Chandramouleeswarar and Maha Thripura Sundari, wandered towards the devotees and finally got transfixed on the twelve year old Swaminathan, who was sitting like a tender shoot.
When a bird is flying above, gazing at the sky, the earth, the trees and the humans, its sight, all of a sudden, falls on its own nest and then …..it happens! Before the bird enters the nest, its look enters it first and showers its love on its offsprings !
Likewise, Swamikal’s eyes, which have seen lots and lots of persons during so many years, got riveted on to Swaminathan, with the love of the bird that looks at its offspring!
Two planets which were seen travelling in two different directions entered a course in which each would attract the other.
The Initiation with the look (திருஷ்டி தீக்ஷை) happened without much ado and without anybody being aware of it, as an inauguration to great things that were to take place in the future!
After the Pooja was completed, Swamikal called Subramanya Sastrikal and inquired about his family’s health and welfare. He particularly asked about Swaminathan.
He talked to Swaminathan himself.
Sankaracharya Swamikal, who is the Jagat Guru Sri Kanchi KamakOti PeetAthipathi, talked to the twelve year old child Swaminathan, taking a lot of interest. Not only on that day but on all of the two days Subramanya Sastrikal stayed in Perumookkal, calling Swaminathan very frequently to His quarters. We do not know for sure what sort of experiences child Swaminathan had during those meetings with the Peetathipathi.
TO BE CONTINUED………
Categories: Deivathin Kural, Devotee Experiences
மேலும் கட்டுரையின் தொடர்ச்சி கிடைக்க விலை.
Today (24/02/18) ….where is the next part?
It is a weekly feature, every Thursday. Rama Rama