நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் சாப்பாட்டோடு ஸம்பந்தப்பட்டவர்களின் குண-தோஷங்கள் சாப்பிடுகிறவனை பாதிக்கின்றன என்பதே. நாம் தெரியாத்தனத்தால்தான் தோஷமுள்ளவர்களின் ஸம்பந்தம் கொண்டதைச் சாப்பிடுகிறவர்களாயிருப்போம். உங்களை ஒருத்தர் சாப்பிடக் கூப்பிடுகிறார்; அல்லது க்ளப் [ஹோட்டல்] , கான்டீன் எதிலாவது எவனோ சமைத்து, எவனோ ‘ஸர்வ்’ பண்ணுவதை நீங்கள் சாப்பிடுகிறீர்களென்றால், இவர்களுடைய குணமென்ன, தோஷமென்ன என்று உங்களுக்குத் தெரிந்திருக்க முடியாதுதான். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் நாம் சாப்பிடுவதால், பகவான் மன்னித்து நல்ல புத்தியைத் தந்து விடுவான் என்று நினைத்து விடக் கூடாது! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
We should be careful with people associated with food since their thoughts and character affects the person who consumes the food. We may not be aware of their deficiencies and may consume food items prepared by these individuals. Say someone invites you to eat with them, or may be you eat food in a hotel or club where the food is cooked by someone and served by someone else. We may not know the characteristics of the people preparing the food and serving it to us. Just because we are ignorant, we should not think Bhagawan will forgive us and show the right way. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply