Jaya Jaya Sankara Hara Hara Sankara – How can a complex philosophy explained in lay men’s language that too with a tinge of humour? Sri Periyava shows how in this lovely incident.
Many Jaya Jaya Sankara to Shri. Harish Krishnan for the translation and Smt. Kavitha for the share. Rama Rama
அத்வைதமும் விளையாட்டும்
ஒரு இளம் ஸன்யாஸி காஞ்சிபுரம் வந்து பெரியவாளை தரிசனம் பண்ணினார்.
“என்ன பண்ணிண்டிருக்கே?”
“அதிகநாள் எந்த இடத்லையும் தங்கறதில்லே பெரியவா …..இப்படி ஊர் ஊராப் போயிண்டிருக்கேன். பிக்ஷையா எது கிடைக்கறதோ சாப்பிட்டு, முடிஞ்ச அளவு நிறைய ஜபம் பண்றேன். சில இடங்கள்ள எதாவுது பேச சொன்னா எனக்கு தெரிஞ்ச பகவத் விஷயங்களை சொல்லுவேன். அவ்ளோதான்”
நல்லது. அத்வைத ப்ரசாரம் பண்ணேன்!
ஆனா எனக்கு அத்வைதம் பத்தி என்ன தெரியும் பெரியவா?” குரலில் தாபம்.
“அது ஒண்ணும் பெரிய விஷயமில்லே! நான் ஒரு கதை சொல்றேன். அதை நீ போற கிராமத்துலல்லாம் சொல்லு!”-
“பெரியவா சொல்றபடி செய்யறேன்..”
“ஒரு ஊர்ல ராமஸாமி ராமஸாமின்னு ஒருத்தன் வேலை வெட்டி எதுவுமில்லே. ஆளைப் பாத்தா நன்னா ஆஜானுபாஹுவா ஸாண்டோ மாதிரி இருப்பானா அதுனால ஆத்துல எல்லாரும் அவனை “ஏண்டா, இப்டி தீவட்டி தடியனாட்டம் ஒக்காந்து நன்னா சாப்பிடறியே? எதாவது வேலை பாத்து பொழைக்க வேணாமான்னு திட்ட ஆரம்பிச்சா. அவனுக்கு ரொம்ப ரோஷம் வந்து எங்கயாவுது வேலை கிடைக்குமான்னு தேடிண்டு இருந்தான்.
அந்த ஊர்ல ஒரு ஸர்க்கஸ் கம்பெனி வந்து டேரா போட்டுது. இவன் அந்த ஸர்க்கஸ் மானேஜர்கிட்ட போனான்.
“ஸார் ஸார் எனக்கு ஒரு வேலை போட்டுக் குடுங்கோ” ன்னு கெஞ்சினான்.
அந்த நேரம் ஸர்க்கஸ்ல ஒரு ஆதிவாஸி ஒர்த்தன் வித்தை காமிச்சுண்டு இருந்தான். என்ன வித்தைன்னா, அவன் ஆங்கிலம் பேசுவான்! ஆதிவாஸி ஆங்கிலம் பேசறான்னுட்டு அதுக்குன்னே கூட்டம் வரும். அவன் கொஞ்சநாள் முன்னால செத்துப் போய்ட்டான். அதுனால ஸர்க்கஸ் ரொம்ப டல்லா இருந்துது. ராமஸாமி அந்த ஆதிவாஸி மாதிரி ஆஜானுபாஹுவா, நல்ல தாட்டியா இருந்தானா அதுனால, அந்த ஆதிவாஸியாட்டம் நடிக்கற வேலை கிடைத்தது. பழையபடி கூட்டம் வர ஆரம்பிச்சுது.
சர்க்கஸ் மானேஜர் ஒருநாள் ராமஸாமிகிட்டே “ஏம்பா…இப்படி எத்தனை நாள் ஆதிவாஸியா ஆங்கிலம் மட்டும் பேசி நடிப்பே? ஸர்க்கஸ்ல மீதி வித்தை எல்லாம் இருக்கே! கயிறு மேல பாலன்ஸ் பண்ணி நடக்கறது மாதிரி இதெல்லாமும் கத்துக்கோன்னார். கத்துண்டான். அன்னிக்கி ஆதிவாஸி மாதிரி ட்ரெஸ் பண்ணிண்டு மொத மொத, ஜனங்கள் பாக்கறச்சே, கயறு மேல பெரிய குச்சியை பாலன்ஸ் பண்ணிண்டு இவன் நடந்துண்டு இருக்கான்…….லேஸா கீழ பாத்தா ஒரு புலி !
“கரணம் தப்பினா மரணம்”ன்னு யாரோ மைக்குல பேசி இவனை உத்ஸாகப் படுத்திண்டு இருக்கா! கரணம் தப்பிடுமோ? மரணந்தானோ? புலியைப் பாத்தானோ இல்லியோ, இவனோட கான்சன்ட்ரேஷன் போயிடுத்து. காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுது. “தீவட்டி தடியனாவே இருந்திருக்கலாமோ! கொஞ்சம் பாலன்ஸ் போச்சுன்னா புலியோட வாய்க்குள்ளன்னா போவோம்!” ன்னு பயம் வந்துதோ இல்லியோ, அடுத்த க்ஷணம் “தொபுகடீர்”ன்னு பாலன்ஸ் தவறி நேரா புலி மேலேயே போய் விழுந்தான்! அவ்ளோவ் கிட்ட புலியை பாத்ததும் ஸப்தநாடியும் ஒடுங்கிப் போய்டுத்து!
அந்தப் புலி மெதுவா இவன் கிட்ட வந்து “டேய், ராமஸாமி! பயப்படாதேடா, நான் தான் க்ருஷ்ணஸாமி! ஒனக்கு ஆதிவாஸி வேஷம் குடுத்தா மாதிரி, எனக்கு புலி வேஷம் குடுத்திருக்கா……” ன்னு புலிஸாமி பேசினதும், ராமஸாமியோட பயம் போய்டுத்து!
இதான் அத்வைதம்! எல்லாத்துக்குள்ளயும் அந்தர்யாமியா இருக்கற ஆத்மஸ்வரூபம் ஒண்ணுதான்! வெளில வேற வேற ரூபம் தாங்கிண்டு இருக்கு. அவ்ளோவ்தான்!
‘ஸ ஏக: ன்னு தெரிஞ்சுண்டுட்டா…ஶாந்திதா ன்! இதான் அத்வைதம். இந்த கதையை சொல்லு போறும்……” என்று கூறி ஆஸிர்வதித்தார்.
விளையாட்டாக,கதை மாதிரி சொல்லி ஒரு பெரிய அத்வைத சித்தாந்தம் சொல்ல மஹா பெரியவாளாலே சுலபமா முடியும்
_________________________________________________________________________________
Adwaitha & Humour
One young Sannyasi came to Kanchipuram to meet Shri Maha Periyava.
“What are you doing?” asked Periyava.
“I do not stay one place. I keep moving to different towns. I eat whatever I get as Biksha and do japam (medidation). At some places if people request me to talk, I speak about Bhagawan and his leelas.” Said the Sannyasi.
“Very good. Preach Adwaitha” said Periyava.
The Sannyasi said with a sad note “But I do not know anything about Adwaitha Periyava”.
Periyava with his kind heart said “This is not something to worry. I will tell you a story. You need to tell the story at all the towns you visit.”
“I will do as Periyava says” said the Sannyasi.
Once there lived a person named Ramaswamy. He did not have any job. He was a huge man and looked like a body builder. Everyone at his house started yelling at him to find a job and not spend his days at the house only eating. One day Ramaswamy started to look for job. There was a circus in the town and he went to talk to its manager.
He requested the manager at the circus to give him a job. At that time, an Adivasi who worked in the circus had died. He could speak English and attracted a large number of people to the circus. After his death, the visitors to the circus had gone down considerably. The manager gave Ramaswamy the job to act like the Adivasi and speak in English. More people started to come back to the circus now.
After few weeks, the manager asked Ramaswamy to learn new circus tricks like balancing on rope. He learned the rope trick. One day, dressed as Adivasi, for the first time he was supposed to balance on the rope. He started walking on the rope with a long stick for balancing. After walking for some time, he slightly looked down.
Somebody at the mic started to say “One step miss is a step closer to death”. The moment he saw the tiger, he lost his concentration. His legs began to shake and he started to think if he should have really joined the circus. At that instant, fear crept into his mind and he lost his balance and fell down. He was shocked to see the tiger close to him ready to attack. The tiger came slowly near him and said in a low voice “Ramaswamy, don’t panic. I am Krishnaswamy. Just like how you act as Adivasi, I act as the tiger.” After hearing this Ramaswamy’s fear melted away.
This is Adwaitha. The Athma inside everyone is the same. It takes different forms outside. Periyava blessed the Sannyasi and said “If everyone understands this, it will be peace everywhere. This is Adwaitha. Go and tell this story.”
Only Shri Mahaperiyava can explain a complex philosophy like Adwaitha playfully with a very simple story.
Categories: Devotee Experiences
Only Maha Periyava can explain in so simple a language.
Trivialising advaitha and also Sri Mahaperiyava
Jaya Jaya sankara Hara Hara Sanakara. Janakiraman. Nagapattinam
Simply superb. Through this profound message, Maha Periyava has advised us to remove fear and live boldly with faith in God. All living beings have same emotions, they undergo the same experience.