Sri Periyava Mahimai Newsletter Dec 23 2011

 

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Anugraham to a devotee who does not know much about Sri Periyava and the importance of Bhakthi are the highlights of this newsletter from Sri Pradosha Mama Gruham. This is the last newsletter of 2011 as well.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama


(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (23-12-2011)

தைர்யமா போயிட்டுவா

எல்லாமுமாகி, எங்கும் நிறைந்து எல்லார்க்கும் அருள்புரியும் சாட்சாத் சர்வேஸ்வரரே, சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் ஜகத்குருவாய்த் தோன்றி நமக்கெல்லாம் கருணை மழையாய் பொழிந்தருளியுள்ளார்.

தன்னை நாடிவரும் பக்தர் யாராய் இருப்பினும் அவர்களின் மனபாரம் நீங்கும் வகையில் அருள்புரிவது ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் காருண்ய மூர்த்தியின் பெருமையாகும்.

இதுபோல் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை முன்பின் அறியாதவரான திரு. ராமசாமி என்பவர் தனக்கேற்பட்ட ஆபூர்வ தரிசன அனுபவத்தைக் கூறிகிறார்.

திரு. ராமசாமி அரசாங்க கைத்தறித் துறையில் மேலதிகாரியாகப் பணிபுரிந்தவர். மிக நேர்மையான நிர்வாகத்தினால் நற்பெயர் எடுத்திருந்தும் அவரது நேர்மை வழி சிலரது பொறாமையைக் கிளப்பியிருந்தது. மறைமுகமான எதிரிகளால் இவரது வேலூர் வாழ்க்கைக்கு சலனம் ஏற்பட்டது.

வேலூரில் மேனேஜிங் டைரக்டராக இவர் பணிபுரிந்தபோது மிக அமைதியான வாழ்க்கை. சக்கரம் சுழன்றது. இவர் பெண் அங்கே ஒரு நல்ல கல்லூரியில் பி.காம். படித்துக்கொண்டிருந்தாள். தன் பெண்ணை விட்டு இதுநாள்வரை இவரும் மனைவியும் பிரிந்ததில்லை. மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறாக அந்த அரசாங்க ஆணை வந்திருந்தது.

இவர் போன்ற அரசாங்க மேலதிகாரிகளுக்கு பணி இடம் மாற்றம் என்பது இயல்பானது தான். இருந்தாலும் ராமசாமிக்கோ கரூருக்கு வந்திருந்த இந்த இடமாற்றம் வேண்டுமென்றே இவரை சிக்கலில் மாட்டிவிட வேண்டுமென்பதற்கே மறைமுக எதிரிகளால் உண்டாக்கப்பட்டதாகத்தான் நினைக்கத் தோன்றியது.

கரூர் கைத்தறித் துறை மிக மோசமான நலிவடைந்த நிலையில் இருந்தது. அங்கே தொழிலாளர்கள் பிரச்சனை ஓங்கி இருந்தது. உற்பத்தியும் பாதித்து வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுப்பதே முடியாதென்பது போல நிதிநிலமை அடிமட்டத்திலிருந்தது.

மேலும் வேலூரில் இவருக்கு குவார்டர்ஸ் இருந்தது. கரூரில் அந்த வசதியுமில்லை. அப்போது கரூரில் பெண்ணைச் சேர்க்க நல்ல கல்லூரியுமில்லை. இப்படி இவருக்கு வந்திருந்த பணி மாற்ற ஆணை எல்லாவிதத்திலும் ராமசாமிக்கு பாதகமாகவும், அங்கு சென்று பணி ஏற்பது அவருக்குக் கெட்ட பெயரினை சுலபமாக பெற்றுத் தரும் என்ற பயத்தையும் உண்டாக்குவதாக அமைந்திருந்தது.

இந்த பிரச்சனையிலிருந்து எப்படி விடுபடலாமென்று அவர் கவலையுற்றார்.

அப்போது இவர் துறையில் இவருக்கும் மேலே டெபுடி டைரக்டராக இருந்த திரு. ராமசந்திரன் என்பவர் இவருக்கு ஒரு உபாயம் காட்டினார்.

நீங்க உடனே காஞ்சிபுரம் போய் ஸ்ரீ பெரியவாளைத் தரிசனம் செஞ்சுட்டு வாங்க, அவர் நடமாடும் தெய்வம். அவர் சன்னதியில் உங்கள் குறைகளை சொல்லிட்டு வாங்க…….” என்று வழி சொன்னார்.

ஆனால் ராமசாமி இதுநாள்வரை ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்து அறியாதவர். திரு. ராமசந்திரன் சொல்லியபடி ஸ்ரீ பெரியவாளின் தெய்வத்தின் குரலைப் படித்திருக்கிறார். இத்தனை எளிமையாக ஆன்மீக விஷயங்களை மனதில் படும்படிக் கூறமுடியுமா என்றெல்லாம் வியந்திருக்கிறார். ஆனால் ஸ்ரீ பெரியவாளைச் சென்று தரிசிக்கும் பாக்யம் அமையவில்லை.

இப்போது அந்த தெய்வ தர்சனத்திற்கு ஒரு வாய்ப்புண்டானதில் மகிழ்ந்து தன் மனபாரம் குறையாதா என்ற ஆதங்கத்தோடு தன் மனனவியுடன் இவர் காஞ்சிபுரம் புறப்பட்டார்.

அங்கே ஸ்ரீ மடத்திற்குள் சென்ற தம்பதிகள் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க பெரும் பக்தர் கூட்டம் இருந்ததைப் பார்த்ததும் தங்கள் குறையைக் கூற சந்தர்ப்பம் கிடைக்காது போலும் என்று மனம் தளர்வுற்றனர். காத்திருந்த போது எல்லா பக்தர்களும் தரிசித்து திரும்பிக் கொண்டிருக்க, ஸ்ரீ பெரியவாளும் எழுந்து தன் உறைவிடம் போவதுபோல நடக்கலானார்.

ஸ்ரீ மடத்தின் நடைமுறைகளைத் தெரியாததாலும், ஸ்ரீ பெரியவாளை எப்படித் தரிசிப்பது, எந்த நேரம் தரிசனம் கொடுப்பாரென்று அறியாததாலும், இவர்கள் மதியம் இரண்டு மணிக்கு வந்திருந்ததால் ஸ்ரீ பெரியவா தரிசனம் முடிந்து எல்லோரும் திரும்பிக் கொண்டிருந்த நிலை. ஸ்ரீ பெரியவாளும் பிட்சை ஏற்க புறப்படலானார்..

இதை சற்றும் எதிர்பார்க்காத தம்பதிகளுக்கு மிகவும் வருத்தமாயிற்று. இவருடைய மனைவி இப்படி மெனக்கெட்டு வந்தும் ஸ்ரீ பெரியவா தரிசனம் கிடைக்கவில்லையே . அவரிடம் தங்கள் குறையை முறையிட முடியவில்லையே என்று மனம் நொந்து கொண்டாள்.

இப்படி ஏமாந்து போயிட்டோமேஎன்று இவர் மனனவி லேசாக இவரிடம் முணுமுணுத்தபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது.

அங்கே இருபதடி தூரத்தில் ஸ்ரீ பெரியவா அறையின் படிகளில் ஏறிக் கொண்டிருந்தவர், எல்லா பக்தர்களும் சென்று மிஞ்சியிருந்த இவர்கள் வருகைக்காகவே பிரத்யேகமாக இதைச் செய்தது போல இவர்கள் உணர முடிந்தது.

இவர்களுக்கு எதிர்திசையில் படிகளில் ஏறிக் கொண்டிருந்த மகான் சற்றும் எதிர்ப்பார்க்காத வகையில் அப்படியே முழுவதுமாகத் திரும்பி இவரை மட்டும் தன் கருணை பார்வையால் நனைத்து

தைர்யமா போயிட்டு வாஎன்று அருள்வாக்கு பொழிந்தார். தம்பதிகள் அந்த ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டனர். தாங்கள் எதையும் விண்ணப்பிக்காத போது பெரியவாளுக்கு பிரச்சனை எப்படித் தெரிந்திருக்கும்? மனபாரத்தை போக்கும் தைர்யமா போயிட்டு வா என்ற நல்வாக்கு எப்படி அருளமுடியும்? அவர்கள் மெய்சிலிர்த்தனர். ஏமாந்து போயிட்டோமோ என்று நினைத்த நேரத்தில் தங்களுக்கு எப்படிப்பட்ட அருள்வாக்கு நம்பிக்கை ஊட்டுவதாக மகானிடமிருந்து உதிர்த்து விட்டது?

மனம் லேசானது. இனி தெய்வத்தின் அருள் கட்டளையின்படி தைர்யமாக கரூருக்கு செல்லலாமென்று தெம்பு ஏற்படலாயிற்று.

அவர்கள் ஸ்ரீ பெரியவாளின் தரிசனம் முடிந்து வேலூர் திரும்பிய போது இன்னொரு ஆறுதலும் அவர்களுக்கு காத்திருந்தது.  இவர் கீழ், உத்யோகம் பார்க்கும் ஒரு அன்பர் இவர் பெண்ணை தன் இல்லத்திலேயே தங்கி கல்லூரிப் படிப்பை முடிக்கட்டும் என்று உதவிக்கரம் நீட்டினார். அந்த அன்பரின் பெயரும் சங்கரன் என்பதால் இவை எல்லாம் ஸ்ரீ பெரியவாளின் அருள்தான் என்பது ராமசுவாமிக்கு புலப்பட்டது.

கரூருக்கு தைர்யமாக போய் பதவி ஏற்றார்.

ஸ்ரீ பெரியவாளின் நல்வாக்கு நல்ல மாற்றங்களை ஒவ்வொன்றாய் நிகழ்த்தத் தொடங்கியது.

நூல் விலையிலும், காட்டன் விலையிலும் அரசாங்கம் ஏற்படுத்தின மாற்றத்தால் மெல்ல நிறுவனத்தின் நிதி நிலமை சீராகத் தொடங்கி இரண்டு வருடங்களில் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்தது, இப்போது லாபம் ஈட்டியது. இதனால் தொழிலாளர்களின் பிரச்சனை ஓய்ந்தது. சகஜ நிலைக்கு ஒரு நலிவடைந்த நிறுவனம் இரண்டு வருடத்திற்குள் முன்னேறியதில் உயர் அதிகாரிகளை அதிசயிக்க வைத்தது. ராமசுவாமிக்கு மனமகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்பட்ட்து. எல்லாம் ஸ்ரீ பெரியவாளின் அருள்வாக்கின் மகிமை என உணரலானார்.

மேலும் இன்னும் சிறப்பு சேர்க்கும் வகையில் இவர் பெங்களூர் சென்று ஒரு புதுயுக்தியை தன் கம்பெனியில் அறிமுகப்படுத்தி முன்னேற்றம் செய்ததை ஆல் இண்டியா ரேடியோ திருச்சியிலிருந்து ஒலிப்பரப்பாகும் மாநில செய்திகளில் இவர் பெயரை குறிப்பிட்டு ஒலிப்பரப்பானது.

இதனால் இவருக்கு பதவி உயர்வு கிடைத்தது.

ஈரோடுக்கு மாற்றப்பட்டபோதுஎங்களை விட்டுப் போறீங்களேஎன்று தொழிலாளர்கள் கண்கலங்கியபோது, ராமசாமி அவர்களுக்கு இவையெல்லாம் அன்று காஞ்சிமா தெய்வம் உதிர்த்த மாபெரும் அருள்வாக்கின் மகிமையால் மட்டுமே என்று உணர்ந்ததால் இவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் நிறைந்தது!

1986 இல் நடந்த இந்த சம்பவத்தை ராமசுவாமி இன்று திரு. பாபு மாமா எனும் பெரியவா பக்தரிடம் விவரிக்கும் போது உணர்ச்சிப் பெருக்கால் அவர் கண்கலங்குகிறது!


எந்த குரு சரித்திரம்? (நன்றிதரிசன அனுபவங்கள்)

ஸ்ரீ பெரியவா தன் தெய்வீக சக்திகளை நம்மிடம் மறைத்து தனது அவதார ரகசியங்களை பலருக்கும் புரியாமல் செய்திருந்தாலும் பிரம்ம ஸ்ரீ பிரதோஷம் மாமாவைப் போல சிலருக்கு அந்த சக்தியை உணர்ந்து அனுபவிக்கும் பாக்யத்தை அளித்துள்ளார் என்று ஸ்ரீ மடம் ஸ்ரீ பாலு அவர்கள் கூறுகிறார்.

பெல்காம் அருகில் ஹி ரே பாக்வாடி என்ற ஊரில் சிதம்பர குல்கர்னி எனும் பக்தர் உள்ளார். வருடத்தில் ஒரு முறையோ இரண்டு முறையோ காஞ்சிபுரம் வந்து குரு சரித்தரம் (தத்தாத்ரேய சரித்திரம்) ஏழு நாட்கள் பாராயணம் செய்து விட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அவர் ஒரு சமயம் குடும்பத்துடன் வந்துகுரு சரித்திரம்பாராயணம் செய்து வந்தார். அதே சமயம் வேறொரு பக்தரும் அங்கே வந்தார்.

அவர் ஸ்ரீ பெரியவாளிடம்குரு சரித்திர பாராயணம் நடந்து வருகிறதுஎன்றார்.

ஸ்ரீ பெரியவா இது வரை எத்தனை தடவை பாராயணம் நடந்திருக்கு?” என்று கேட்டார்.

இதுவரை எழுபத்திரண்டு முறை நடந்திருக்கு. எழுபத்து மூணாவது பாராயணம் நடக்கிறதுஎன்றார்.

ஸ்ரீ பெரியவா, பக்கத்தில் நின்ற சீடரிடம்இவர் எந்த குரு சரித்திரம் பாராயணம் பண்றதா சொல்றார் தெரியுமோ என்றார். ஒரு வேளை அது சிதம்பர குல்கர்னி என்ற பக்தர் பாராயணம் செய்யும் தத்தாத்ரேய சரித்திரமாக இருக்காதோ என்ற எண்ணத்தில் சீடர்தெரியாதுஎன்றார்.

உடனே ஸ்ரீ பெரியவாசாம்பமூர்த்தி சாஸ்திரிகள் எழுதிய பெரியவாள் சரித்திரத்தை தான் இவர் தினமும் பாராயணம் செய்கிறார். இதுவரை 72 தடவை பண்ணியிருக்கிறார். இவர் பிள்ளையார் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, ராம நவமி, ஜன்மாஷ்டமி எல்லா நாளிலும் என் படத்துக்கு தான் பூஜை செய்வார். இவருக்கு வேறு தெய்வமில்லைஎன்றார்.

யார் அந்த பக்தர் என்று ஸ்ரீ மடம் பாலு தெரிந்துக் கொள்ள ஆசை பட்டராம். ஆனால் ஸ்ரீ பெரியவா தெரிந்து கொள்ளவிடாமல் தன் மாயையால் வேறு ஏதோ காரியம் கொடுத்து ஸ்ரீ பாலுவை வேறெங்கோ அனுப்பிவிட்டாராம்.

ஸ்ரீ பாலு அவர்களுக்கு அப்போது பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவைப் போல் ஸ்ரீ பெரியவாளன்றி வேறு தெய்வமில்லை என்று கொண்டாடும் சில பக்தர்களும் உள்ளார்கள் என்று தெரிந்தாம்.

அது போன்ற சில பக்தர்களுக்குள் தான் அறிந்து கொண்ட தெய்வ ரகசியம் மற்றவர்கள் அறியாமல் விட்டு விடுகிறார்களே என்ற ஆதங்கத்தோடு ஸ்ரீ பெரியவா பக்தி எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டுமென்ற மாபெரும் மனம் கொண்டு சதாசர்வகாலமும் அதே சிந்தனையோடு செயல்பட்ட பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமா இந்த பிரத்யேகமான பக்திக்காகத்தான் 64ம் நாயன்மாரென ஸ்ரீ பெரியவாளின் திருவாக்கினாலேயே உயர்த்தப்பட்டவராய் திகழ்கின்றனர். எல்லாம் சர்வேஸ்வரரான ஸ்ரீ பெரியவாளின் அருள். இப்பேற்பட்ட அருளிடும் தெய்வத்தை பிரதோஷ சிவன் நாயன்மாரின் வழியில் நாமும் பற்றிக் கொண்டால் சகல ஐஸ்வர்யங்களும், சர்வ மங்களங்களும் தானே வந்தடையும்.

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

_______________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (23-12-2011)

“Go without any fear”

Shri Mahaperiyava, who is the avatar of Shri Adi Shankara, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

It is the greatness of Periyava that he addresses the problems of any devotee who comes to Him for help. This experience is narrated by Shri Ramaswami, who did not know about Periyava before.

Shri Ramaswami was working as a senior officer at the government handicraft department. Even though he had a very good name, due to his straightforward approach to work, he had lot of other employees jealous of him. Due to those co-workers, his peaceful life at Vellore was impacted.

He was the managing director at the Vellore division. Life was going on peacefully. His daughter was studying B. Com in a local college. Their daughter had always been with them all the time. But that order had come as a problem.

It is a known thing that any straight forward officer will be transferred often. But he was being posted to some place near Karur. This definitely looked like the work of his secret enemies in the office.

The handicraft department at Karur was in a really bad state. There was a major ongoing labor issue. The finances were not well and they were unable to pay the employees. The manufacturing was also impacted.

Karur location also did not have official stay quarters like Vellore. There was also no good colleges in the nearby areas for her daughter to continue her studies. The transfer to Karur did not look good and he felt that the transfer might end up getting a bad name in the department. He was thinking how he could escape from this problem. Shri Ramachandran, who was a deputy director, in his department, told him an idea. He said, “Please go immediately to Kanchipuram for Periyava’s darshan and inform Him about your problems”.

But Ramaswami never had a chance to have Periyava’s darshan before. On Ramachandran’s advice, he had read Periyava’s Deivathin Kural earlier and wondered how one could explain complex things in a simple and clear way. But he had not been lucky enough to have Periyava’s darshan until then. He was happy to go to Kanchipuram now and hoped for his problem to be solved. He started to Kanchipuram along with his wife.

There were lots of devotees waiting for Periyava’s darshan when they reached Kanchipuram. They were feeling sad that they will not be able to tell Periyava about their problem and seek His help. When they were in the line waiting, they saw that Periyava stood at started to go inside.

Since they were not familiar with the functioning of Srimatam and since it was their first time there, they had arrived at around 2 pm for darshan. The darshan time was almost over and Srimatam was getting ready for Bikshavandanam.

The couple were sad at not getting a chance to have Periyava’s darshan. Ramaswami’s wife was very upset and she said that they were really unlucky not to have Periyava’s darshan even after travelling and coming this far. As she was talking, the miracle happened. They realized that Periyava had got up and walked, so that all the other devotees will leave and only the couple will be left.

Periyava who was climbing the stairs opposite from where the couple were standing, turned and blessed them with His kind vision and said, “Go without any fear”. The couple were stunned. How did Periyava already know their problem? How can He correctly bless them and ask them to go without any fear? They were surprised to get the answer to their problem, just as they felt that their trip to Kanchipuram would go waste. They felt that their problems were solved and they felt light at heart. They were ready to move to Karur.

When they came back to Vellore from Kanchipuram, there was one more good news waiting for them. One of the employees working with Ramaswami had offered to let his daughter stay with them to complete her college. Since the employee’s name was Shri Sankaran, Ramaswami felt that even this was Periyava’s blessings.

He went to Karur and joined the office. Periyava’s words started to make lots of changes, one by one. Due to the changes in prices of cotton and threads by the government, the losses slowly went down and the region started to make profit. This also addressed the labor issue. The higher authorities were happy with Ramaswami after seeing these changes within two years. Ramaswami realized that all these were due to Periyava’s blessings.

Also Ramaswami successfully implemented a new technology in the Bangalore division and due to this, the All India Radio Trichy division in their regional news announced his name. Due to all these achievements, he was also promoted.

When his co-workers started to shed tears on hearing that he will be transferred to Erode, Ramaswami felt that all these were due to the three words uttered by Periyava on that day.

Even though this incident happened during 1986, when Shri Ramaswami was narrating this incident to another Periyava devotee Shri Babu Mama, his eyes were filled with tears.


Which Guru Charithram? (Thanks: Darisana Anubavangal)

Even though Periyava hides His real divine power and the secrets of His avatar, Srimatam Shri Balu explains that devotees like Pradosham Mama were lucky to experience those powers.

In a village called He Ray Bakwadi near Belgaum, there lived a devotee called Chidambara Kulkarni. Once or twice a year, he will visit Kanchipuram and read Guru Charithram (Dattatreya Charithram) for seven days.

Once he had come with his family and was reading Guru Charithram. At the same time, one more devotee also came there.

The other devotee told Periyava, “Guru Charithra Parayanam is going on”.

Periyava asked the devotee, “How many times has this been going on?”

The devotee replied that there were 72 instances previously and this was the 73rd parayanam.

Periyava asked the Shri Balu nearby, “Do you know which Guru Charithram parayanam is happening?”

Shri Balu thought that it will not be the Dattatreya Charithram read by Chidambara Kulkarni and said “I do not know”.

Periyava replied, “He is reading Periyava Charithram written by Sambamoorthy Shastrigal. He has done this 72 times. On Ganesh Chathurthi, Saraswathi Pooja, Rama Navami, Janmashtami and all other festivities, he will worship my picture. He does not have any other God.”

Shri Balu wanted to know who the devotee was, but Periyava gave some other tasks and diverted Shri Balu’s attention and thoughts away from that.

It was during that time, Shri Balu came to know about there were other devotees like Brahmashree Pradosham Mama, who prayed to Periyava as their only God.

Brahmashree Pradosham Mama was referred to as the 64th Nayanmar by Periyava, because Mama worked for and thought that all the other Periyava devotees also should feel the same divine secret that he himself felt. We should also follow Mama’s footsteps and be blessed with happiness and peace by Periyava.

Grace will continues to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading