Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final quote of the Aacharam section from Deivathin Kural Vol 3. Around 200 quotes from this section. Lots to reflect on and implement.
Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteers Smt. Vijayalakshmi who did the major part of the translation of the series and an anonymous volunteer for the translation. Periyava Thiruvadi Charanam! Rama Rama
தார் ரோடு மேடு பள்ளம், குறுகல் வழி முதலானதுகளில் சுற்றிச் சுற்றித்தான் போகும். ஒற்றையடிப் பாதையோ குறுக்கு வழி. அதனால், தார் ரோடில் சுற்றி வளைத்துக் கொண்டு காரில் போய் ஒரு இடத்தை அடைகிறதற்குள், ஒற்றையடிப் பாதையில் நடந்து போயே அந்த இடத்தை அடைந்து விடலாம். நவீன ஆராய்ச்சிக்காரர்கள் சொல்கிறதையே ஒப்புக் கொண்டாலும் குறைந்த பக்ஷம் ஐயாயிரம் வருஷமாக (3000 B.C. — Vedic Civilisation என்கிறார்கள்) , நூற்றுக்கணக்கான தலைமுறையினர் நடந்த வழியை நாம் விட்டு விட்டு, நாம் கெட்டது போதாதென்று பின் ஸந்ததியினருக்கும் கெடுதலை உண்டாக்கியிருக்கிறோம். ஜனங்கள் நடக்காமலேயிருந்தால் ஒற்றையடிப்பாதை மூடிப் போய் விடுமல்லவா? இந்தத் தலைமுறையினரான நாம் நம்முடைய சாஸ்திர மார்க்கம் வருங்காலத்தவருக்குத் தெரியாமலே மூடிப் போகிற மாதிரிப் பண்ணும் பெரிய தோஷம் நமக்கு ஏற்படாமல் கருணாமூர்த்தியான பகவான் தான் காப்பாற்ற வேண்டும். இப்போதாவது நாம் இந்த விஷயங்களை ஆலோசித்து, நம் முன்னோர்கள் சென்ற வழியிலே திரும்பி, ஆசார அநுஷ்டானங்களை நடத்தி மேன்மை அடைய ஈசன் நமக்கு நல்லறிவைக் கொடுப்பானாக!. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
A tar road will take a circuitous route over ups and downs or narrow stretches. A mud track provides a short cut. So by the time one reaches the destination driving the car on the tar road, it can be easily reached by walk using the mud track. Even if we were to accept what modern researchers say (that Vedic civilization dates back to 3000 BC), at least for five thousand years, hundreds of generations have treaded this path. We have made a huge mistake leaving this path and also caused untold damage to the future generations by doing this. If people discontinue its use, a mud path will vanish, isn’t it? Only the Karunamurthy–Bhagawan, should save this generation from committing the huge sin of getting the sastric way of life closed and making it unavailable to the future generations. At least now we should ponder over these things and move towards the path treaded by our elders. Let Eswara give us the good sense to practice the aacharams and anushtanams and elevate ourselves! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Hi,
I really appreciate your efforts to provide information what Maha periyava quotes. I have one small suggestion. Can you provide separate link for periyava golden quotes as it is easy to read.
Pl. click on the ‘Golden Quotes’ tag located on the right side of the page and you will get what you want. Rama Rama