Jaya Jaya Sankara Hara Hara Sankara – In this newsletter from Sri Pradosha Mama Gruham we see how Sri Periyava tests a devotee before showering his grace. It also goes to show to get his grace we have to follow his teachings like keeping Shika (kudumi) which will please him. As we are aware, there are a few other things that pleases HH. Doing our Nithyakarma Anushtanams sincerely, not eating outside food, Veda Rakshanam, Gho Matha Rakshanam, etc.
Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (25-11-2011)
“இப்பதான் நீ ஸ்ரீவைஷ்ணவனா ஆயிருக்கே”
மாசறு திங்கள் கங்கையை முடிமேல் அணியாமல், விடம் உண்ட கண்டத்தைக் காட்டாமல், பிறை சூடிய சிரத்தை மறைத்தும் நம்மிடையே நம்மில் ஒருவனாய் திரு அவதாரம் செய்ய ஸ்ரீ பரமேஸ்வரர் அச்சின்னங்களையெல்லாம் துறந்து தூய சந்யாசியாய் சுகப்பிரம்மரிஷி அவர்களின் மேன்மையோடு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாள் எனும் திருஉருவோடு நம்மையெல்லாம் மாயையால் மறைத்து உணரமுடியாமல் செய்து திருவிளையாடல் புரிந்துள்ளார்.
ஆயினும் தன் தபோ வலிமையால் தகுந்த ஜீவன்களைத் தேர்ந்தெடுத்து பக்குவப்படுத்தி மேற்கொண்டு அவர்களின் யோகநிலையை அடைய ஸ்ரீ பெரியவா அனுக்ரஹித்த சம்பவங்களையும் சில பெரியவா பக்தர்களின் வாழ்க்கையில் நாம் காணமுடிகிறது.
அப்படிப்பட்ட பக்தர்களாய் ஸ்ரீ. பி. சீனிவாசன்-ஆண்டாள் தம்பதியினர் தங்கள் அனுபவத்தை மகா பெரியவாளின் தரிசன அனுபவங்கள் எனும் புத்தகத்தில் விவரித்துள்ளனர்.
ஓருநாள் ஸ்ரீனிவாசன் ஒரு சொப்பனம் கண்டார். அதில் ஸ்ரீ மஹாபெரியவா தரிசனம் அருளினார். முன்னே ஸ்ரீனிவாசன் பெரியவாளைத் தரிசித்ததில்லை. அவர் வைஷ்ணவர். படத்தில் மட்டுமே பார்த்ததாக நினைவு.
இப்படி படத்தில் பட்டும்படாமல் பார்த்த மகான் தன் கனவில் தோன்ற அவரை நமஸ்கரித்தார். ஸ்ரீ பெரியவா அவரைக் கூர்ந்து நோக்குவதாகத் தெரிந்தது. இவருக்கோ ஒரு பரவச ஆனந்தம் எழுந்தது. அந்தநிலையில் விழித்துக் கொண்டார்.
கனவில் வந்த மகான் யார் என்ற விபரமெல்லாம் தெரியாது. ஒரு அத்வைத சந்நியாசி என்பதளவில் அவரைப் பற்றித் தெரியும்.
ஒரு வேளை ஆத்மவிசாரத்துக்காக வழிக்காட்டுகிறாறோ என்ற உணர்வோடு தன் ஆபீஸ் நண்பர் ஒருவரிடம் கேட்டு ஸ்ரீ பெரியவா எங்கு கேம்ப் என்றறிந்து ஸ்ரீ பெரியவாளை பண்ருட்டியில் தரிசிக்கச் சென்றனர் இவரும் இவர்தம் மனைவியுமாக.
அங்கே ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க பெரிய பக்தகூட்டம் காத்திருக்க இவர்கள் ஸ்ரீ பெரியவா திருமுன் செல்வதே சிரமாக இருந்தது. ஆனாலும் அப்படி சிரமப்பட்டு அவர் முன் நின்ற போது ஸ்ரீ பெரியவா ஏனோ இவர்களைப் பாராமல் கண்களை மூடியபடி இருந்துவிட்டு இவர்கள் அங்கிருந்து அகன்றதும் பின்னால் வந்து தரிசித்தவர்களிடம் பலமாகப் பேசியதுமாக இருந்தார். சரி ஒரு முறை தான் ஏதோ இப்படி யதேச்சையாக நடந்திருக்கலாம் என்று இந்த தம்பதியினர் இன்னொரு முறை வரிசையில் நின்று ஸ்ரீ பெரியவாளின் திருமுன் வந்து நின்றபோது ஸ்ரீ பெரியவா இமைகளை மூடி இவர்கள் இருவரும் அகலும் வரைக் காத்திருந்து, பின்னால் வந்தவர்களிடம் இயல்பாக உரையாடுபவராய் இருந்தார்.
மூன்றாவது முறையாகவும் ஆர்வமுடன் இவர்கள் வரிசையில் சென்று நின்றபோதும் ஏமாற்றம் தான். ஸ்ரீ பெரியவா கண்களை மூடி மௌனம் சாதித்தார். அன்று சிவராத்திரியாதலால் விடியவிடிய ஆறுகால பூஜைகள் நடைபெற்றது. அதன் பிறகு காலையில் ஊருக்குத் திரும்பும் போது, அலுவலக நண்பர் ஸ்ரீ பெரியவா அப்படி செய்யமாட்டாரே! ஒரு பக்தரையும் விடாமல் விசாரித்துப் பேசி பிரசாதம் கொடுப்பாரே! என்று அவரும் புரியாமல் கேட்டார்.
இவர்கள் நெல்லிக்குப்பத்தில் வசித்தபோது இவர்கள் வீட்டிற்கு ஒரு சுமங்கலி மாமி காமாட்சி அம்மனைக் குத்துவிளக்கில் ஆவாஹனம் செய்து பூஜை முடிந்தவுடன் அருள் வாக்கு சொல்லிக் கொண்டிருந்தாள். ஸ்ரீனிவாசனுக்கு இதில் நம்பிக்கை இல்லாதிருந்தும் அந்த மாமி வலிய வந்து இவர்கள் வீட்டிலும் குத்துவிளக்கில் காமாட்சியை ஆவாஹனம் செய்வித்து தினமும் பூஜை செய்யும்படி சொல்லிவிட்டு அதன்பின், “நீ ஆத்மார்த்தமாக குருவைத் தேடிவருகிறாய், அது ஒரு ஆற்றங்கரையிலோ, குளத்தங்கரையிலோ, கோவிலிலோ ஒரு மகானைத் தரிசிக்க வகை செய்யும்! அவரால் உனக்கு மந்திரோபதேசம் ஆகும்” என்று அருள் வாக்களித்தாள்.
அந்த காமாட்சி அருள்வாக்குப்படி ஸ்ரீ பெரியவாளின் தரிசனம், சம்பாஷனை யாவும் விழுப்புரத்தில் ஸ்ரீ பெரியவா அவதரித்த வீடு உள்ள கிழக்கு அனுமார் கோயில் தெருவில் நடந்த சங்கர ஜயந்தி வைபவத்தின் போது கிட்டியது.
அன்று காலை ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க ஏகப்பட்ட பக்தர்கள் கூட்டம். இவர் மனைவி ஸ்ரீ பெரியவாளுக்கு ‘முத்து ஆரத்தி’ காட்டவேண்டுமென்று ஆசையுடன் வந்திருந்தாள். மிக சிரத்தையாக பித்தளத் தட்டில் குங்குமம் தடவி இவள் முத்து ஆரத்திக் காட்ட கொண்டு வந்த போது இந்த ஜனக் கூட்டத்தில் ஆரத்தி எங்கே எடுக்க முடியப் போகிறது என்று ஸ்ரீனிவாசன் கேட்டார்.
ஆனாலும் கூட்டத்தை விலக்கி இவர்களை முன்னே விட, தோடகாஷ்டகம் சொல்லி அங்கிருந்தோர் நமஸ்கரித்து எழுந்தவுடன் ஸ்ரீ பெரியவாள் மேடையில் காட்சித் தர இந்த அம்மாளுக்கு முத்து ஆரத்தி எடுக்கும் பாக்யம் கிட்டியது.
அதுபோலவே அன்று மாலை திரும்பவும் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்கச் சென்றபோதும் காலையைவிட பெரிய பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இவர்கள் கூட்டத்தின் நடுவே இருந்த போது ஸ்ரீ பெரியவா தன் கரங்களை உயர்த்த சமிக்ஞை செய்து யாரையோ அழைப்பது போலிருந்தது. ஒவ்வொருவராக எழுந்து நிற்க அவர்களை ‘இல்லை’ என்பது போல் கையை அசைத்து இவர்களை மட்டும் காட்டி அருகே வரச் சொன்னார்.
பெரும் தயக்கத்துடன் இவர்கள் வணங்கி நின்றனர்.
ஒரு தியாகச் சுடராக, தபஸ்வியாக இவர்களுக்கு ஸ்ரீ பெரியவா ஒளிமயமான திருமுக மண்டலத் தரிசனத்தை அப்போதுதான் நல்கினார். முன்பு தரிசனம் போலில்லாமல் கண்களை மூடிக் கொள்ளாமல் இம்முறை வலியவே இவர்களை அழைத்து ஸ்ரீ பெரியவா பேசியது ஆறுதல் அளித்தது.
இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்? யார்வீட்டில் தங்கியிருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்ட ஸ்ரீ பெரியவா “காலையில் தோடகாஷ்டகம் சொல்லி நமஸ்கரித்தாளே அப்போ வந்தாயோ?” என்றெல்லாம் கேட்டார்.
தம்பதிகளுக்கு ஸ்ரீ பெரியவாளை சமீபத்தில் இப்படி ஒரு சம்பாஷனை செய்யும் பாக்யம் அடைந்ததிலும் மட்டற்ற மகிழ்ச்சி.
“நீ என்ன பண்ணிண்டு இருக்கே?” என்று ஸ்ரீ பெரியவா இவரைக் கேட்க இவர் நெல்லி குப்பம் சர்க்கரை ஆலையில் குமாஸ்தாவாக வேலை செய்வதைக் கூறினார்.
“அதே ஆலையில் சுப்பு என்கிறவர் சின்னதா சிகை வைச்சுண்டு இருப்பாரே, ரொம்ப சாது, அதிகம் பேசமாட்டார் அவரைத் தெரியுமா?” என்று ஸ்ரீ பெரியவா வினவ, இவர் சுப்பு என்பவர் தன்னுடன்தான் வேலை செய்வதாகக் கூறினார்.
“அவரோட உறவுக்காரர் மணின்னு வீபூதி பூசிண்டு எப்பவும் வேடிக்கையா சிரிச்சி பேசிண்டு இருப்பானே…..அவாத்திலே ஒரு பாட்டி இருக்காளே உனக்குத் தெரியுமா?” என்று ஸ்ரீ பெரியவா கேட்டார்.. இவர்கள் தெரியும் ஆனால் பேசியதில்லை என்றார்கள்.
“அந்த அம்மவுக்கு காது கேட்காது. காது கேட்காதது நல்லது தான்! மத்தவா பேசற அவஸ்மார வார்த்தைகள் காதிலே விழாது. அதுவே பகவத்சிந்தனம் பண்ண சௌகர்யமா இருக்கு……. அந்த அம்மாவுக்கு தெலுங்கு தெரியும்……சமஸ்கிருதம் தெரியும். ஸ்ரீமத் பாகவதம், பகவத் கீதை, ராமாயணம் எல்லாம் தெரியும்……நிறைய பகவத் விஷயங்கள் பேசுவா” என்று அந்த பாட்டியைப் பற்றி ஸ்ரீ பெரியவா விரிவாக பேசியதில் இந்தத் தம்பதிகளுக்கு ஒரு வழிகாட்டுவதாகத் தோன்றியது.
“உனக்குத் தெலுங்கு தெரியுமா?” என்று ஸ்ரீ பெரியவா கேட்க, இவர் “தெரியாது….அடியேன் வைஷ்ணவன்” என்றார்.
“என்ன நீ வைஷ்ணவனா?” ஸ்ரீ பெரியவா!
“ஆமாம்”
திரும்பவும் நீ வைஷ்ணவனா என்று இரண்டுமுறை கேட்டு பிறகு தான் நெல்லிகுப்பம் வருவதைப்பற்றி பேசி இவர்களை அனுப்பினார்.
இப்படி ஒரு தரிசனம் நல்கி, இத்தனை விரிவாக தங்களிடம் ஸ்ரீ பெரியவா பேசியதில் ஆனந்தம் என்றாலும், ஸ்ரீ பெரியவா அதோடு நிறுத்திக் கொண்டு இவர்களுக்குப் பிரசாதம் கூட தராமல் அனுப்பியதில் தம்பதிகளுக்கு வருத்தமேற்பட்டது.
அடுத்தநாள் அலுவலகம் சென்று சுப்பிரமணியன் என்கிற மணி என்றழைப்பவரிடம் ஸ்ரீ பெரியவா கூறியவைகளை ஸ்ரீனிவாசன் கூறினார். உடனே மணி சந்தோஷப்பட்டு அவருடைய அம்மாவைப் பற்றி ஸ்ரீ பெரியவா கூறியதை தன் தாயிடம் சொல்ல அந்த அம்மா அன்று இரவே ஸ்ரீனிவாசனைத் தேட அவர் வீட்டிற்கு வந்து இதைப் பற்றி சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்ந்தாள்.
ஸ்ரீ பெரியவாள் ஒரு சித்த புருஷர் என்பதைத் தன் அனுபவத்தால் தெரிந்து கொண்டதாக அந்த பாட்டி சொன்னாள். பிறகு தினமும் அந்த ‘அம்மா’ இவர்கள் வீட்டிற்கு வந்து ஆத்மவிசாரம் செய்து இவர்களுக்கு ஆத்மபரிபக்குவம் ஏற்படுத்த சத்சங்கமாக இருந்தாள்.
‘லலிதாம்பாள் அம்மாள்’ என்கிற அந்தத் தெலுங்கு பாட்டி காஞ்சி முனிவரை சிறுமியாக இருந்ததிலிருந்து தரிசித்து தன் வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவங்களை தினமும் வந்து பேசுவாள். ஆத்மவிசாரத்தில் ஈடுபட்டு வரும் பக்தர்களை எங்கிருந்தாலும் ஸ்ரீ பெரியவா தன் யோக பலத்தால் ஈர்த்துக் கொள்வார் என்பார். பாட்டி தன் அறுபது வருட அனுபவங்களை எழுதி வைக்க சாத்யமில்லை. இருந்தாலும் அந்த ரகசியங்களை இவர்களிடம் தடங்கல் இல்லாமல் சொல்ல நேர்ந்ததே ஸ்ரீ பெரியவாளின் அனுக்ரஹத்தால் தான் என்று பாட்டி சொல்வாள்.
“ஸ்ரீ பெரியவா பிரசாதம் கொடுக்காததற்கு என்ன காரணம் என்பது மட்டும் புரியவில்லையே” என்று பாட்டியிடம் இவர் கேட்டார்.
பாட்டியும் “எனக்கும் புரியவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை போகப்போறேளே என்ன நடக்கிறதென்றுப் பார்க்கலாம்” என்று சமாதானம் கூறினார்.
அவ்வாறே ஞாயிற்றுக்கிழமை விழுப்புரம் சென்று ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்த போதும் இவர்களைக் கூர்ந்து கவனித்துவிட்டு பிரசாதம் கொடுக்கவில்லை. இடையிடையே இவர்கள் பலமுறை ஸ்ரீ பெரியவாளிடம் போய் நின்றும் சலனமே இல்லாமல் இவர்களை நோக்கியதோடு சரி பிரசாதம் கொடுக்கவில்லை.
அதன்பின் ஸ்ரீ பெரியவா கடலூரில் மஞ்சகுப்பம் என்ற இடத்தில் கேம்ப் வந்தபோது ஒருவாரம் காலையிலும், மாலையிலும் ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்தனர்.
ஸ்ரீ பெரியவாளோ மற்றவர்களுக்கு குங்குமபிரசாதம் கொடுக்கும் போது இவர்களுக்கு மட்டும் அதைத் தராமலேயே தினமும் தரிசனம் நல்கினார்.
ஒருவாரம் கழித்து ஸ்ரீ பெரியவா நெல்லிகுப்பமே வந்தருள, மூன்று நாட்கள் லீவு எடுத்துக் கொண்டு மடத்திலேயே தங்கி தரிசித்த சமயங்களிலும் இவர்களுக்கும் மட்டும் ஸ்ரீ பெரியவா குங்குமபிரசாதம் கொடுக்காமல் ஏனோ சோதித்தார்.
இதை லலிதாம்பாள் பாட்டியிடம் இவர் வேதனைப்பட்டு சொன்னார்.
ஸ்ரீ பெரியவா அந்த பாட்டியின் வீட்டிற்கே விஜயம் செய்த போது அந்த பாட்டி நமஸ்கரித்து அருகில் நின்றவர்களை “ஸ்ரீனிவாசன் – ஆண்டாள் தம்பதிகள் ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க வந்திருக்கா’ என்று சொல்லியும் ஸ்ரீ பெரியவா மௌனமாகவே சிறிது நேரம் கண்மூடி இருந்து விட்டுப் பிரசாதம் தராமல் எழுந்து மேனாவில் போய் அமர்ந்து புறப்பட்டுவிட்டார். இவர் பித்தனைப் போல் மேனாவை தொடர்ந்து ஓடினார். ஊர் எல்லையில் ஸ்ரீ பெரியவா மேனாவை நிறுத்தி புன்னகை செய்து கையை உயர்த்தி ஆசிகூறிவிட்டு மேனாவை மூடிக் கொண்டு புறப்படலானார்.
ஸ்ரீ பெரியவா லீலைகளைப் புரிந்து கொள்ளமுடியவில்லையே, இனி எப்போது ஸ்ரீ பெரியவாளைத் தரிசிக்க முடியுமோ என்று இவர் தாபப்பட்டார்.
பாட்டி ஒருநாள் இரவு இவர் வீட்டிற்கு வந்து ‘ஸ்ரீனிவாசா! எனக்கு ஒன்றுத் தோன்றுகிறது. நீ சிகை (குடுமி) வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ பெரியவா நினைக்கிறார். அதனால் நீ சிகையுடன் சென்று அவரை வந்தனம் செய்தால் உடனே பிரசாதம் கொடுப்பார்னு தோன்றது” என்றாள்.
உடனே இவர் சிகையில்லாத பல பக்தர்களுக்கு ஸ்ரீ பெரியவா பிரசாதம் கொடுத்தாரே அது ஏன் என்றார்.
“ஸ்ரீ பெரியவா உன்னை விசேஷ பக்தராகக் காண்கிறார். ஆத்ம பாக்யம் கிடைக்க தவிக்கும் ஜீவனாக உன்னைப் பார்க்கிறார். அதற்கு சாஸ்த்ரோத்தமாக சிகை அவசியம்னு அவர் நினைக்கிறார்” என்று பாட்டி சொல்ல இவரும் உடனே சிகை வைத்துக் கொள்ள மனம் கொண்டார்.
“நீங்கள் திருப்பதி மலைக்குப் போங்கள். அங்கேயே சிகை வைத்துக் கொண்டு காளஹஸ்திக்கு வந்து ஸ்ரீ பெரியவாளை தரிசியுங்கள்” என்று அந்த பாட்டி உபதேசமாகக் கூறினாள்.
உடனே திருமலைக்குச் சென்று அங்கே சிகை வைத்துக் கொண்டார். அப்போதே ஒரு அதிசயம் ஏற்பட்டது. இவர் சிகை வைத்து, புஷ்கரணியில் நீராடி, திருமண் அணிந்து பஞ்சகச்சத்துடன் ராஜகோபுரம் அருகில் வந்தபோது ஜீயர் சுவாமிகள் தன் பரிவாரங்களுடன் கோயில் வாயிலுக்குள் நுழைய, சாஸ்த்ரோத்தமாக நின்ற இவரையும் அழைத்து நேரே வேங்கடேச பெருமாளைத் தரிசிக்க தம்பதிகளை அழைத்துச் சென்றார். வரிசையில் காத்திருக்காமல் இப்படி ஒரு திவ்ய தரிசனம் கிடைத்த ஆனந்தத்தோடு காளஹஸ்திக்குப் புறப்பட்டனர்.
அங்கே கண்ணப்பர் மலை அடிவாரத்தில் பசுமடத்தில் அருளிக் கொண்டிருந்தார் ஸ்ரீ பெரியவா.
“உள்ளே ரெண்டு பேரும் வாங்கோ! இந்த பக்கம் பார்த்து நமஸ்காரம் பண்ணுங்கோ!” என்பது போல் ஸ்ரீ பெரியவா சைகைக் காட்ட இவர்களும் நமஸ்கரித்தனர். எதிரில் சிறிய மர முக்காலியின் மேல் மரத்தட்டில் திராட்சை, குங்குமம், மந்திர அட்சதை மூன்றையும் வைத்துத் தன் கரங்களால் தொட்டு புன்முறுவலோடு ஸ்ரீ பெரியவா எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
‘இப்பத்தான் ஸ்ரீ வைஷ்ணவனா ஆயிருக்க. அம்மாதானே உங்களுக்கு ஜீவநாடி” என்று தான் ஒரு சர்வக்ஞன், சர்வவியாபி என்பதை உணர்த்தி அருளினார். தம்பதிகள் தங்களுக்குக் கிட்டிய பெரும்பாக்யத்தால் ஆனந்தமுற்றனர். ஒரு உண்மையான பக்தனை புடம் போடத்தான் இத்தனை நாளும் ஸ்ரீ பெரியவா திருவிளையாடல் புரிந்ததைக் காட்டினார்.
இப்பேற்பட்ட அனுக்ரஹதெய்வம் எல்லா சோதனைகளிலிருந்தும் நம்மைக் காப்பாற்றி, சகல ஐஸ்வர்யங்களையும், மங்களங்களையும் அள்ளித்தரக் காத்து நிற்கிறதென்பது சத்தியமே.
– கருணை தொடர்ந்து பெருகும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
________________________________________________________________________________
Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (25-11-2011)
“You are a Vaishnava now”
Shri Mahaperiyava, who is the avatar of Shri Adi Shankara, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.
There are multiple incidents where we have seen Periyava with His penance powers, has picked the right devotee and elevated their life in all respects. The couple Shri P. Srinivasan – Andal are one of those devotees. They have explained their experience in the book Periyava’s Darisana Anubavangal.
One day Shri Srinivasan had a dream where Periyava appeared and blessed him. Srinivasan had not previously had darshan of Periyava. Srinivasan, who was a Vaishnavaite, had seen Periyava only in a picture.
Srinivasan bowed and prayed to Periyava. He felt Periyava watching him with keen and eager eyes. As Srinivasan felt happiness throughout his body, he woke up. Srinivasan did not know who the Mahan was. He only knew that it was an Adwaitha Sanyasi.
Srinivasan thought that Periyava might have come in the dreams to help him with some self-realization. With the help of one of his friends, he found that Periyava was camping near Panruti and went there with his wife for Periyava’s darshan.
There were lots of devotees waiting for Periyava’s darshan. Srinivasan and his wife joined the line and waited. When they reached near Periyava, He closed His eyes to meditate. As they passed, and the devotees behind them came near Periyava, Periyava opened His eyes and started to converse with them. So the couple again joined the line to get a chance to converse with Periyava. Again this time when their turn came, Periyava started to meditate and as they moved and the devotees standing behind them came forward, Periyava started to talk to them.
The same thing happened for a third time. Since it was Shivarathiri that day, Pooja were planned. Srinivasan had planned to leave the following morning. When Srinivasan discussed what had happened the previous night, his friend was surprised and said that Periyava usually speaks to everyone and blesses them.
When they were living in Nellikuppam, a neighbor maami used to pray to Kamakshi by lamp lighting. Even though Srinivasan was not a believer, one day the Maami had come to their home voluntarily to pray to Kamakshi. Once the prayer was over, she said to Srinivasan, “You are in search of a guru. You will meet a Mahan on the banks of a river or pond or in a temple and He will perform a manthra upadesham.”
Just like how Kamakshi had predicted, Srinivasan had Periyava’s darshan and conversation happened at Villupuram. The Sankara Jayanthi celebration was happening at Hanuman Temple Street, the same street that has Periyava’s birth home.
There were a large number of devotees waiting for Periyava’s darshan that morning. Srinivasan’s wife wanted to perform “Muthu Arthi” to Periyava. She had brought a brass plate with kum kum for this purpose. Srinivasan was asking her how she can perform the Arthi when there were so many devotees waiting for darshan.
But by Periyava’s grace, they were asked to move forward, and once Thotakashtakam was sung and Periyava climbed the stage, Srinivasan’s wife had the opportunity to show Arthi.
In the evening, the crowd for darshan was lot more than what it was in the morning. When they were standing in the middle of the crowd, Periyava called them to come to the front. They went forward with hesitation. This time, Periyava talked to them, unlike the first time, when He had gone into meditation mode. The couple were very happy to be called and conversed.
Periyava asked them about their native village, where they were staying and then asked Andal, “Did you come when they were singing Thotakashtakam?” The couple were very happy at the conversation that had happened with Periyava.
Periyava asked Srinivasan about his job and he said that he was working as a clerk in the Nellikuppam Sugar factory.
Periyava asked, “Do you know Subbu, who works there? He had Sikhai and also talks very less.” Srinivasan replied that Subbu also worked in the same department as his.
Periyava continued, “There is a relative of Subbu called Mani, who has Vibuthi on his forehead and talks funny. There used to be an old lady in his house. Do you know her?” They answered that they know her, but had never talked to her before.
“The old lady cannot hear. That is good in a way. She does not need to hear all the unnecessary things that are spoken around her. That helps her in focusing on God and chanting God’s name. She know Shrimad Bhagavatham, Bhagavat Gita and Ramayana. She talks a lot about God.” Periyava spoke highly of the old lady.
Periyava then asked, “Do you know telugu?”
Srinivasan replied, “No. I am a Vaishnavan.”
Periyava asked in a surprised tone, “Are you Vaishnavan?” and Srinivasan replied, “Yes”.
Periyava confirmed again if Srinivasan was Vaishnava and then informed them about His trip to Nellikuppam.
Even though they had a long conversation with Periyava, they were disappointed because, Periyava sent them without giving them prasadam.
Next day, Srinivasan talked to Subramanian alias Mani about their conversation with Periyava. Mani was happy to know that Periyava talked highly about his mother and informed her the same, when he went back home. When his mother heard the story, her happiness knew no bounds and she immediately met Srinivasan and heard what Periyava had informed them about her.
She had told the couple about how Periyava is truly a Siddha Purushar. She used to visit their house often and then stood as a guiding light to their family.
“Lalithambal Ammal” was the name of Mani’s mother. She was lucky enough to have darshan of Periyava right from her childhood. She used to tell the Srinivasan family about her 60 years of experience with Periyava. Even though she was unable to write all of those blessed and splendid events, Periyava had helped her in sharing her story with this couple.
Prasad asked her, “Why did Periyava not give us the prasadam?”
She also did not know what might have happened. She said that she will be going for Periyava’s darshan the following Sunday and was hoping that her question will be answered.
Sunday came and she went to Periyava’s camp at Villupuram. Surprisingly on that day, she also did not receive prasadam from Periyava.
After that, when Periyava was camping at Manjakuppam near Cuddalore, Periyava again did not give them the prasadam. He had given it to the other devotees, but had explicitly avoided giving it to them.
When Periyava’s camp moved to Nellikuppam, Srinivasan took off from his work for three days and stayed at the camp for darshan. Even during those times, Periyava did not give them the prasadam. They again discussed this with Lalithambal.
When Periyava visited the home of Lalithambal, Srinivasan – Andal couple were there for Periyava’s darshan. Even after Lalithambal introduced them, Periyava was silent and in some time, boarded the Mena and left the house. Srinivasan followed the Mena until the town border. When they reached the border, Periyava opened the Mena, raised His arms to bless them and continued on His journey.
Srinivasan was unable to understand the actions of Periyava and was wondering when he will be blessed again to have His darshan.
One night, Lalithambal came to Srinivasan’s house and said, “I think Periyava want to see you with Sikhai. Why don’t you go for His darshan with Sikhai and He will definitely bless you with prasadam this time.”
Srinivasan was not satisfied and asked why Periyava gave prasadam to other devotees without Sikhai, but not to him.
“Periyava is seeing you as a special devotee. He sees you as a person who wants to move to the next level and He thinks that that is possible with you having Sikhai. Go to Tirupathi to get your Sikhai and then go to Kalahasthi for Periyava’s darshan.” Lalithambal paati clarified.
Srinivasan left for Tirupathi- Tirumala immediately. After keeping Sikhai, he bathed in the Pushkarini pond, and with Vibuthi on his forehead and wearing a panchakacham, he walked towards the temple. Near the temple entrance, Srinivasan saw Jeeyar Swamigal, and was surprised when Swamigal took the couple directly inside the temple skipping all the long queues. With the happiness of completing Perumal darshan, they left to Kalahasthi.
Periyava was camping at the goshala near Kanappar hills. On seeing them, Periyava called them inside and asked them to Prostrate. After they prostrated, Periyava with a smile, touched the wooden plate with raisins, kum kum and akshathai and then asked them to take it.
Periyava said, “You have become a Vaishanavan now only. Did amma tell you? Is she not everything for you?” The couple were very happy to receive the prasadam from Periyava. They now understood the reason for Periyava’s actions all this time.
Let us all pray to Periyava to free us from all the hardships and bless us with happiness and peace.
Grace will continue to grow.
(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)
Categories: Devotee Experiences
I wonder if I would pass this test. He didn’t give up inspire of many visits to Periyava. I wonder if I would have kept visiting Periyava