Periyava Golden Quotes-750


இந்த ஸநாதன தர்ம மார்க்கத்தை, ஆசார அநுஷ்டானப் பாதையைப் போட்டவர் யார்? பேர் சொல்லத் தெரியாது. குறிப்பாக யாரையும் காட்ட முடியாது. ஆனால் பாதை மட்டும் இருப்பது தெரிகிறது. இதனால்தான் நான் ஹிந்து தர்மத்தை, “ஒற்றையடிப் பாதை” என்று சொல்வது*. ஒற்றையடிப்பாதை பிரத்யக்ஷமாகத் தெரிகிறது. ஆனால் யார் போட்டார் என்று கேட்டால் சொல்லத் தெரியுமா? தார் ரோடு, கப்பி ரோடுக்கெல்லாம் சொல்லலாம். இந்த கவுன்சிலர் திட்டம் போட்டார்; இந்தக் கமிஷனர் ஸாங்க்ஷன் பண்ணினார்; இந்தக் கான்ட்ராக்டர் வேலை எடுத்துக் கொண்டார்; இந்தத் இந்தத் தொழிலாளிகள் வேலை செய்தார்கள் என்று மற்ற ரோட்களுக்கெல்லாம் காரணமான ஆளைக் காட்டலாம். ஒற்றையடிப்பாதைக்கு மட்டும் முடியாது. அது ‘ப்ளான்’ பண்ணி, ‘மெஷர்மென்ட்’ பார்த்து, சம்பளம் கொடுத்துப் போட்டதல்ல. யார் என்று குறிப்பாகச் சொல்லத் தெரியாமல் அநேக ஜனங்கள் நடந்து நடந்தே உண்டானது அது. ரோட் போட்ட பிறகு அதில் ஜனங்கள் நடக்கிறார்களென்றால் இதுவோ ஜனங்கள் நடந்ததாலேயே ஏற்பட்ட பாதை! புஸ்தக ரூலால் ஏற்படுத்தும் வாழ்க்கை முறை இல்லை; வாழ்க்கை முறையால் ஏற்பட்ட புஸ்தக ரூல்! . – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Who laid the path of Sanatana Dharma and the Aachara anushtanams? No name can be specified. No single person can be pointed out. But the path is obviously there. This is why I call the Hindu Dharma as a ‘Otraiyadippadhai’ – a ‘mud track’ [a ‘mud track’ is formed when people constantly keep walking on that path]. The mud track is seen clearly. But can we say who laid it? For other types of roads we can specify as to which Councilor did the planning, which Commissioner sanctioned it, which Contractor executed it, and which workers did the job. Not so for a mud track. It is not made by ‘planning, ‘measurements’ or by paying wages. It is made by many unidentified people constantly walking on it. People can walk on a road only after its construction; but a mud track is constructed by people walking on it! It is not a lifestyle based on rules written in the book; it is a rule book based on lifestyle! – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: