Periyava Golden Quotes-749


“ஸநாதன தர்மம்” என்ற வார்த்தைக்கு முற்றிலும் பொருத்தமாக, புஸ்தகங்கள் தோன்றுகிறதற்கு முன்பே நம்முடைய தர்மாசார வாழ்க்கை தோன்றிவிட்டது! முதல் முதலில் யார் இப்படி பஞ்ச கச்சத்தை ஏற்படுத்தினது? நெற்றிக்கு இப்படி இப்படி இட்டுக் கொள்ள வேண்டும் என்று ‘இனாகுரேட்’ பண்ணினது யார்? எந்தக் காரியமானாலும் ஆசமனம் பண்ணுவதற்கு, நெற்றியில் குட்டிக் கொள்வதற்கு ‘ஆரம்ப விழா’ என்று என்றைக்காவது யாராவது செய்தார்களா? ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஆதிக்கும் ஆதிக்கும் ஆதியிலிருந்தே இப்படியெல்லாம் பண்ணியிருக்கிறார்கள். இந்த லோகத்தையெல்லாம் ஸ்ருஷ்டித்திருக்கிற ஒரு மஹா சக்தியை எப்போதும் தொட்டுக் கொண்டவர்களாக அந்த ஆதி புருஷர்கள் இருந்ததால், இந்த லோக வாழ்க்கைக்கு எது நல்லது, இதற்கும் நல்லதாக இருந்து கொண்டே இதிலிருந்து விடுவித்து நித்யானந்தத்தில் சேர்க்கக் கூடியதாக உள்ளது எது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டு, அப்படியே வாழ்ந்து காட்டியதுதான் நம்முடைய தர்மங்களாகவும், நீதிகளாகவும், ஆசாரங்களாகவும், அநுஷ்டானங்களாகவும் ஆகி சாஸ்திரங்களில் கூறப்பட்டிருக்கின்றன.  – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

In keeping with the name ‘Sanatana Dharma’, our practice of dharma and Aachara have been in force much before the books arrived. Who first stated how the panchakaccham should be worn? Who ‘inaugurated’ the procedure of how a tilak should be applied on the forehead? Did someone have an ‘opening ceremony’ for the process of Aachamanam and the action of knocking on the head for Shuklaambaradharam? Nothing is known. These have been in practice since ancient of ancient times. Those ancient people lived in constant touch with the great power that created this universe. So they were aware of what was good for life, what would take us towards eternal joy, etc. and lived their lives accordingly. These living practices have been listed in our sastras as dharmas, law codes, aacharams, and anushtanams. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: