Periyava Golden Quotes-746

விடிய ஐந்து நாழிகைக்கு முன்னாலே எழுந்து, ஸ்நானம் பண்ணி அருணோதய காலத்தில் அர்க்யம் கொடுத்து, ஸூர்யோதயம் வரை காயத்ரீ ஜபம் செய்து, அதன்பின் ஒளபாஸனம், பூஜை, மாத்யான்ஹிகம், வைச்வதேவம், அதிதி ஸத்காரம் பண்ணி ஸாத்விகமான ஆஹாரத்தைச் சாப்பிட்டு, இப்படியே ஸாயங்காலமும் ஸ்நானம் செய்து ஸந்தியா வந்தன அர்க்யம் ஸூரியன் மேலைவாயில் விழும் போது கொடுத்து அப்புறம் நக்ஷத்ரம் தெரிகிறவரை காயத்ரீ பண்ணி, அக்னி ஹோத்ரம், தேவாலய தர்சனம் அல்லது ஸத்கதா சிரவணம் எல்லாம் செய்தால் எப்படி வாழ்க்கையிலேயே ஒரு நிறைவு இருக்கிறது; இப்போது அழுக்குப் பிடித்து அழுமூஞ்சியாயிருப்பது போய் எத்தனை சுசி ருசியுடன் ப்ரஸன்னமாயிருக்க முடிகிறது — என்று தெரியும். வேண்டாத காரியங்களைப் பண்ணி அலுத்து அப்படியும் அதில் குறையே இருப்பதால் நிம்மதியாகத் தூங்கக்கூட இல்லாமல் துஸ்-ஸ்வப்னம் கண்டுகொண்டு, ஏழு எட்டு மணிவரை எழுந்திருக்க முடியாமல் படுத்துக் கொண்டிருப்பது என்றில்லாமல் வேண்டிய கர்மாக்களையே பண்ணுவதால் தெளிவோடும் திருப்தியோடும் ஸுகமாக நித்ரை செய்து, மறுநாள் பஞ்ச பஞ்ச உஷத்காலத்திலேயே பளிச்சென்று எழுந்திருந்து அன்றைய ‘ரொடீனை’ச் சுருசுருப்பாகக் கவனிக்க முடிகிறது என்று தெரியும்.* ஆத்மாவும் நிறைந்து, ஆரோக்ய த்ருடகாத்ரமும் பெற்று சாந்தியாக ஸந்துஷ்டியாக நம் பூர்விகர்கள் வாழ்ந்து இந்த ஆசார அநுஷ்டான பலத்தால்தான். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Waking up early in the morning, having a bath, offering arghyam before sunrise, performing Gayatri till sunrise, thereafter performing Oupasanam, followed by puja, madhyanhikam, vaiswadevam, atithi sathkaram, having sathvik food, later having a bath in the evening, offering arghyam before sunset, performing Gayatri till the stars are visible, performing agnihotram, visiting temples or listening to pravachanams – these give fulfillment in life. We will find our dirty dull look giving way to a clean, bright appearance. Doing things that are not necessary, getting tired of doing them, developing faults in doing them, spending sleepless nights bogged by bad dreams, being unable to wake up till seven or eight in the morning, etc. take us nowhere. Doing karmas that are essential helps one develop a clear intellect and satisfaction. It gives good sleep, helps one wake up early the next morning and continue with the daily routine enthusiastically. Our elders lived with self satisfaction, good health, peace, and prosperity only on the strength of the practice of aacharams. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

2 replies

  1. ” விடிய ஐந்து நாழிகைக்கு முன்னாலே எழுந்து, ” இதற்க்கு சமமான மணி என்று யாராவது கூற முடியுமா? சுமார் அதிகாலை நாலு மணி என்பது சரியாக இருக்குமா? நன்றி

    • one naligai = 24 minutes, so you can multiply 5*24= 120 minutes, so 2 hours before sunrise. To know sunrise time details kindly get from panchangam.

      rama rama
      mahaperiyava pada charanam

Leave a Reply

%d bloggers like this: